Published:Updated:

தள்ளிப் போகாதே, அடியே அழகே, ஏய் சூழலி...! 2016-ன் தெறி ஹிட் டூயட்ஸ்

ஒவ்வொரு காதலர்களுக்கும் படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வரிகளையும் வைத்துக் காதல் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கும். அப்படி இந்த வருடத்தின் சிறந்த வரிகளும் காட்சிகளும் இடம்பெற்ற டூயட் லிஸ்ட் இதோ !

தள்ளிப் போகாதே :

இந்த வருடத்தின் சிறந்த பாடல் என்றுகூட சொல்லலாம். படம் வரும் முன்பாகவே இந்தப் பாடல் ஹிட் அடித்தது. படத்தில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும். ஹீரோவும் ஹீரோயின் பொதுவாக பைக்கில் போகும்போது ரொமான்ஸ் பாடல் வருவது இயல்பு. ஆனால் ஒரு விபத்து நடக்கவிருக்கும்போது இந்தப் பாடலானது இடம் பெறும். பைக் லாரியில் மோதி இருவரும் காற்றில் பறந்துகொண்டிருக்கும்போது 'தள்ளிப்போகாதே... என்னையும் தள்ளிப் போகச் சொல்லாதே' என்ற வரிகள் ஆரம்பித்துத் தொடரும். 

மாயநதி :

'கபாலி' படத்தில் இடம்பெற்ற பாடல். இளமையில் மட்டும் காதல் மலர்வதில்லை எத்தனை வயதானாலும் காதல் மலரும் என்பதற்கு இந்தப் பாடல்  உதாரணமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் உமா தேவியின் வரிகளில் பாடல் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கும். இரவில் துங்கும் தருவாயில் இந்த பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பாடலுக்கு நடுவில் ரஜினியும் ராதிகா ஆப்தேவும் பேசிக்கொள்வது கூடுதல் அழகு.  

 உன்னாலே....எந்நாளும் :

'தெறி' படத்தில் இடம்பெற்றிருக்கும்  பாடல் இது. ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் இனிமையான நிகழ்வுகள்தான் பாடலின் காட்சிகள். ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் இசையில் இன்னொரு அழகான மெலோடி.  விஜய்க்கும் சமந்தாவிற்கும் திருமணம் நடந்து இருவருக்கும் குழந்தை பிறந்து அந்தக் குழந்தை வளர்வது வரையிலான பாடல் காட்சிகள். 

கொஞ்சிப் பேசிட வேணாம் :

இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் 'சேதுபதி'. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் கே.எஸ். சித்ரா, ஶ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடிய பாடலுக்கான வரிகள் நா. முத்துக்குமார். இந்தப் பாடல் மிடில் க்ளாஸ் ஃபேமிலியில் நடக்கும் அழகான விஷயங்கள். வேலை விஷயமாக விஜய் சேதுபதி வெளியூர் செல்ல அவர் மனைவியான ரம்யா நம்பீசனுடன் ஸ்கைப்பில் காதல் செய்யும் காட்சிகளே பாடல். 

சிரிக்காதே :

இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் 'ரெமோ'. அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடும் பாடலை எழுதியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். பி.சி. ஶ்ரீராமின் ஒளிப்பதிவு பாடலின் அழகைச் சற்று தூக்கியே கொடுக்கும். சாதாரணக் காதலர்களுக்குள் நடக்கும் இயல்பான விஷயங்களை மிகவும் அழகான வரிகளையும், இசையையும், ஒளிப்பதிவு வாயிலாக மனதில் நிறுத்தும் ஒரு பாடல்.     

உயிரே உன் உயிரென :

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் 'ஜீரோ'. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் கபிலன் வரிகளில் அனிருத் பாடகராகக் கலக்கிய பாடல். இந்தப் பாடல் ஹீரோ, ஹீரோயினை திருமணம் செய்யும்போது இடம்பெறும். பாடல் காட்சிகளும் பார்ப்பதற்கு கவரும் வண்ணம் இருக்கும். பாடல் ழுழுவதுமாக ஸ்லோமோஷனில் இருவரின் காதல் காட்சிகளும் மான்டேஜ் வடிவில் அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். 

கருவக்காட்டு கருவாயா :

இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் 'மருது'. இமான் இசையில் வைரமுத்து வரிகளில் வந்தனா ஶ்ரீனிவாசன், ஜித்தின் ராஜ், ஜெயமூர்த்தி பாட, கிராமத்தில் திருமணம் முடிந்த தம்பதியினரின் காதால் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதுதான் பாடலின் மூட். ரோட்டில் இருவரும் நடந்து செல்லும்போது திடீரென ஶ்ரீ திவ்யா டான்ஸ் ஆடுவதும். வேலை முடிந்து விஷால் வீட்டிற்கு வரும்வரை வீட்டின் வாசலில் நின்று வழியையே பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளும் இயல்பான அழகு.

ஆண்டிப்பட்டி கணவாகாத்து :

படம் 'தர்மதுரை'. யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து வரிகளில் செந்தில்தாஸ், சுர்முகி பாட, அசத்தும் பாடல். படத்தில் விஜய்சேதுபதி டாக்டர். இந்தப் பாடலும் கிராமத்தில் நடக்கும் அழகான காதல் கதையின் காட்சிகளே. 

அடியே அழகே :

படம் 'ஒருநாள் கூத்து'. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விவேக்கின் வரிகளில் ஷியான் ரோல்டன், பத்மலதா இருவரும் பாடிய பாடல். காதலிக்கும்போது சில பிரச்னைகள் ஏற்பட்டு மனஸ்தாபாமாகிவிடும். ஹீரோ சிறு தவறு செய்துவிட ஹீரோயின் கோபமாக இருப்பார். முடிவில் இருவரும் சமாதானமாகி விடுவார்கள். இசையும் பாடல் வரிகளும் கலவரப்படுத்தாமல் ஒரு கண்ணியமான காதலை நமக்குள் கடத்தும்.

ஏய் சுழலி :

படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக்கின் வரிகளில் விஜய்நரேன் பாடிய பாடல். ஹீரோயினை ஹீரோ இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிய பின் இடம்பெறும் பாடல்தான் இது. கிராமத்து பாணியில் மாடர்ன் காதலர்களுக்குள் நடக்கும் காட்சிகளே பாடலின் பலம். 

-தார்மிக் லீ