Published:Updated:

இந்த ஆண்டு சினிமாக்களின் மாஸ் சீன்கள்.. ஒரு க்விக் லுக்! #2016Rewind

இந்த ஆண்டு சினிமாக்களின் மாஸ் சீன்கள்.. ஒரு க்விக் லுக்! #2016Rewind
இந்த ஆண்டு சினிமாக்களின் மாஸ் சீன்கள்.. ஒரு க்விக் லுக்! #2016Rewind

சிலருக்கு ரொமேன்டிக் சீன்ஸ் பிடிக்கும் இன்னும் சிலருக்கு காமெடி காட்சிகள் பிடிக்கும். ஆனால் மாஸ் சீன்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். திரைப்படங்களில் வரும் மாஸ் சீன்களுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2016ல் வெளிவந்த படங்களிலிருந்து செம்ம மாஸ் சீன்களின் ஹிட் ஹாட் கலெக்ஷன்களின் தொகுப்பு இது.

கபாலி :

"நான் முன்னுக்கு வர்றது தான் உனக்கு பிரச்சனைன்னா நான் முன்னுக்கு வருவேன்டா, கோட் போடுவேன்டா, கால் மேல கால் போடுவேன் டா. ஸ்டையிலா கெத்தா."என சூப்பர் ஸ்டார் சொல்லும் அந்த ஸீன் 'நெருப்பு'டா. அந்த படத்துல தலைவர் வர்ற எல்லா சீனுமே மாஸ் தான பாஸ்.     

24 :

சூர்யா செய்து கொண்டு வந்த புதிய டைம் மெஷின் வாட்சை வாங்கிக் கொண்டு " அப்பாவா.., ஆத்ரேயா டா" என வில்லன் சூர்யா பன்ச் பேச. "ஐ எம் அ வாட்ச் மெக்கானிக். எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். நீ சேதுராமன் அண்ணன்னா, நான் சேதுராமன் புள்ளடா. வாட்சை செய்றவன், அது சரியா வேலை செய்யுதான்னு பார்க்க மாட்டானா..1?" அந்த சர்ச் ஸீன் வேற லெவல்.

அச்சம் என்பது மடமையடா : 

"டேய் ஹீரோ புரியலையா, வேற யாராவது நல்ல போலீஸ்காரன் வந்தான்னா டவுட் வரக்கூடாதுல்ல. இதுல நல்லா உன் கைரேகை விழற மாதிரி பிடி." என துப்பாக்கியை நீட்டும் வில்லனிடம் வேணாம் வேணாம் என மறுத்து விட்டு கடைசியில் " எனக்கு இந்த கன் வேணாம், ஏன்னா என்கிட்டயும் கன்னு இருக்குடா." எல்லோரையும் விரட்டுற ஸீன்ல செம மாஸ்.  

ரெமோ : 

கீர்த்தி சுரேஷை பிரபோஸ் செய்ய செல்லும் ஸீன். எஸ் கே, ரெஜினா மோட்வானியாக மாறி படியில் இறங்கி வரும் சீனில் சதிஷ் மட்டுமல்ல எல்லோருமே சிவ கார்த்திகேயனை சைட் அடித்திருப்போம்.    

காஷ்மோரா :

எல்லா படத்துலயும் படத்துக்கு இடையில தான் மாஸ் சீன் வரும். ஆனா காஷ்மோராவில் அந்த ஃப்ளாஷ்பேக்கின் க்ளைமாக்ஸ் சீனே செம்ம மாஸா இருக்கும். மொட்டை தலை ராஜ்நாயக் ரத்னமகாதேவியை கொல்ல வேல் கம்பை வீசும் அதே நேரத்தில் அவரும் வாளை வீசுவார். ரத்னமகாதேவியின் பணிப்பெண்கள் அவருக்கும் முன் பாய்ந்து அவரை காத்துவிடுவார்கள் ஆனால் ராஜ்நாயக்கின் தலை துண்டிக்கப்பட்டிருக்கும். ஆனாலும் ராஜ்நாயக்கின் சாமர்த்தியம் பெரிய டிவிஸ்ட்.    

கொடி :

அரசியல்வாதி தனுஷ் கதாபாத்திரம் கொல்லப்பட்டதும் தம்பி தனுஷ் திரிஷாவை வரவேற்க அவரும் அந்த சீன் செம்ம மாஸ். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அந்த காட்சியை இன்னும் மெருகேற்றி இருக்கும்.  

தெறி :

"யாரு, யாரா இருக்கும்?. அவன் யாரா இருந்தாலும் சரி. அவனுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனையை நான் கொடுத்தாகணும்." என மகேந்திரன் சொல்லிக்கொண்டிருக்க...

"அது யாரா வேணா இருக்கலாம் சார், பப்ளிக்கா இருக்கலாம், இதோ இந்த பிரஸ் பீப்பிளா இருக்கலாம். இல்ல அந்த பொண்ணோட அம்மாவா இருக்கலாம், அப்பாவா இருக்கலாம், அண்ணனா இருக்கலாம் அந்த அண்ணன்.. ஒரு போலீஸ் ஆபிஸரா இருக்கலாம். அவரு பேரு ஐபிஎஸ் விஜய் குமாரா கூட இருக்கலாம்." என விஜய் சொல்லும் ஸீன் 'தெறி' ஆக இருக்கும். 

இருமுகன் :

கூட்டம் சுற்றிலும் நின்று கத்திக்கொண்டிருக்க குடுமி, தாடியெல்லாம் வைத்துக் கொண்டு வரும் விக்ரமின் என்ட்ரி தாறுமாறாக இருக்கும். 

சேதுபதி :

மாஸ் சீன்னா அதுல ஹீரோ மட்டும் தான் இருக்கணுமா என்ன?. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி வெளியே சென்று இருக்கும் பொழுது வில்லன்கள் வீட்டை சுற்றி வளைத்து மிரட்டி கொண்டிருப்பார்கள். சேதுபதி இல்லை என உறுதி செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து நக்கலாக பேசி கலாய்க்கும் வில்லன்கள் முன் சேதுபதியின் குட்டிப்பையன் வந்து துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு காண்பிக்கும் ஸீன் செம.

"உன் புருஷன்கிட்ட சொல்லி வை’ என வில்லன் ஆட்கள் சொல்ல, ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே வந்துடுவாரு நீயே சொல்லிட்டு போடா." என ரம்யா நம்பீசனும் ஸ்கோர் செய்திருப்பார்.     

இறுதி சுற்று : 

"மதி, அவங்க கார்டை கீழே இறக்கிட்டாங்க. ஏற்கனவே டயர்டாகி இருக்கவங்க இனிமேல் முடியாதுன்னுகீழே இறக்கிட்டாங்க போல." என வர்ணனையாளர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரிக்கு மதி கொடுக்கும் அந்த கிளைமாக்ஸ் பன்ச் எல்லோரையுமே சீட்டிலிருந்து எழ வைத்திருக்கும்.

- க. பாலாஜி