வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:41 (25/01/2017)

'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்

இன்னைக்கு தேசிய வாக்காளர் தினம். நம்ம தமிழ் சினிமாவுல அரசியல்வாதிகளைக் கதறவிட்ட வாக்காளர்களின் காட்சிகளையும் வாக்காளர்களை வெச்சு செஞ்ச சில அரசியல்வாதிகளின் காட்சிகளையும் லைட்டா ஒரு பார்வை பாத்துட்டு வரலாமா மக்களே..

வாக்காளர் தினம்

இது 'அன்பு' படத்துல வந்த காட்சி. படத்தைப் பல பேர் மறந்திருந்தாக்கூட இந்த அல்டிமேட் காமெடியை யாரும் மறந்திருக்கவே முடியாது. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து அவன்கிட்ட வாங்கின காசுக்கு அவன் சின்னத்திலே ஒரு குத்துனு குத்திய வாக்காளரையெல்லாம் நீங்க இங்கே பார்க்கலாம்.

இது 'சிவகாசி' படத்துல வந்த சில்மிஷமான ஓட்டுக்கேட்பு வைபவம். மன்னிப்பு கேட்டாதான் ஓட்டுப்போடுவேன்னு அசின் சொல்ல. வீட்டுக்குள்ள போயி மன்னிப்பு கேட்பார் விஜய். எப்படிக் கேட்டாருன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா கதவைச் சாத்திக்கிட்டு மன்னிப்பு கேட்டார்.

இந்தியில் வேட்பாளர் பேசி அதைத் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கேட்டிருப்பீங்க இங்கிலீஷ் டூ தமிழ்லகூட ட்ரான்ஸ்லேட் பண்ணிப் பார்த்திருப்பீங்க. ஆனா இந்திய அளவிலேயே தமிழ் டு தமிழ் ட்ரான்ஸ்லேட் பண்ணி முதன்முறையா பார்த்தது இந்த சீன்லதான். அவ்வ்வ்வ்.

அரசியலில் சில பேரோட பேச்சுல மக்கள் மயங்கிப் பார்த்திருப்போம். ஆனா இங்கே ஏரியா கவுன்சிலரான ஸ்நேக்பாபு தொகுதி மக்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே மக்கள் தொப்புத் தொப்புனு குப்புற விழுவாங்க. பின்னே கொசு மருந்துல மயக்கமருந்தைக் கலக்குற ஆளைலாம் கூட வெச்சிருந்தா...

அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்புவாங்கனு நினைச்சு மேடையில பேசிட்டு இருப்பாங்க. ஆனால் இப்போலாம் அவங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன நினைச்சுக்கிட்டு பேசுறாங்கங்கிறது வரைக்கும் மக்கள் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுதான் இருப்பாங்கங்கிறதுக்கு இந்த சீன்தான் உதாரணம்.

- ஜெ.வி.பிரவீன்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்