Published:Updated:

ரஜினிமுருகன் முதல் பைரவா வரை... 2016-ல் கலக்கிய 10 ரிங்டோன்கள்! #2016Rewind

ரஜினிமுருகன் முதல் பைரவா வரை... 2016-ல் கலக்கிய 10 ரிங்டோன்கள்! #2016Rewind
ரஜினிமுருகன் முதல் பைரவா வரை... 2016-ல் கலக்கிய 10 ரிங்டோன்கள்! #2016Rewind

ஒரு பாடலைக் கேட்டதும் அதில் உள்ள ஏதாவது ஒரு துணுக்கை  ரசித்து.. ‘அட.. இனி இதுதான் என் ரிங்டோன்!’ என்று நினைத்துக் கொள்வோம். அப்படி இந்த 2016-ஆம் ஆண்டில் அதிக பேர்களின் மொபைலில் ரிங்டோனாக அலறிய தமிழ்ப் பாடல்கள், பின்னணி இசைகள் சிலவற்றில் டாப் 10-ஐப்  பார்ப்போம்...

உன் மேல ஒரு கண்ணு ( ரஜினி முருகன் ) :

இந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் பெரும்பாலானோரது மொபைலில் ரிங்டோனாய் ஒலித்த பாடல் இது தான். ஆல்பம் வெளியான போது ரசிகர்களால் ப்ளேலிஸ்டில் கூட சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்த இந்த பாடல், படம் வெளியான பின்பு பலபேரின் ரிங்டோனாகவே டபுள்  ப்ரமோஷன் பெற்றது ஆச்சரியம். 


ஏய் சண்டக்காரா ( இறுதி சுற்று ) :

சந்தோஷ் நாராயணன் விட்ட நாக் அவுட் பன்ச். பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் இசையும் அதை தொடர்ந்து வரும் பாடகி ‘தீ’-யின் குரலும் பாடலை முதல் சுற்று கேட்ட மாத்திரத்திலேயே ரிங்டோனாய் செட் செய்ய வைத்தது. கண் கட்டி வித்தை காட்டி என்னை எப்போ கட்டி போட்டே....


உயிரே என் உயிரென ( ஜீரோ ) :

இந்த ஆண்டின் லவ்வர்ஸ் சாய்ஸ் ரிங்டோன் இது தான். 'உயிரே உன் உயிரென நான் இருப்பேன்...'னு அனிருத் குரலில் பாடல் ஆரம்பிக்கும். இதுக்கு மேல காதல் குரூப் ஸ்பெஷல் ரிங்டோனாக செட் பண்ண வேற என்ன காரணம் வேணும்ங்கிறேன்...


என் ஜீவன், டப்தெறி ஸ்டெப் ( தெறி ) :

அன்பான தளபதி ரசிகர்களுக்கு 'என் ஜீவன்...' பாட்டுன்னா, அசராத தளபதி ரசிகர்களுக்கு 'டப் தெறி ஸ்டெப்' தீம். 'தெறி' ஆடியோ ரிலீஸ் ஆன தேதி முதல் 'பைரவா' ஆடியோ ரிலீஸ் ஆனது வரை இந்த இரண்டு பாடல்களும் தான் விஜய் ரசிகர்களின் மொபைலில் ரிங்டோனாய் ஒலித்தது. அதுலேயும், 'டப் தெறி ஸ்டெப்பில் வரும் விசில் இருக்கே... தெறிஃபிக் ரகம்.


அக்னி குஞ்சொன்று கண்டேன் ( உறியடி ) :

'ரிங்டோனை கேட்கும் போதே நாடி நரம்பெல்லாம் துடிச்சு, நாக்கு பூச்சி வெளியே வரனும்'னு நினைத்தவர்கள் இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த ரிங்டோன். இது.  ராக் இசையில் பாரதி எழுதிய வரிகள். படிக்கும்போதே புல்லரிக்குதுல்ல... 


நெருப்புடா, மாயநதி ( கபாலி ) :

'நெருப்புடா...' பாடலின் சில வரிகள் ஆல்பம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது. ஒரிஜினல் ஆடியோ வந்த பின்புமே பலர் லீக் ஆன வெர்ஷனையே ரிங்டோனாய் வைத்திருந்தனர். 'ஓ நீங்க எல்லோருமேவா நெருப்புடா ரிங்டோன் வெச்சுருக்கீங்க!' என மீம்ஸே வந்தது. ஆனால், படம் வெளியான பின்பு நெருப்பை மாயநதி அணைத்துவிட்டது. மாயநதிடா....


ரெமோ நீ காதலன் ( ரெமோ ) :

'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே, ஆடியோவை மட்டும் அழகாய் பிரித்தெடுத்து ரிங்டோனாய் மாற்றிவிட்டனர். பிறகு படம் வெளியான சமயத்தில், ஆல்பத்திலிருந்த மற்ற பாடல்களை அவரவர் வாழ்க்கையின் சிச்சுவேஷனுக்கு ஏற்றார்போல் ரிங்டோனாக மாற்றிக்கொண்டார்கள்.


தள்ளிப்போகாதே ( அச்சம் என்பது மடமையடா ) :

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீசர் வந்ததிலிருந்தே 'தள்ளிப்போகாதே...' பாட்டின் முழு ஆடியோவிற்கு வெறித்தனமாய் காத்திருந்தனர் ரசிகர்கள். அதேபோல், ஆடியோவும் வெளியாக வேகவேகமாய் ரிங்டோனை மாற்றினார்கள். சில நாட்கள் முன்பு வரை, ஒரு பொது இடத்தில் 'தள்ளிப்போகாதே...' ரிங்டோன் ஒலித்தால், குறைந்தது இரண்டு பேராவது தனது மொபைலை எடுத்து செக் செய்தார்கள்.

கோபி பேட் தீம் ( சென்னை 600028 : செகண்ட் இன்னிங்ஸ் ) :

படம் பார்த்துட்டு இருக்கும்போதே 'இது தான் அடுத்த ரிங்டோன்' என ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். பின்பு, எப்படியோ கூகுளாண்டவர் உதவியோடு அந்த தீம் மியூசிக்கை   தேடி எடுத்து ரிங்டோனாய் வைத்துவிட்டனர். #அபூர்வ சகோதரர்கள் தீம் + பாய்ஸ் ஆர் பேக் = கோபி பேட் தீம்.

வர்லாம் வர்லாம் வா... ( பைரவா ) :

'பைரவா' ஆடியோ ரிலீஸான அன்று முதல் பெரும்பாலான விஜய் ரசிகர்களின் ரிங்டோன் இது தான். அதிலும் 'பாசத்துக்கு தத்துப்புள்ள தளபதிடா...' என்ற வரியிலிருந்து பாட்டை வெட்டி எடுத்து வைத்துள்ளார்கள். வர்லாம் வர்லாம் வா...

-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு