Published:Updated:

இந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா... ரஹ்மானா ? - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!

ஜெ.வி.பிரவீன்குமார்
இந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா...  ரஹ்மானா ? - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!
இந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா... ரஹ்மானா ? - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!

முன்னாடிலாம் ஒரு பாட்டைக் கேட்டாலே இவர்தான் இந்தப் பாட்டுக்கு மியூசிக் பண்ணிருப்பார்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்ற மாதிரி இருக்கும். ஆனாலும் சில நேரம் நம்ம கெஸ்ஸிங் தப்பாகி இவரா இந்தப் பாட்டுக்கு  கம்போஸ் பண்ணினதுன்னு ஆச்சரியப்படவும் வைக்கும். அப்படியான சில கம்போசிங்ஸ் லிஸ்ட்தான் இது!

* 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'னு 'சிகரம்' படத்துப் பாட்டை எஸ்.பி.பி பாட ஆரம்பிச்சதுமே இது தெரியாதாக்கும் 80-ஸ்னாலே இளையராஜாதானேன்னு பல பேர் சொல்வாங்க. ஆனா இந்தப் பாட்டைப் பாடினதோட அந்தப் படத்துக்கு கம்போஸிங்கும் பண்ணினது அதே எஸ்.பி.பி தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு...

* இளையராஜா காலத்து 'கரகாட்டக்காரன்' ஏ.ஆர் ரஹ்மான் காலத்து 'சங்கமம்' படத்துக்கெல்லாம் முன் மாதிரியாக ஹீரோ- ஹீரோயினுக்குள் மியூஸிகல் வார் நடப்பது போன்ற கான்செப்டைக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டுத்தந்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனாலேயே அந்த வரிசையில வந்த படம்னா கண்டிப்பா அது எம்.எஸ்.விஸ்வநாதன் பண்ணினதாகத்தான் இருக்கும்கிறதுதான் பலரின் எக்ஸ்பெக்டேசன். ஆனா அதுக்கு கம்போஸ் பண்ணிக் கதறவிட்டவர் யாருன்னா... ஆமா, கே.வி. மகாதேவன்தான்.

* 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி'. இது 'ஹேராம்' படத்துல வந்த பலபேரின் ஆல்டைம் ஃபேவரைட் சாங். ஆரம்பத்துல இது ஏ.ஆர் ரஹ்மானோட மியூஸிக்ல வந்த பாட்டுனு எவ்வளவு சூப்பராக மியூஸிக் போட்டிருக்கார்னு நினைக்காதவங்க கொஞ்சநஞ்சமில்லை. ஆனா இதுக்கு அலட்டிக்காம  எவர்கிரீனாக இசையமைத்து இருப்பார் இளையராஜா.  ஆனால் கேட்கின்ற எல்லோரையும் ஓர் ஆழ்நிலைக்குள் கொண்டுசென்று மனதைக் கட்டிப்போட்டு வைத்துவிடும் இந்த ஒற்றைப்பாடல்.

* 'கிழக்குச்சீமையிலே' படத்து பாடல்கள். அதுவரை இளையராஜா காம்போவிலேயே வந்துகொண்டு இருந்த பாரதிராஜாவின் படமானது முதன்முறையாக காம்போ மாறியதும் காரணமாக இருக்கலாம். அது இளையராஜா இசைதான் என்று ஒவ்வொரு முறை அடித்துச்சொல்லப்படும்போதும் ரஹ்மானின் வெற்றி உறுதியானது.  அந்த அளவுக்குப் பக்காவாக கிராமத்துப் புழுதிக்குள்ளேயே மூழ்கி வெளியே வந்திருப்பார் ஏ.ஆர். ரஹ்மான்.

* மலரே மெளனமா'. இந்தப் பாடலைப் பற்றி எழுதாமல் போனால் இந்தக் கட்டுரை முழுமை அடையாது. இது ரஹ்மான் போட்ட பாட்டா ராஜா போட்ட பாட்டா எனக் கேட்கும் ரசிகர்களைக் குழம்ப வைத்திருப்பதுதான் ஹைலைட். மணலில் சலசலத்து ஓடும் தெளிந்த ஆற்று நீரின் சப்தத்தைப் போன்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் ஆரம்ப இசையே கேட்பவர்களை மயக்கிவிடும். இந்த 'கர்ணா' படத்துப் பாட்டுக்கு இசை வித்யாசாகர்!

* 'சேரன் பாண்டியன்'. படத்தில் வந்த மொத்த பாடல்களுமே அதிரிபுதிரி ஹிட். எஸ் ஏ ராஜ்குமார்தான் அதற்கு இசையமைப்பாளர் என்றுதான் பல பேர் நினைத்து இருப்பார்கள். காரணம் படத்தின் பாடல்களும், ஜேசுதாஸ், எஸ்பி..பி, சித்ரா, மனோ, சைலஜா, ஸ்வர்ணலதா,மலேசியா வாசுதேவன்  எனப் பெரிய பட்டாளமே படத்தில் பாடியிருந்ததும்தான். ஆனால் தன்னுடைய முதல் படமாக செளந்தர்யன் அதற்கு இசையமைத்திருப்பார்.

* கூகுள் உதவி இல்லாமல் இந்தப் பாட்டுக்கு யார் மியூஸிக் என்றால் என்பது சதவிகிதம் வரும் பதில் ரஹ்மான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இந்த 'டும் டும் டும்' படத்துக்கு இசையமைத்திருந்தவர் அதிகம் கவனிக்கப்படாத கார்த்திக்ராஜா. வெளியே அதிகம் பேசப்படாதவர் என்பதாலேயே யார் இசையமைத்திருப்பார்கள் என்கிற லிஸ்ட்டில் அவர் பெயரை ஆப்சனில்கூட யாரும் வைத்திருக்க மாட்டார்கள்.

- ஜெ.வி.பிரவீன்குமார்