Published:Updated:

சந்தானத்தை தொடரும் மராத்தி நடிகை சென்டிமென்ட்!

Vikatan Correspondent
சந்தானத்தை தொடரும் மராத்தி நடிகை சென்டிமென்ட்!
சந்தானத்தை தொடரும் மராத்தி நடிகை சென்டிமென்ட்!
சந்தானத்தை தொடரும் மராத்தி நடிகை சென்டிமென்ட்!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் திரைப்படமான “நெஞ்சம் மறப்பதில்லை” ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. அதனால் தன்னுடைய அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் செல்வா. 

சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. நாயகியாக  ரெஜினா அல்லது சாய்பல்லவி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகிவந்த நிலையில், மராத்தி நடிகையான அதிதி பொஹன்கர் (Aaditi pohankar) தான் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இவர் அதர்வாவுடன் “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” படத்தில் நடித்திருக்கிறார். செல்வா - சந்தானம் கூட்டணியில் ரொமாண்டிக் காமெடியாக இப்படம் உருவாகிறது. சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்” மற்றும் “சக்கப்போடு போடு ராஜா” இவ்விரு படங்களுக்கும் நாயகியான வைபவி ஷாந்தலியாவும் மராத்தி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.