Published:Updated:

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive
'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

3 படம் தொடங்கி ஏகே 57 வரையிலான பயணம், காதல் சர்ச்சை, கல்யாண கிசுகிசு, பீப் சாங் பரபரப்பு, தனுஷ் உடனான மோதல், வேர்ல்ட் டூர் என எல்லாம் பேசுகிறார்.  படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டிருக்கிற அவரது இசையைப் போலவே அனிருத்தின் பேச்சிலும் அத்தனை நிதானம்... பக்குவம்...

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

"3 படத்தில் அறிமுகமானபோது, இன்றைய இந்த இடத்தை, வளர்ச்சியை எதிர்பார்த்தீங்களா?"

''எட்டாவது படிக்கிறபோதே எனக்கு மியூசிக் டைரக்டராகணுங்கிற கனவு இருந்தது. 30, 35 வயசுக்குள்ள அது நடக்கணும்னு நினைச்சேன். ஆனா காலேஜில ரெண்டாவது வருஷம் படிக்கிறபோதே நடக்கும்னு யோசிக்கலை. ஒரு படம்.... ஒரு மணி நேரத்துல எல்லாத்தையும் புரட்டிப்போட்டது. ஒரு ஹீரோன்னா ஒரு படத்துக்கு ஷூட்டிங் போகற பிராசஸ் நடக்கும்.  ஆனா என் விஷயத்துல ஒரு மணி நேரத்துல லைஃபே மாறினது. அப்ப எனக்கு 20 வயசுகூட முடியலை. வர்தா புயல் மாதிரி இருந்ததுனு வச்சுக்கோங்களேன். எதிர்பார்க்காத விஷயம்னாலும் இன்னிக்கு வரைக்கும் அது ரொம்ப ஸ்பெஷலான தருணம்.''

அனிருத்தின் குரல் இன்றைய இசையமைப்பாளர்களுக்கே பிடித்தமான குரல். ஏ.ஆர்.ரகுமான், இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களே அனிருத்தை விரும்பி அழைத்து பாட வைக்கிறார்கள். ஆனாலும் அனிருத்தின் குரல் அவரது உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத...பேஸ் வாய்ஸ். தன்னுடைய குரல்வளம் பற்றி அனிருத்தின் நினைப்பு எப்படி?

''சில பேர் அவங்களா இருந்தாதான் நல்லாருக்கும். நானே பாடிபில்டிங்கெல்லாம் பண்ணிட்டு வந்தேன்னா இது அனிருத்தே இல்லையேனு நீங்களே ஃபீல் பண்ணுவீங்க. ஒல்லியா யாராவது ஃபோட்டோஸ் எடுக்கும்போது அனிருத் மாதிரி இருக்கிறதா என்னை அடையாளமா வச்சு சொல்றாங்க. ஒல்லியா இருக்கிறதுதான் என் USP! அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு. என் தோற்றத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லைனு நிறைய பேர் சொல்லியிருக்காங்க.''

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

இப்படியான அபிப்ராயத்துக்குப் பிறகு பாடகர் அவதாரம் எடுத்தது எப்படி?

''நான் பயிற்சி பெற்ற சிங்கரே இல்லை. என்னோட முதல் படத்துல நான் பாடவே இல்லை. ஒரு நடிகர், படங்கள் பண்ணப் பண்ண அவரோட நடிப்பு மெருகேறும்னு சொல்வாங்க இல்லையா... அந்த மாதிரிதான் என் பாடல்கள் சக்சஸ் ஆக, ஆக அந்த கான்ஃபிடன்ஸ் அதிகமாயிருக்கு. இப்போ ரொம்பவே கான்ஃபிடன்ட்டா இருக்கேன்.''

"இசையில் வேறென்ன தேடல் உங்களுக்கு?  அனிருத்தின் இசைக்கச்சேரியை ரசிக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லையா?"

தனி ஆல்பம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம நாதஸ்வரமோ, நம்ம கர்நாடிக் வயலினோ அமெரிக்காவுல கேட்டாலும் அது ஹிட்டாகணும்ங்கிறதுதான் என் லட்சியம். ஸ்கூல், காலேஜிலேருந்து பேன்டுல இருக்கேன். பெர்ஃபார்மிங் ரொம்பப் பிடிக்கும். சென்னையில் கடைசி கச்சேரியா வச்சுக்கலாம்னு இருக்கேன். கிராண்ட் ஃபினாலேவாக, 2017ல் ஆரம்பத்துலயே சில மாசங்கள்ல அது நடக்கும்.''

"உங்களுடைய இந்த வளர்ச்சியையும் வெற்றிகளையும் இப்போது நினைச்சுப் பார்க்கறதுண்டா?"

''கண்டிப்பா... அதுவும் இப்பல்லாம் சோஷியல் மீடியாவுல எதுக்கெடுத்தாலும் இத்தனை வருஷம் முடிஞ்சிருச்சுனு கொண்டாடறாங்க.  அந்த மாதிரி என்னோட அஞ்சு வருஷம் முடிஞ்ச அன்னிக்கு ஒரு சின்ன ஜெர்க் ஆச்சு. இந்த அஞ்சுவருஷத்துல எனக்கு நல்ல இடம் கொடுத்திருக்காங்க. நான் பிடிச்சேன்னு சொல்ல முடியாது. அப்படிக் கொடுத்த இடத்தைத் தக்க வச்சுக்கணும்ங்கிற பொறுப்பு அதிகமாயிருக்கு.''

"உங்களுடைய இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தனுஷ்... இப்ப உங்க ரெண்டு பேருக்கும் இடையிலான விரிசல் பரபரப்பா பேசப்படுகிற விஷயமாக இருக்கிறது. தனுஷுக்கும் உங்களுக்கும்... "

''ஒண்ணும் இல்லை. இன்னிக்குவரைக்கும் அவர் என்ன அறிவிப்பு வெளியிட்டாலும் நான் உடனே விஷ் பண்ணுவேன். எங்களுக்குள்ள பர்சனலா எந்த தவறான புரிதலும் இல்லை. ஹாலிவுட் வரைக்கும் போகக்கூடியவர் அவர்னு நான் உறுதியா நம்பறேன். இன்னிக்கு நான் இந்த சீட்ல உட்கார்ந்திருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் அவர்தான். அதை என்னிக்கும் மறக்க மாட்டேன். மறுபடி எங்கக் கூட்டணி சேரும். அப்படி சேரும்போது பயங்கரமா இருக்கப் போகுது...''

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

 "ரஜினி படத்துக்கு இசையமைக்கிறது எல்லா இசையமைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய கனவா இருக்கும். ரஜினி உங்களுக்கு உறவுக்காரர். இன்னும் சுலபமா சாத்தியமாகிற அந்தக் கனவு உங்களுக்கும் இருக்கா?"

''கண்டிப்பா இருக்கு. சினிமா மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு ரெண்டு அல்டிமேட் ஆம்பிஷன் உண்டு.  ஒண்ணு ஷங்கர் சார் படம் பண்றது. அவர் எப்போதும் என்னை என்கரேஜிங்கா பேசுவார். எல்லா ஆல்பங்களுக்கும் வாழ்த்து சொல்லுவார். அதனால அவர்கூட ஒரு படம் பண்ணணும். அதோட சேர்த்து தலைவர் படமும் பண்ணணும். கத்தியா இருக்கட்டும்... வேதாளமா இருக்கட்டும்... ஒரு ஹீரோ படம் பண்ணும்போதே அதுல யோசிக்கிற மியூசிக் எல்லாருக்குமே தலைவரை வச்சுதான் யோசிக்கத் தோணும். அதனால கண்டிப்பா அதுவும் ஒரு லட்சியம்தான். கூடிய சீக்கிரம் அது நடக்கும்னு நம்பறேன்.''

 "அனிருத்கிட்ட அத்தனை சீக்கிரத்துல பாடல்களை வாங்க முடியாது... ரொம்ப லேட் பண்ணுகிறார்னு சொல்றாங்களே..."

''நான் மியூசிக் போட்ட பனிரெண்டு படங்களோட டைரக்டர்ஸ் யாருமே இப்படியொரு விஷயத்தைச் சொல்லவே மாட்டாங்க. வருஷத்துல எல்லா நாளும் பாட்டு கொடுக்கலாம். ஆனா எல்லா பாட்டும் நல்ல பாட்டா கொடுக்க முடியாது. அந்த வகையில ஒரு வருஷத்துக்கு 15, 20 பாட்டுக்கு மேல என்னோட 100 பர்சென்ட்டை என்னால கொடுக்க முடியுமானு தெரியலை. இருபது பாடல்கள்னா ரெண்டு, மூணு படங்கள்தான். ஒருவேளை அதனால நான் ரொம்ப ஸ்லோவா கொடுக்கற மாதிரி தெரியலாம். பொதுவாவே நான் கொஞ்சம் ஸ்லோதான்.''

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

"விஜய், அஜித்னு பெரிய ஹீரோக்களோட சேர்ந்து ஒர்க் பண்ணின அந்த அனுபவம்? உங்களுடைய பாடல்களைக் கேட்டுவிட்டு அஜித்தோ விஜய்யோ தனிப்பட்டமுறையில் பாராட்டிய தருணங்கள்?"

''கத்தி எனக்கு ஆறாவது படம். ஆறாவது படத்துலயே அப்படியொரு காம்பினேஷன் அமைஞ்சதுக்கு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். அந்த ஆல்பமும், அந்தப்படத்தோட தீம் மியூசிக்கும் எனக்குப் பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது.

நான் அஜித் சார் ரசிகன். அவர்கூட வேதாளம் படத்துல ஒர்க் பண்ணினது சூப்பரா இருந்தது. வேதாளம் டைரக்டர் சிவா சாருக்கும் எனக்கும் ஒரே மாதிரியான அலைவரிசை. அஜித் சாரோட ரசிகர்களுக்கு காலத்துக்கும் மறக்க முடியாத பாட்டா இருக்கணும்னுதான் ஆலுமா டோலுமா ரெடி பண்ணினோம். கொலவெறிக்கு அப்புறம் என் கேரியர்லேயே சக்சஸ்ஃபுல் சாங்கா அமைஞ்சது. மறுபடி ஏகே 57 பரபரப்பா ரெடியாயிட்டிருக்கு. அந்தப் படம்தான் என் அடுத்த ஆல்பமா இருக்கும். 

வணக்கம் சென்னை என்னோட மூணாவது படம். அந்த ஆல்பம் ரிலீசானபோது அஜித் சாரை ஒரு ரெஸ்டாரன்ட்டுல மீட் பண்ணினேன். ஐ ரியலி லவ் த சாங்ஸ்னு அங்கேயே பாராட்டினார். வேதாளம்ல ஒர்க் பண்ணும்போதும் சரி, இப்பவும் சரி அவர் ரொம்ப என்கரேஜிங்கா பேசுவார். நானும் என் பெஸ்ட்டை கொடுத்திருக்கேன். மியூசிக்ல தலையிட மாட்டார். அஜித் சார் மாதிரி ஒரு ஜென்ட்டில்மேனை பார்க்கவே முடியாது. வேதாளத்துக்கு பிறகு அஜித் சார் ரசிகர்களோட எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கும். இந்த முறை வேற ஒரு களம். அதுலயும் ஜெயிச்சுக் காட்டுவோம். படத்தோட கதை வெளிநாடு சம்பந்தப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் டைப் படமா இருக்கும். மியூசிக்கும் நிச்சயமா வித்தியாசமா, புதுசா இருக்கும்.''

"சக இசையமைப்பாளர்கள் உடன் நட்பு உண்டா? பரஸ்பரம் ஒருவருடைய இசையைப்பற்றி இன்னொருவர் பாராட்டுவது... அபிப்ராயம் சொல்வது... "

''மியூசிக்ல போட்டியே இல்லை. எல்லாரும் எல்லார்கூடவும் சேர்ந்து ஒர்க் பண்றோம். இன்னிக்குத் தேதிக்கு யார் அதிக ஹிட்ஸ் கொடுக்கிறாங்களோ அவருக்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகமா இருப்பாங்களே தவிர, அப்பவும் யாரும் யாரையும் போட்டியா பார்க்கறதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லார்கூடவும் ஃப்ரெண்டா இருப்பேன். எனக்கு ஒரு பாட்டு பிடிச்சா உடனே அந்த மியூசிக் டைரக்டரை கூப்பிட்டு சொல்லிடுவேன். அது ரஹ்மான் சாரா இருந்தாலும் சொல்வேன். இன்னிக்கு வந்தவங்கன்னாலும் சொல்வேன். நான் மட்டும் அப்படினு சொல்லலை. எல்லாருமே அப்படித்தான் இருக்கோம்.''

"காலையில் ஃப்ரஷ்ஷாக வேலை பார்க்கிறது இளையராஜா காலத்தோடு போய்விட்டது. இரவில் இசைப்பணியாற்றுவதை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்து வைத்தார். இப்போது இரவில் வேலை பார்ப்பது ஒரு டிரெண்டாகவே ஆகிவிட்டது. இரவில் கண்முழித்து வேலை பார்ப்பதில் அப்படி என்னதான் இருக்கு?"

''நான் ஆறாவது படிக்கிறபோதே மியூசிக் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அந்த வயசுல ஸ்கூல் முடிச்சிட்டு பாஸ்கெட் பால் விளையாடி முடிச்சிட்டு, கிளாஸ்வொர்க் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றதுக்கே எட்டு மணி ஆயிடும். அப்புறம் அடுத்த நாள் வேலையை எல்லாம் முடிச்சிட்டு மியூசிக்கை ஆரம்பிப்பேன். அந்த வயசுலயே என் பாடி கிளாக் அதுக்கு டியூன் ஆயிடுச்சு. பேண்ட் பண்றதும் ஸ்கூல், காலேஜ் முடிஞ்சதும்தான் பண்ண முடியும். நான் லயோலாவுல பி.காம் செகண்ட் இயர் பண்ணிட்டிருந்தபோது என்னோட முதல் படம் பண்ணினேன். காலேஜ் முடிச்சிட்டுத்தான் பண்ண முடியும். என் உடம்பு அதுக்குப் பழகிடுச்சு. அதையெல்லாம் தாண்டி ராத்திரி ஒர்க் பண்றதுல ஒரு அமைதி இருக்கு. ராத்திரி ரெண்டரை மணிக்கு ஒரு பாட்டு பண்றேன். ஒரு பிரேக் வேணும்னா வண்டியை எடுத்துக்கிட்டு அப்படியே பீச்சுக்குப் போயிட்டு வருவேன். எனக்கு அது பழகிடுச்சு.''

'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive

"பிரேக் அப்புக்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கிறது? முறிந்துபோன காதல் வலியைத் தருகிறதா?"

''பிரேக்அப் கண்டிப்பா வலியைக் கொடுத்தது. ஆனா வருஷங்கள் போகப்போக வயசாக ஆக அது மாறிடும். அதுதான் மனித இயல்பு. முதல் காதலியோட ரொம்ப நாள் பழகியிருப்போம். பிரிவுக்குப் பிறகும் மனசோரத்துல அந்த நினைவு இருந்துட்டேதான் இருக்கும். அதனாலதான் காதல் தோல்விப் பாடல்கள் சக்சஸ் ஆகுது. அதைத் தன்னோட தொடர்புப் படுத்திப் பார்க்கறாங்கனுதானே அர்த்தம்.? எனக்கு அடிப்படையில கோபமே வராது. யாருக்கும் நான் எதிராகவும் இருக்க மாட்டேன். அது குடும்பமாகட்டும்... கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் ஆகட்டும்... என்னால யாரோடவும் விரோதம் பாராட்ட முடியாது. சிங்கிளா இருக்கிறது இப்போ எனக்கு வசதியா இருக்கு. பிடிச்சிருக்கு. நிறைய எமோஷன்ஸை அனுபவிக்கிறேன். முன்னால அதுக்கு வாய்ப்பில்லாம இருந்தது.'' 

"அனிருத் வாழ்க்கையில் மீண்டும் ஒரு காதல் கதைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

''என்னோட இந்த அஞ்ச வருஷ இசைக்குப் பெரிய காரணம் காதல். ஃபாஸ்ட் சாங்ஸைவிட லவ் சாங்ஸ்தான் என் இன்ஸ்பிரேஷன். தினசரி என் வாழ்க்கையில நான் சந்திக்கிற விஷயத்தைத்தான் பாட்டா கொடுக்கறேன். ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா பேசிட்டிருந்துட்டு மியூசிக் போட்டா ஜாலியா ஒரு பாட்டு வரும். நீங்க இப்ப ஏகப்பட்ட கான்ட்ரவெர்ஷியலான கேள்விகளைக் கேட்டீங்க. இதே மூடுல நான் மியூசிக் போட்டா அது வேற லெவல்ல இருக்கும். இந்த மாதிரிதான் காதலும். காதல் தனி உணர்வு. அதுல சண்டை இருக்கும். சந்தோஷம் இருக்கும். சின்னச் சின்ன ஊடல் இருக்கும். அந்த உணர்வுகள் எல்லாத்தையும் நான் என் இசையில கொண்டு வரேன். என்னோட வயசுல இருக்கிறவங்களுக்கு அது ஏதோ ஒரு வகையில கனெக்ட் ஆகுதுனு நம்பறேன். இப்போ மூன்றரை வருஷமா நான் சிங்கிள்தான். என் லைஃப்ல யாரும் இல்லை. யாரோ ஒருத்தங்க வருவாங்க.  மியூசிஷியன்ஸ கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவங்க. அதைப் புரிஞ்சுக்கிற மாதிரியான பொண்ணு வரணும். கொஞ்ச நாள் பழகணும். சரியா வருதானு பார்க்கணும்.''

"சாதாரண மக்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர்னா இசை. உங்களுக்கு அது பிழைப்பு. எந்நேரமும் இசையிலேயே மூழ்கி இருக்கிற உங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் எது?"

''என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்தான் எனக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர். அவங்க யாருமே சினிமா தொடர்பில்லாதவங்க. எல்லாரும் என்கூட ஸ்கூல், காலேஜில படிச்சவங்க. மியூசிக்பேண்ட்ல இருந்தவங்க. எட்டாங்கிளாஸுல என்கிட்ட எப்படிப் பேசினாங்களோ, என்னை எப்படித் திட்டினாங்களோ, கலாய்ச்சாங்களோ அதே மாதிரிதான் இன்னி வரைக்கும் இருக்காங்க. என் ஸ்டூடியோவுல சினிமா பத்தி யாரும் பேச மாட்டாங்க, அவங்களுக்கும் தெரியாது. என்னோட பர்சனல் வாழ்க்கை சினிமாவோட தொடர்பில்லாதது. சினிமாவுல தனி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா என்னோட ஸ்ட்ரென்த்துன்னா ஸ்கூல் நாட்கள்லேருந்து என்கூடவே இருக்கிறவங்கதான்.''

எல்லா கேள்விகளையும் நிதானமாக எதிர்கொள்கிறார். கடைசியில் தயங்கியபடி  சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பற்றிக் கேட்டால்;  “வதந்தி பரப்பறவங்ககிட்ட ஏன் என்னையவே எப்பவும் வெச்சு செய்றீங்கனு கேட்கணும்,  என்னோட ட்விட்டர்ல சொன்ன அதே விஷயத்தைதான் மறுபடி சொல்வேன். அந்த வீடியோவுல உள்ளது நான் இல்லைங்கிறது எல்லாருக்குமே தெரியும். வதந்தியைக் கிளப்பினவங்களை கண் டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க..” என்று கூலாக பதில் சொல்கிறார்.

ஆர்.வைதேகி

படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு