Published:Updated:

மிஸ்டர் மியாவ்: உறுமும் வேங்கை!

மிஸ்டர் மியாவ்: உறுமும் வேங்கை!

##~##

• 'மதராசப்பட்டினம்’ போலவே பீரியட் பிலிமாம், 'வாகை சூட வா’. டைரக்டர் சற்குணம், ஹீரோ விமல், தயாரிப்பாளர் முருகானந்தம், மூன்று பேருமே சென்னையில் ஒரே அறையில் தங்கி இருந்த ரூம்மேட்ஸ்! 

• பூஜையில் டைரக்டரோடு கொஞ்சிக் குலவுவார் தனுஷ். ரிலீஸின்போது, கட்டிப் புரளும் அளவுக்கு மோதல் இருக்கும். 'வேங்கை’ பட விஷயத்திலும் டைரக்டர் ஹரிக்கும் தனுஷ§க்கும் பனிப் போர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• 'ராணா’ படத்துக்காக நடிக்க இருந்த நடத்திரங்களிடம், ''கால்ஷீட்டை வேஸ்ட் பண்ணாதீங்க. வேற படங்களில் தாராளமா நடிங்க... நான் அப்புறமா டேட்ஸ் வாங்கிக்கிறேன்...'' என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்!

மிஸ்டர் மியாவ்: உறுமும் வேங்கை!

• 2011 ஜனவரி முதல் மே வரை 100 நாட்கள் ஓடிய படங்கள் பட்டியல் வெளியானது. 'மைனா’ 'சிறுத்தை’, 'சிங்கம் புலி’, 'காவலன்’ என்று நீளும் பட்டியலில், 'விருதகிரி’, 'லத்திகா’, 'இளைஞன்’ படங்களும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு, கோடம்பாக்கமே குப்புறப் படுத்துக்கொண்டு, குமுறிக் குமுறி அழுகிறது!  

மிஸ்டர் மியாவ்: உறுமும் வேங்கை!
மிஸ்டர் மியாவ்: உறுமும் வேங்கை!

• சம்பந்தியைப் பார்த்து உடல் நலம் விசாரிக்கத் தூதுவிட்டாராம் இளமை டைரக்டர். 'யாருக்கும் அனுமதி இல்லை...’ என்று கட் அண்ட் ரைட்டாக மறுத்துவிட்டாராம் சம்பந்தியம்மா!