Published:Updated:

ஹாப்பி நியூ இயர் பாடல்களில் இதையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? #HappyNewYear2017

ஹாப்பி நியூ இயர் பாடல்களில் இதையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? #HappyNewYear2017

ஆங்கிலப் புத்தாண்டு ஆன இன்று, தமிழ் சினிமாவில் வந்த புத்தாண்டு பாடல்களை நினைவுகொண்டு ஜாலியாக புத்தாண்டை ஆரம்பிப்போமா? இந்தக் கட்டுரையின் முடிவில் இதில் எந்தெந்த பாடல்கள் உங்களின் ஃபேவரைட் என்பதும், இதில் எவையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் கமென்டில் பதிவு செய்ய தயங்காதீர்கள், மறக்காதீர்கள்.

1.  நல்லோர்கள் வாழ்வை (சங்கிலி திரைப்படம்) :-

1976 ஆம் ஆண்டு வெளியான கலிச்சரன் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக் தான் சங்கிலி திரைப்படம். சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீப்ரியா, நம்பியார், மேஜர் சுந்தர் ராஜன் என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படம் இது. இந்த படத்தில் வரும் நியூ இயர் பாடல்  தான் 'நல்லோர்கள் வாழ்வை காக்க' பாடல் . எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் இப்போதும் பார்ட்டி மூட், பாசிட்டிவ் மூட்  தரும். 

பாடல் தொடக்க வரிகள் : -

நல்லோர்கள் வாழ்வை காக்க, நமக்காக  நம்மை காக்க 

ஹேப்பி நியூர்!

சமுதாய சிந்தனை சேர, அநியாய கொள்கைகள் மாற, மனிதாபிமானம் வாழ . மகத்தான உள்ளமும் கூட, 

பிறந்து, சிறந்து, வளர்ந்து வாழவே ! 

2.  ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது :- (பகைவன் திரைப்படம்)

1997 ஆகஸ்டில் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் பகைவன். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், வி.சுந்தர் தயாரிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ரஞ்சிதா, நாகேஷ், கே .எஸ்.ரவிகுமார், விவேக், சத்யராஜ் என  நட்சத்திரப் பட்டாளங்கள் இந்த படத்தில் இருந்தனர் . துள்ளலான ஹாப்பி நியூ இயர் பிறந்தது பிறந்தது பாடல் அப்போது கொஞ்ச நாள் ரேடியோக்களில் ஓடிக்கொண்டிருந்தது, ஓரிரண்டு ஆண்டுகள் இந்த பாடலும் புத்தாண்டு தினத்தில் பாடப்பட்டுக் கொண்டிருந்தது ஆனால், நாளடைவில் காணாமல் போனது. 

பாடல் தொடக்க  வரிகள் : -

ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது 

வாழக்கையில் பிறந்தது, வாலிபனை எடு 

கனவுக்கும் வாழ்க்கைக்கும் கை கலப்பு தேவையில்லை, 

வா வாழ்ந்திடு!

துயரங்கள், கவலைகள், தோல்விகள், விரக்திகள்

அனைத்துக்கும் இன்று முதல் விடுமுறை கொடு.

இன்டர்நெட் காலம் இது, இதயங்கள் நெருங்கட்டும் 

நீ மாறிடு!

3.  ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே (உன்னை   நினைத்து)

விக்ரமன் இயக்கத்தில்  சூர்யா, லைலா, ஸ்னேகா நடித்து  2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. தமிழில் ஹிட் அடித்து, பின்னர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு  தமிழக அரசு விருதுகளும் கிடைத்தன. ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே என்ற பாடலை  சிற்பி இசையமைத்திருந்தார். இந்த பாடல் அப்போதே ஹிட் தான். இன்னமும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவ்வப்போது இந்த பாடலும் சில இடங்களில் ஒலிக்கிறது.

பாடல் தொடக்க  வரிகள் : -

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,

அன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே!

சூரியகாந்தி பூ போல முகம் மாறுதே!  சுகம் சேருதே!

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,

அன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே!

4. புத்தாண்டின் முதல் நாள் இது (இசை) :-

2015 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைத்து வெளிவந்த திரைப்படம் இசை. நீண்ட காலம் கழித்து தமிழில் ஒரு கொண்டாட்டமான  புத்தாண்டு பாடல் என்ற அடைமொழியுடன் வந்தது இது.  மதன் கார்க்கியின் வரிகளில், எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பில் வெளிவந்த இந்த படம் நல்ல ரிவ்யூக்களை பெற்றது. இந்த பாட்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை பாடியதும் எஸ்.ஜே.சூர்யா தான்.

பாடல் தொடக்க வரிகள் :-

 புத்தாண்டின் முதல் நாள் இது 

புதிதான இசை பூத்தது

ஒளி வெள்ளம் வானத்தை தாக்குது 

நானென்பது நாம் என்றானது 

நாமென்பது நாடு என்றானது 

வரும் நாளும், நமதென்றானது 

5. ஹாப்பி ஹாப்பி நியூயரு (கவண்):-

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் கவண்.  ஹாப்பி, ஹாப்பி பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஹிப்ஹாப்  தமிழா இந்த பாடலை இசையமைத்திருக்கிறார். டி.ஆர். ராஜேந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைந்து இந்த பாடலை பாடியிருக்கின்றனர். டி.ஆரின் வாய்ஸுக்காகவே பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

பாடல் தொடக்க வரிகள் :-

ஹாப்பி ஹாப்பி நியூயரு , பிரச்சனையெல்லாம் ஓவரு 

ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா டிராயரு 

ஹே, ஹாப்பி ஹாப்பி நியூயரு, பிரச்சனை வேணாம் போயிரு 

யார் என்ன சொன்னா என்ன? இஷ்டம் போல நீ இரு

ஹாப்பி, ஹாப்பி,  ஹாப்பி, ஹாப்பி 

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி 

6. இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்) :-

1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் இது. 1983 முதல் 2016 வரை 33 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து புத்தாண்டு என்றாலே தமிழர்களுக்கு இந்த பாடல் நினைவுக்கு வராமல் இருக்காது.

இந்த பாடலுக்கு இசையமைக்கும் போது இளையராஜாவுக்கு இவ்வளவு ஹிட் அடிக்குமா இல்லையா எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத  பாடல் இது. நம் தலைமுறையினர்  2117 வது புத்தாண்டுக்கு கூட இந்த பாடலுக்கவே ஆட்டம் போடுவார்கள்  என தாராளமாக நம்பலாம். இவ்வளவு காலமாக, இந்த புத்தாண்டு பாடலை மிஞ்சும் வகையில் ஒரு பாடல் கூட வரவே இல்லை. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் மேலே உள்ள பாடல்வரிகளைப் போல, இதில் புத்தாண்டை வரவேற்கும் வரிகளோ, தன்னம்பிக்கையை தூண்டும் விதமான வரிகளோ இருக்காது. துவக்கத்தில் கணீர்குரலில் எஸ்பிபி-யின் விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர் உற்சாகத்தைத் தர, அப்புறம் வரும் அந்த அதகள இசை  ஓர் ஆண்டுக்கான பூஸ்ட் அப்-பைத் தரும்! 

பஞ்சு அருணாசலம் எழுதி, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் சகலகலா வல்லவன், கமல் நடித்து மெகா சூப்பர் ஹிட் ஆனது இந்தப் படம். இளையாஜாவின் இசையில், எஸ்.பி.பி  குரலில் இந்த பாட்டை இன்னுமொரு முறை இப்போது கேளுங்களேன்.

என்னது. வரிகளா? படிக்கறப்பவே மனப்பாடமா மைண்டுக்குள்ள ஓடிருக்கும்தானே? அப்பறம் என்ன? ஹேப்பி நியூ இயர்  பாஸ்! 

- பு.விவேக் ஆனந்த் 

அடுத்த கட்டுரைக்கு