Published:Updated:

கபாலி முதல் மாலாக்கா வரை..! 2016-ன் வைரல் கேரக்டர்கள்!

கபாலி  முதல் மாலாக்கா  வரை..! 2016-ன் வைரல் கேரக்டர்கள்!
கபாலி முதல் மாலாக்கா வரை..! 2016-ன் வைரல் கேரக்டர்கள்!

கபாலி முதல் மாலாக்கா வரை..! 2016-ன் வைரல் கேரக்டர்கள்!

கருத்தோ, கலாயோ 2016-ல் தமிழ் சினிமாவில் மிகப் பரவலாக பேசப்பட்ட சினிமா கேரக்டர்களுடைய டாப் லிஸ்ட்.

#கபாலி : டீசர் வெளியானதிலிருந்தே சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், தலைவர் என்கின்ற காந்தப்பெயர்களையே பின்னுக்குத்தள்ளி கபாலிடா என முன்னால் வந்து நின்றது கபாலி என்கிற மாயப்பெயர். கடந்த வருடம் முழுக்க தமிழ் சினிமாவில் வைப்ரேசனிலேயே வைத்திருந்த பெயர் ஒன்று உண்டு என்றால் அது கபாலியேதான். 

#மன்னர்மன்னன் : சமூக அவலங்களுக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் இயங்கும் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது கேரக்டரையே அந்த மன்னர்மன்னன் கேரக்டர்  பிரதிபலிப்பதாக நெகிழ்ந்துபோய் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். இந்தப் பெருமையைப் பெற்றது 'ஜோக்கர்' படத்தின் நாயகன் குருசோமசுந்தரத்தின் அந்த மன்னர்மன்னன் கேரக்டர்.

#ஜெயலக்‌ஷ்மி : படத்தின் சில காட்சிகளை ப்ரோமோஷனுக்காக இணையத்தில் வெளியிட்டாலும் வெளியிட்டார்கள். 'சைத்தான்' என்கிற பட டைட்டிலுக்கு இணையாகப் படத்தில் வரும் ஜெயலக்‌ஷ்மி என்கிற பெயரும் செம வைரல் ஆனது. அதற்குக் காரணம் ஏற்கெனவே இப்படத்தின் மூலக்கதையான சுஜாதாவின் நாவலிலேயே ஜெயலக்‌ஷ்மி என்கிற கதாபாத்திரம்  ரொம்பவே ஃபேமஸ் என்பதுதான். இலக்கியத்திலிருந்து கொஞ்சம் விலகி இருந்த தமிழ் சினிமா ட்ரெண்டினை மீண்டும் சுஜாதாவின் படைப்பு வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றது.

#ஆத்ரேயா : அப்பா, சித்தப்பா, மகன் என மூன்று கேரக்டர்களில் வந்து டைம் மெசினிலே சுற்றோ சுற்றென சுற்ற வைத்திருந்தது '24' படம். ஐ யாம் எ வாட்ச் மெக்கானிக்னு மகன் வந்திருந்தாலும், ஐ யாம் எ சயின்டிஸ்ட்னு அப்பா வந்திருந்தாலும், ஆத்ரேயாடான்னு வந்து புரட்டி எடுத்திருப்பார் சித்தப்பா சூர்யா.

#ரஜினிகாந்த் : எப்போதும் லைம்லைட்டிலேயே தன் பெயரை வைத்திருக்கும் சிம்பு 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் தன் பெயரைச் சொல்ல க்ளைமாக்ஸ் வரை இழுத்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்ததே அந்த கேரக்டருக்கு ஹைஃபை ஏற்றியது. இது ஒருபக்கம் இருந்தாலும் கெளதம் மேனன் படத்தில் ரஜினிகாந்த் என்று ஹீரோவுக்குப் பெயரா என ஆச்சரியம் விலகாமல் கேள்விகள் கேட்டே பற்றிக்கொண்டது அந்தப் பெயர்.

#மாலாக்கா : எங்கே பார்த்தாலும்  'கண்ணம்மா கண்ணம்மா' என நெட்டிசன்களைப் பாடவைத்து பாரதியார் காலத்துக்கேகொண்டுபோய் விடுவார்களோ என்ற சந்தேகத்தை வரவழைத்திருந்தது `றெக்க'. அதற்கு இன்னொரு மிக முக்கியக் காரணம் ப்ப்பா.. யாருப்பா இந்தப் பொண்ணு என ரசிகர்களைக் கிறங்கடித்த மாலா அக்காவின் கேரக்டர்தான். அந்த மாலா அக்கா என்னும் பெயர் அக்கா மாலா என மீம்ஸ் வரைக்கும் வந்து நின்றது என்பது தனிச்சிறப்பு.

#குமுதவள்ளி : ரஜினிகாந்தே மறந்தாலும் ரசிகர்களால் எப்படித்தான் மறக்க முடியும் அந்த குமுதவள்ளியை. எத்தனையோ கேரக்டர்களில் ராதிகா ஆப்தேவை ரசித்திருந்தாலும் மாயநதியாய் வந்து மனதில் பாய்ந்துசென்ற அந்த 'கபாலி' படத்தின் குமுதவள்ளியை யாருமே மறக்க முடியாது.

#புஷ்பா : எல்லா வருசமும் ஏதாவது ஒரு காமெடியான கேரக்டர் வந்து அந்த வருசம் முழுக்க புழக்கத்திலேயே இருக்கும். அப்படி இந்த வருசம் வந்து பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட பெயர் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பட `புஷ்பா' கேரக்டர். ரோபோ சங்கரின் 'காலையில ஆறுமணி' காமெடி ஒருபக்கம் செம ஹிட் ஆனாலும் சத்தமே இல்லாமல் மறுபக்கம் ஸ்கோர் செய்திருந்தார் புஷ்பா.

#லவ் : சாஃப்டான லவ்வுங்கிற பெயரை வைத்து டெர்ரராக வில்லத்தனம் காட்டியிருந்தார் 'இருமுகன்' விக்ரம். லவ்.. லவ்.. லவ்..னு படம் முழுக்க லவ்வாகவே வந்து ஸ்பீடு (!) காட்டி படத்தில் லவ்வுங்கிற பெயரைக் கண்டாலே எல்லோரையும் மிரண்டு ஓட வைத்தார் விக்ரம்.

#சொப்பன சுந்தரி : 90'-ஸ் காலத்து இளைஞர்களையெல்லாம் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கேனு ஒருபக்கம் தேடவிட்டு அப்படியே இந்தப் பக்கம் கார் வெச்சிருந்த அந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கானு கேட்டு கள ஆய்வை மேற்கொள்ளவைத்த பெருமை கரகாட்டக்காரனுக்கு உண்டு. 25 வருடம் கழித்து அப்போ எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லுனு சொல்லாமல் சொல்லி 'சென்னை28-2' வில் ரீ என்ட்ரீ ஆகி அனைவரையும்  தெறிக்கவிட்டது சொப்பன சுந்தரி.

ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு