வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (23/12/2016)

கடைசி தொடர்பு:11:45 (24/12/2016)

மாஸ் சீன்களை எல்லாம் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம தமாஷா இருக்கும் போல

தமிழ் சினிமாவுல தெறிக்கவிட்ட சில சீன்களை பேக்ரவுண்ட் மியூஸிக் இல்லாம பார்த்தீங்கனா அதுக்குப் பிறகு அதைப் பார்க்கவே மாட்டீங்க. சில சீன்ஸ் காமெடியா இருக்கும். சில சீன்ஸ் என்ன சொல்லுதுனே தெரியாம ஙே னு இருக்கும். அப்படி சில சீன்ஸ்தான் இதெல்லாம்!

து 'மங்காத்தா' படத்துல அஜித் என்ட்ரி ஆகிற மாஸ் சீன். தியேட்டரையே கதறவிட்ட சீன்கள்ல இதுவும் ஒண்ணு. ஆனா பின்னணி இசை மட்டும் இல்லாம இதைப் பார்த்தீங்கனா 'ஆம்பள' படத்துல டாட்டா சுமோவுல அந்தரத்துல பறந்துவந்து கலாய் மீம்களைக் கணக்கே இல்லாம வாங்கின அந்த விஷால் நடிச்ச சீன் மாதிரியே இருக்கும்.

து 'போக்கிரி' படத்துல யாரு சத்தியமூர்த்தி ஐ.பி.எஸ்.னு ஊரே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது ரெளடியாகக் காட்டப்பட்ட விஜய்தான் அதுனு கன்ஃபார்ம் ஆகிற சீன். போலீஸ் கெட்டப் இல்லாம ரெளடி கெட்டப்லேயே என்ட்ரி ஆனாலும் அந்த சீன்ல வர்ற பின்னணி இசை போலீஸுக்கான கெத்தை கண் முன்னாடி கொண்டு வந்திருப்பாங்க. அது மட்டும் இல்லாம சும்மா ஓடி வந்திருந்தா அதே `தமிழ்' ரெளடிதான் ஞாபகத்துக்கு வந்திருப்பார்.

 

ப்பதான் இவரு போதிதர்மனா மாறுறார்னு நம்மளுக்கு மட்டுமில்ல; ஸ்ருதிக்கே தெரியாத நிலைமையில் திடீர்னு எங்கிருந்தோ ஒரு பின்னணி இசை வரும். அதைக் கேட்டபிறகுதான் ஓஹ்... அவரு மாறிட்டார் போலனு நாமளா ஒரு முடிவுக்கு வருவோம். மியூஸிக் இல்லாம கேட்டா எப்பதான் இவரு போதிதர்மனா மாறுவாருனு காத்திருந்து காத்திருந்து படமே முடிஞ்சிருந்திருக்கும்.

இதை என்னன்னு சொல்றது ஏதுன்னு சொல்றது. பின்னணி இசை இல்லாம கேட்டா ஏதோ கேசட்டை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு பண்ணின மாதிரி வேகமா ஓடிக்கிட்டு இருக்கும். சும்மாவே கமல் படம் புரியலைனு சொல்றவங்களுக்கு இப்போ என்ன நடக்குதுனே ஏது நடக்குதுனே புரிஞ்சிருக்காது.

னுஷ் சட்டையை கழட்டுறதைப் பாக்கவே தனி தில் வேணும். அதுல சண்டை வேற போட்டா? ஆனா 'படிக்காதவன்' படத்துல வர்ற இந்த சீன்ல பேக்ரவுண்ட் மியூஸிக்கை வெச்சு அதை செமையா மேனேஜ் பண்ணிருப்பாங்க. சும்மா மட்டும் பார்த்துடாதீங்க.

து அல்டிமேட்டான  'சூதுகவ்வும்' பட காட்சி. பேக்ரவுண்ட் மியூஸிக்கைக் கேட்டாலே கதறும். ஆனா மியூட் பண்ணிட்டு இந்த சீனைப் பார்த்தீங்கனா பழைய ஐநூறு, ஆயிரம் நோட்டைக் கையில் மை வெச்சிட்டு புது நோட்டு வாங்கிட்டுப் போற ஏதோ ஒரு அங்கிளை பார்த்த மாதிரிதான் இருக்கும்.

பாலியைச் சொல்லவா வேணும். மரண மாஸான ரஜினியோட என்ட்ரி சீன் இது. டீஸர்ல இருந்தே ரசிகர்களை ரொம்பரொம்ப ரசிக்க வச்சது. ஆனா சத்தமில்லாம வாட்ச் பண்ணீங்கனா வடிவேலு நடிச்ச வேற ஒரு சீன் உங்க ஞாபகத்துக்கு வரும். கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆங், அந்த தீப்பொறி திருமுகம் என்ட்ரியேதான். இதே மாதிரிதான் ஸ்லோமோஷன்ல நடந்து வருவாரு. ஆனா பாருங்க இந்த பேக்ரவுண்ட் மியூஸிக் அப்படியே தலைகீழாக மாஸ் சீனாக மாத்திப்போட்டுடுச்சு.

 

- ஜெ.வி.பிரவீன்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்