Published:Updated:

2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind

2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind
2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind

2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind

தற்போதைய தமிழ் திரையுலகில் விஜய் முதல் விக்ரம் பிரபு வரை திரையுலகை சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலர் முன்னனி நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு என்ட்ரி கொடுத்த நடிகர்களின் வாரிசுகள் லிஸ்ட் இதோ...


சித்து :

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் மகன். இந்த ஆண்டு வெளியான 'உயிரே உயிரே' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சித்தார்த் ( எ) சித்து. 'அலைபாயுதே' மாதவன், 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி முதல் படமே தாறுமாறா அமையனும்னா லவ் சப்ஜெக்ட் தான் சரியான ரூட்' என முடிவு செய்தவர்கள் அக்கட தேசத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்த 'இஸ்க்' திரைப்படத்தை 'உயிரே உயிரே' என இங்கே ரீமேக்கினார்கள். ஆனால், படம் தான் பப்படம் ஆகிடுச்சு. #உயிரே உயிரே... தப்பிச்சு எங்கேயாச்சும் ஓடிவிடு...


நைனிகா :

பிரபல நடிகை மீனாவின் மகள். 'தெறி' படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து 'தெறி பேபி'யாக விஜய் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறினார். க்யூட் எக்ஸ்பிரஷன், ஸ்வீட் டயலாக்ஸ் என திரையில் அதகளம் பண்ணிய நைனிகாவை எல்லோருக்குமே பிடித்துப்போனது. நைனிகாவை அடுத்தடுத்து படங்களில் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். #கலக்கல் பேபி


மகா :

பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கனேஷின் மகன். 'என்னுள் ஆயிரம்' எனும் ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கிருஷ்ணா குமார் என்பவர் இயக்கிய இந்த படத்தை , டெல்லி கணேஷே தயாரித்தார். பிரபல மல்லுவுட் இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்த இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. #பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்


ஷரிக் ஹசன்:

நடிகர்கள் ரியாஸ் - உமா தம்பதியின் மகன். ஜி.வி.பிரகாஷ், ஶ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர். படம் பெரிதாக ரீச் ஆகவில்லை என்றாலும் ஷரிக் ஹசன் மக்கள் மத்தியில் ஓரளவு ரீச் ஆனார். இவரது பெற்றோர்களுக்கு இவரை ஹீரோவா பார்க்கனும்னு ஆசையாம். கட்டதுரைக்கு கட்டம் நல்லாருந்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு பட்சி சொல்லுது... #வில்லனுக்குதான் ஆளில்லை ப்ரோ!


குறளரசன் :

சகலகலா வல்லவர் டி.ஆரின் இரண்டாவது மகன். இந்த ஆண்டு தனது அண்ணன் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 'காத்தாக...' பாடல் மட்டும் சிலர் மொபைலில் ரிப்பீட் மோடில் ஒலித்தது. எனக்கென்னமோ குறளரசனை சீக்கிரமே ஹீரோவா பார்ப்போம்னு தோணுது. #டண்டணக்கா


காளிதாஸ் ஜெயராம் :

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன். தனது பத்தாவது வயதில் 'என்டே வீடு அப்புவிண்டேயும்' எனும் மலையாள படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற இவர் படித்தது சென்னை லயோலா கல்லூரியில். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கிய 'ஒரு பக்க கதை' படத்தில் காளிதாஸ் தான் ஹீரோ. 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்ட இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்க்குள் இவர் அடுத்து நடித்த 'மீன் குழம்பு மண் பானையும்' படம் சமீபத்தில் வெளியானது. படம் எதிர்பார்த்து அளவு செல்லவில்லை. #ஹலோ பாலாஜி சாரா? 'ஒரு பக்க கதை'யை எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?

தன்யா :

நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. சமீபத்தில் வெளியான 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். அருள்நிதியோடு இவர் இணைந்து நடித்த 'பிருந்தாவனம்' திரைப்படம் 2017-ல் ரிலீஸாக காத்திருக்கிறது. சீக்கிரமே தன்யா தல, தளபதியோடு ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கலாம். #நம்பிக்கை அதானே எல்லாம்...


-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு