Published:Updated:

’சைதன்யா- சமந்தா கல்யாண வைபோகமே’ - ரீல் ஜோடி ரியலில் இணைந்த கதை!

பா.விஜயலட்சுமி
’சைதன்யா- சமந்தா கல்யாண வைபோகமே’ - ரீல் ஜோடி ரியலில் இணைந்த கதை!
’சைதன்யா- சமந்தா கல்யாண வைபோகமே’ - ரீல் ஜோடி ரியலில் இணைந்த கதை!

’உன்னையும், உன் அப்பாவையும் இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியலை’ தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயாவான ’ஏ மாய சேசாவே’ படத்தில் ஹீரோ நாகசைதன்யா, ஹீரோயின் சமந்தாவைப் பார்த்து பேசும் லாஸ்ட் டயலாக் இது. 

படத்தில் சமந்தாவையும், அவரது அப்பாவையும் சைதன்யா புரிந்துகொண்டாரோ  இல்லையோ, நிஜத்தில் நாகசைதன்யாவின் ஸ்டார் ஃபாதர் நாகர்ஜூனாகாருவும், சமந்தாவின் ரியல் பெற்றோரும் இவர்களுடைய லவ் ஸ்டோரியைப் புரிந்துகொண்டார்கள்.

இந்த கலக்கல் கெமிஸ்ட்ரியின் க்ளைமாக்ஸ்தான் சமந்தா - சைதன்யாவின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டியதும், நடந்து முடிந்திருக்கும் என்கேஜ்மெண்ட்டும்.

இவர்களது காதலுக்கான விதை மூன்று படங்களில் சமந்தாவும், சைதன்யாவும் இணைந்து நடிக்கும்போதே விழுந்துவிட்டதாம். கூடவே, அகினேனி குடும்பத்தாரின் சொந்தத் தயாரிப்பான ’மனம்’ திரைப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக மட்டுமின்றி, நாகர்ஜூனாவிற்கு அம்மாவாகவும் நடித்திருந்தார் சமந்தா.

அதே சந்தோஷத்தைத் தற்போது அவர்களது நிச்சயதார்த்த விழாவிலும் காட்டியுள்ள நாகர்ஜூனா, அந்த மகிழ்ச்சியை ‘என் அம்மா இப்போது எனக்கு மகள்’ என்று ஹேப்பியாக ட்விட்டி  ரசிகர்களுடன் பகிரந்துகொண்டுள்ளார். இந்த ரியல் ஜோடியின் ரீல் ரொமாண்டிக் தருணங்கள் மொத்தமே மூன்று படங்களில்தான் என்றாலும், இன்று ரியல் லைஃப்பில் சமந்தா - சைதன்யா இணையவே அந்த ரீல் தருணங்கள்தான் காரணமாம். 

இயக்குனர் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா அலைஸ் ‘ஏ மாய சேசாவே’தான் இவர்களின் பர்ஸ்ட் மீட்டிங் பாய்ண்ட். தமிழில் கெஸ்ட் ரோலிலும், தெலுங்கில் முழுப்படத்திலும் ஹீரோ - ஹீரோயினாக காதலைப் பொழிந்திருப்பார்கள் இருவரும். அப்போதெல்லாம் கூட நண்பர்களாக இருந்தவர்களைப் புரட்டிக் காதல் வலையில் தள்ளியது ‘மனம்’ திரைப்படம். நாகசைதன்யாவின் மனைவியாகவும், நாகர்ஜூனாவின் அம்மாவாகவும் அசத்திய சமந்தாவின் பாசப்பிணைப்பில், சைதன்யாவுடன் கூடவே சமந்தாவிடம் மொத்த குடும்பமும் சரண்டராம்.

நாகர்ஜூனா குடும்பத்தினர் அத்தனைப் பேரும் இணைந்து நடித்த மனம் திரைப்படத்தில் நடித்து அப்போதே குடும்ப உறுப்பினர்களில் ஒருபாதி இடத்தைப் பெற்றுவிட்டார் சமந்தா. தற்போது காதல் உறுதியாகி, நிச்சயதார்த்தமும் முடிந்த நிலையில் மீதி உரிமையும் தற்போது சமந்தாவிற்கே. சினிமாவில் சைதன்யாவிற்காக சமந்தா திருமணத்தை நிறுத்தும் ஆக்‌ஷன் சீக்வென்ஸையெல்லாம் கொடுக்க ஆசைப்படாத அன்புக் குடும்பம் எடுத்த முடிவின் விளைவு... கொஞ்சமே கொஞ்சம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் புடைசூழ நடந்து முடிந்துள்ளது சைதன்யா - சமந்தா நிச்சயதார்த்த வைபோகம். ஏற்கனவே டாட்டூ, குடும்ப விழாக்கள் என்று ஹைவோல்டேஜ் ஜூரம் ஏற்றிய இவர்களது காதல் புகைப்படங்களின் தொகுப்பில், தற்போது நிச்சயதார்த்த விழாவில் சமந்தா கட்டியிருந்த கஸ்டமைஸ்டு புடவை, ‘சே’ என்று சைதன்யாவை அவர் கொஞ்சி அழைக்கும் செல்லப் பெயர், சே-சமந்தாவின் க்யூட் வெட்கச் சிரிப்பு ஆகியவையும் இணைந்துவிட்டது. 

இவர்கள் நடித்த 3 திரைப்படங்களில், மனம், ஏ மாய சேசாவே இரண்டிலும் திருமண சீன்கள் உண்டு. ஒன்று பக்கா தெலுங்கு வெட்டிங் சீன். மற்றொன்று சர்ச்சில் நடைபெறும் பாரம்பரியமான கேரள திருமணம். ரியல் நிச்சயதார்த்த விழாவிலும், ஹீரோ - ஹீரோயின் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். விரைவிலேயே ஊரைக் கூட்டிக் கல்யாணமும், சினிமா மாதிரி இல்லாமல், சினிமாவையே மிஞ்சி, ஒட்டுமொத்த திரைப்பட உலகையும் கலக்கும் வகையில் நடைபெறும் என்பதும் இரண்டு மோதிரங்களில் உறுதியாகியுள்ளது. 

கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ் எல்லாம் கலந்து கட்டி செயல்பட்ட இவ்விரு படங்களுக்கு நடுவே ‘ஆட்டோ நகர் சூர்யா’வும், ஆட்டோ மீட்டராய் இவர்களுடைய காதல் ரேட்டை எகிறடித்தது எக்ஸ்டா டெயில் பீஸ். கெளதம் மேனன் பட ரசிகர்களுக்கு சீன் பை சீன் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும், ஜெஸ்ஸியைப் பார்த்துவிட்டு ‘ஷப்பா என்ன பொண்ணுடா’ என்று காம்பவுண்ட் கேட் மீது சாய்ந்த கார்த்திக் @ நாகசைதன்யா இன்னும் எழுந்துக்கவே இல்லை பாஸ்! 

-பா.விஜயலட்சுமி