ரஜினி - கமல், அஜித் - விஜய்.... இவங்க சேர்ந்து நடிச்ச முதல் சீன் பார்த்திருக்கீங்களா?

சினிமாவில் இரண்டு துருவங்களாக இருக்கும் நடிகர்களெல்லாம் இணைந்து நடித்த படங்களின் முதல் சீன் பார்த்திருக்கீங்களா மக்களே.. பாத்துட்டுப் போங்க.

* மக்கள் திலகம், நடிகர் திலகம்னு இரண்டு திலகங்களும் இணைஞ்சு நடிச்ச ஒரே படம்னா அது 'கூண்டுக்கிளி'தான். எப்போதும் ஹீரோயினை மட்டுமே கரெக்டான நேரத்துல வந்து காப்பாத்துகிற எம்.ஜி.ஆர் இந்தப் படத்துல ரயிலில் விழுந்து தற்கொலை பண்ணிக்கப்போற சிவாஜியைப் பாய்ஞ்சுவந்து காப்பாத்தியிருப்பார்.

* இந்திய சினிமா ரசிகர்களுக்கே அதிகம் பரிச்சயப்பட்ட படம்னா அது 'ஷோலே'தான். அமிதாப் பச்சன், தர்மேந்திரான்னு ரெண்டு பேருமே நடிச்சு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அது. ஆனா அந்தப் படத்துக்கெல்லாம் முன்னாடியே தர்மேந்திரா ஹீரோவாக நடிச்ச 'குடி'ங்கிற படத்துல கெஸ்ட் ரோல்ல வந்திட்டுப் போயிருப்பார் அமிதாப். அந்த சீன்தான் இது.

* அடுத்த ஜோடி தமிழ் சினிமாவில் இன்னைக்கு வரைக்கும் இளைஞர்களுக்கு சவால்விட்டு நடிச்சிக்கிட்டு இருக்கிற ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடிதான். ரஜினிக்கு முதல் படமும் இதுதான் ரெண்டு பேரும் இணைஞ்சு நடிச்சு வெளிவந்த முதல் படமும் இதுவேதான். கேட்டைத் திறந்துக்கிட்டு வந்து கமல்கிட்ட பேசுற இந்த 'அபூர்வ ராகங்கள்' படத்து சீன்தான் ரஜினிக்கு திரை உலகில் முதல் சீன்.

* இது பாலிவுட்டின் கான் காம்போ. ஷாரூக் கான், சல்மான்கான். ரசிகர்களால் வெறித்தனமாகக் கொண்டாடப்படுகிற இவங்களும் சில படங்கள் இணைஞ்சே நடிச்சிருந்தாலும் கரன்சிங், அர்ஜூன் சிங்குங்கிற கேரக்டர்களில் இவங்க இணைஞ்சு நடிச்ச முதல் படமான 'கரன் அர்ஜுன்' படத்தின் முதல் காட்சி இதுதான்.

* ஹ்ம்ம்..  அப்புறமென்ன இவங்களைத்தானே ரொம்ப நேரமா எதிர்பார்த்தீங்க... இது அவங்களேதான் பாஸ். விஜய் அஜித். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச ரேர் பீஸ் இந்த 'ராஜாவின் பார்வையிலே' படம். விஜய் ஹீரோவாக நடிச்ச இந்தப் படத்துல விஜய்யின் நண்பராக வந்திருப்பார் அஜித். ரெண்டுபேரும் சேர்ந்து ஸ்க்ரீன்ல வர்ற முதல் சீன் இதுதான் மக்களே...!

 

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!