Published:Updated:

சூப்பர் ஹீரோக்களை முந்திய சூப்பர் வில்லன்கள்!

Vikatan Correspondent
சூப்பர் ஹீரோக்களை முந்திய சூப்பர் வில்லன்கள்!
சூப்பர் ஹீரோக்களை முந்திய சூப்பர் வில்லன்கள்!

திரைப்படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமான ஐ.எம்.டி.பி. ஆண்டுதோறும் சிறந்த படங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. 2016-ம் ஆண்டுக்கான 'டாப்-10' பட்டியலில் 'சூசைட் ஸ்குவாட்' படம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

சூப்பர் வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்கும் இடையேயான சண்டைதான் இப்படத்தின் கதைக்களம். இந்த ஆண்டு வெளியான 'பேட்மேன் Vs. சூப்பர்மேன்', 'கேப்டன் அமெரிக்கா' போன்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்களைப் பின்னுக்குத்தள்ளி இப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் 745 மில்லியன் டாலர்களை இத்திரைப்படம் வசூல் செய்துள்ளது.

IMDB தளத்தில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த திரைப்படங்கள் மட்டும் இந்த தரவரிசைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் அதிக ரேட்டிங், வசூல் போன்றவற்றின் அடிப்படையில் 'டாப்-10' ஹாலிவுட் பட பட்டியல் வெளியாகியுள்ளது.

டாப்-10 பட்டியல்:
1. சூசைட் ஸ்குவாட் (Suicide Squad)
2. கேப்டன் அமெரிக்கா : சிவில் வார் (Captain America: Civil War)
3. பேட்மேன் Vs. சூப்பர்மேன் : டான் ஆப் ஜஸ்டிஸ் (Batman v Superman: Dawn of Justice)
4. டெட்பூல் (Deadpool)
5. எக்ஸ்-மென் : அபோகலிப்ஸ் (X-Men: Apocalypse)
6. தி ஜங்கிள் புக் (The Jungle Book)
7. தி மெக்னிஃபெசன்ட் செவன் (The Magnificent Seven)
8. கோஸ்ட்பஸ்டர்ஸ் (Ghostbusters)
9. வார் க்ராஃப்ட் (Warcraft)
10. த லெஜண்ட் ஆஃப் டார்ஜான் (The Legend of Tarzan)