Published:Updated:

படிச்சது மெக்கானிக்கல்... எடுக்கிறது காதல் சினிமா! வாட்ஸப் இயக்குநர்களே?

படிச்சது மெக்கானிக்கல்... எடுக்கிறது காதல் சினிமா! வாட்ஸப் இயக்குநர்களே?
படிச்சது மெக்கானிக்கல்... எடுக்கிறது காதல் சினிமா! வாட்ஸப் இயக்குநர்களே?

சினிமா கத்துக்கிறதுக்கு இப்பல்லாம் நிறைய சினிமா சம்பந்தப்பட்ட கோர்ஸ் இருக்கு. என்னதான் சினிமா கத்துக்க பல கோர்ஸ் இருந்தாலும் சினிமாவுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத கோர்ஸ் படிச்ச சிலர்தான், இப்போ நம்ம கோலிவுட்டைக் கலக்கிக்கிட்டு இருக்காங்க. தமிழ்ல பலவிதமான ஜானர்ல படம் எடுத்துக்கிட்டு இருக்கிற இயக்குநர்களின் படிப்பு என்னன்னு தெரியுமா..? இதைப் படிச்சு நீங்களே தெரிஞ்சிக்குங்க.

* தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் டைரக்டர்ல முக்கியமான ஒருத்தர் மணிரத்னம். இவரோட காதல் சம்பந்தப்பட்ட படத்துக்கு எல்லா ஜென்ரேஷன்லயும் ஃபேன்ஸ் இருப்பாங்க. காதல் படங்கள் எடுத்து கலக்குற இவர் படிச்சது என்னவோ காமர்ஸ் டிகிரி. காமர்ஸ் முடிச்சதும் எம்.பி.ஏ-வும் படிச்சு இருக்கார். சீக்கிரமே காமர்ஸில் முத்தமிட்டால்னு ஒரு படம் எடுங்க ப்ரோ.

* கோலிவுட்ல லவ் படம் எடுத்தாலும் சரி, போலீஸ் படம் எடுத்தாலும் சரி எல்லாத்தையும் வித்தியாசமான டேஸ்ட்ல எடுக்கிறவர் நம்ம கெளதம் மேனன். இளையராஜா பாட்டுக்கு ஈக்வலா படம் எடுக்கிற கெளதம் மேனன் படிச்சது சினிமாவுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கோர்ஸ். இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குமானு கேட்டா கண்டிப்பா கெளதமோட மெக்கானிக்கல் இதயத்துல முளைக்கும் பாஸு.

* 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' என்று வெரைட்டி காட்டும் முக்கியமான ஒரு கோலிவுட் டைரக்டர் ராம். இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தாலும் மூணாவது படத்துக்கு கோலிவுட்டே வெயிட்டிங்ல இருக்கு. இப்படிப்பட்ட டைரக்டர் கொஞ்சம்கூட சினிமாவுக்குச் சம்பந்தமே இல்லாத தமிழ் எம்,ஏ படிச்சு இருக்கார். அவர் படிச்ச தமிழ் எம்.ஏவோட பாதிப்புதான் பாஸ் 'கற்றது தமிழ்'.

* டைரக்டர் ராமுக்கு முன்னாடியே தமிழ் படிச்சிட்டு தமிழ் சினி இண்டஸ்ட்ரியைக் கலக்கின இன்னொரு சீனியர் டைரக்டர் இருக்கார். 'ஒருதலை ராகம்' னு லவ் ட்ரெண்டிங்ல புயலைக் கிளப்பின டைரக்டர் டி.ராஜேந்தரும் தமிழ் எம்,ஏ தான். அவரோட வார்த்தைல `ரைமிங்கோட டைமிங்கா` தமிழ் டான்ஸ் ஆடுறதைப் பார்த்தாலே தெரியலையா...? அவர் தமிழ் மாணவர்னு.

* தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சினிமா எடுக்கிறப்போ என்னதான் புதுப்புது டெக்னிக்லாம் யூஸ் பண்ணாலும் அவர் சினிமா சம்பந்தப்பட்ட கோர்ஸ் எதுவுமே படிக்கலை ப்ரோ. அவர் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் படிச்சிட்டு நேரா படம் எடுக்க வந்துட்டார். அந்த மெக்கானிக்கல் பிரைய்ன்தான் 'எந்திரன்' எடுத்து இருக்கு ஃப்ரெண்ட்ஸ்.

* அமீர் எடுக்கிற எல்லாப் படமும் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். 'மெளனம் பேசியதே' படத்துல ஆரம்பிச்சு 'ஆதி பகவன்' வரைக்கும் எல்லாமே வேற வேற ஜானர். இப்படி வித்தியாசமான ஃபீல் கொடுக்கிற அமீர் படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எக்கனாமிக்ஸ் படிச்சு இருக்கார். எக்கனாமிக்ஸ் படிச்சது மட்டும் இல்லாம கொஞ்சநாள் அதே ஃபீல்டுல வேலையும் பார்த்து இருக்கார்.

* '2016-ம் வருஷத்தோட சிறந்த படம் எதுன்னு கேட்டா கண்டிப்பா எல்லோரும் 'விசாரணை' படத்தைதான் சொல்வாங்க. நேஷனல் அவார்ட் வாங்கி அப்பறம் இந்தியாவோட அதிகாரப்பூர்வ ஆஸ்கார் பரிந்துரையாகவும் போனது. தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட வேற ரேஞ்சுக்குக் கொண்டுபோன டைரக்டர் வெற்றிமாறன் சென்னையில் ஆங்கிலம் லிட்ரேச்சர் படிச்சுருக்கார்.

* கோலிவுட்ல ஜாலிலோ ஜிம்கானா ரேஞ்சுக்கு செம ஜாலி டைப் படமா எடுக்கிற வெங்கட் பிரபு படிச்சது எல்லாமே ஃபாரின்லதான். முதல் இன்னிங்ஸ்ல இங்கிலாந்து போய் அக்கவுன்ட்ஸ் படிச்சிட்டு அப்பறமா செகண்ட் இன்னிங்ஸ்ல இந்தியா வந்து படம் நடிக்க ஆரம்பிச்சு இப்போ டைரக்டர் ஆகிட்டார்.

* தமிழ்ல அரசியல் பேசக்கூடிய படங்கள் எடுக்கிற டைரக்டர்ஸ் ரொம்ப கம்மி. 'மெட்ராஸ்' படத்துல அரசியல் பேசி, ஒரு சுவர்ல இருக்கிற ஓவியம் எப்படில்லாம் பிரச்னையை உண்டாக்கும்னு சொல்லி இருப்பார் டைரக்டர் பா.ரஞ்சித். ஓவியக் கல்லூரியில் ஓவியம் படிச்சு பின்னாடி அதே துறையில் வேலை பார்த்து இருக்கார். அதோட தாக்கத்துலதான் 'மெட்ராஸ்' படம் எடுத்தீங்களா ப்ரோ...?

இது மூலமா ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சிக்கலாம் ஃப்ரெண்ட்ஸ். சினிமாவில் கலக்கணும்னா நீங்க எந்தத் துறையில் இருந்து வேணும்னாலும் வரலாம். ஆனா சினிமா மேல உண்மையான லவ் இருக்கணும்.

-லோ.சியாம் சுந்தர்