Published:Updated:

அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்? #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?

பா.ஜான்ஸன்
அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்?  #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?
அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்? #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?

பாலகிருஷ்ணாவின் 100வது படம். சாதாரண படத்திலேயே அசகாய சூரத்தனம், பன்ச் டயலாக்கியேயே எதிரியை ரத்தம் கக்க வைப்பது, செட் தோசை போல நான்கு ஃபைட்டர்ஸ் சுழன்று விழுவது  என ரணகளம் செய்பவர் பாலகிருஷ்ணா. அதைப் பார்ப்பதற்காகவே தனி கூட்டமும் இங்கு உண்டு. இப்படியான ஒரு ஹீரோவின் 100வது படத்தை எவ்வளவு ஆர்பாட்டமாக எடுத்திருக்க முடியும். ஆனால், அந்த எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு ஒரு மன்னர் காலத்து கதை என இறங்கியதற்கும், பெரிய பட்ஜெட் படங்களை முதன்முதலில் இயக்க, இயக்குநர் க்ருஷுக்கு வாய்ப்பளித்தற்கும் பாராட்டுகள்.

அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்?  #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?

சதவாகனர் ராஜவம்சத்தைச் சேர்ந்த கௌதமிபுத்ர சதகர்ணி பற்றிய படம் தான் இது. தனது ராஜ்ஜியத்தை பெரிதும் விரிவாக்க விரும்பினார் சதகர்ணி. காரணம், நாட்டில் எப்போதும் போர் நடப்பது ஏன்? எல்லா நாடும் தனித் தனி ராஜ்ஜியமாக இருப்பதால் தானே. எல்லாவற்றையும் ஒரே ராஜ்ஜியத்துக்கு கீழ் கொண்டு வந்துவிட்டால் பின்பு போரே இருக்காதல்லவா... இது சிறு வயதில் சதகர்ணிக்கு வரும் யோசனை. இந்த ஒற்றுமைக்காக நடத்தப்படும் போர்களும், அதில் சதகர்ணி பெரும் வெற்றிகளும் தான் கௌதமிபுத்ர சதகர்ணி படத்தின் கதைச் சுருக்கம். 

அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்?  #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?

தெலுங்கு தேசத்தின் பெருமைகளைப் பற்றி பேசும் வசனங்கள் தான் படத்தில் ஏராளம் என்பதால் ஆந்திர ரசிகர்களுக்கு இது கொண்டாட்டத்திற்கான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கூடவே 'தாயை மிஞ்சினவன் இங்க யாருடா' என பேசி அதன் பிறகு தன் பெயருக்கும் முன் தாய் பெயரை இணைத்து கௌதமிபுத்ர சதகர்ணியாக மாறும் இடம், தன் மகனை அழைத்துக் கொண்டு போருக்கு செல்வது என வழக்கமான பாலகிருஷ்ணா படத்தின் மசாலாக்களை வேறு விதத்தில் காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர் க்ருஷ். 'எங்க மன்னர், நரசிம்மனுடைய மனித அவதாரம்' என ஹீரோவைப் புகழும் வசனங்கள் கொஞ்சம் இருந்தாலும் அதைத் தாண்டி வழக்கமாக பாலகிருஷ்ணா படத்தில் இடம் பெறும் பன்ச்களை தவிர்ததற்காகவே வசனகர்த்தா சாய்மாதவை பாராட்டலாம்.

அடக்கி வாசிக்கும் பாலகிருஷ்ணா.. அசத்தினாரா 100வது படத்தில்?  #கௌதமிபுத்ர சதகர்ணி படம் எப்படி?

வாசிஷ்டியாக ஸ்ரேயா, கௌதமியாக ஹேமமாலினி இருவரும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெரிய குறை ஏதும் இல்லாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு சிவராஜ் குமாரை வரவைத்திருப்பது கன்னட மார்க்கெட்டிற்காக என்று கொள்ளலாம். ஆனால், அந்தப் பாடல் மூலம் சதகர்ணி பற்றிய விவரங்களை சொல்லியிருப்பது நல்ல ஐடியா. போர்க்களக் காட்சிகளை முடிந்த அளவு பிரம்மாண்டமாக்கி காட்டியிருக்கிறது ஞான சேகரின் கேமிரா. சதகர்ணியின் அரண்மனையை அத்தனை தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறது பூபேஷ் பூபதியில் கலை இயக்கம். பின்னணி இசையில் சைரந்தன் பட் அசத்துகிறார்.

சண்டைக்காட்சிகள் கவனிக்கும் படியாக இருந்தாலும், போர் வியூகங்கள், திட்டமிடுதல் என புத்திசாலித்தனமான சுவாரஸ்யங்கள் எதுவும் படத்தில் இல்லை. வெறுமனே தெரிந்து வைத்திருக்கும் வரலாறையும், திரட்டிய தகவல்களையும் மட்டும் வைத்து படமாக்கியிருந்தது கதை கேட்கும் அனுபவத்தை மட்டுமே அளிப்பதாக இருந்தது.

டிரெய்லர் பார்த்து, படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகள் கொஞ்சம் சொதப்பல்தான். இருந்தாலும், கடலுக்கு நடுவில் வரும் சண்டைக்காட்சி, நாகப்பனாவுக்கு எதிரான போர் எல்லாமும் அதிரடி. எல்லாவற்றையும் தாண்டி ஹைப்பர் ஆக்டிவாக இருக்கும் பாலகிருஷ்ணாவை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருந்ததும், தேவைப்படும் இடத்தில் குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தொடை தட்டவிட்டு களத்தில் இறக்கிவிட்டதும் என பல விஷயங்களுக்காக க்ருஷையும், அடக்கி வாசித்திருக்கும் பாலகிருஷ்ணாவையும் பாராட்டலாம். 100வது படமாக மட்டுமல்ல பாலைய்யா சினிமா வரலாற்றில் மிகவும் கவனிக்கப்படும் படமாக இருக்கும் இந்த 'கௌதமிபுத்ர சதகர்னி'.