Published:Updated:

ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி?

ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி?
ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி?

ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி?

ரெசிடென்ட் ஈவில் இறுதி அத்தியாயம் இதோ வெளியாகிவிட்டது. ஹாலிவுட்டில் எப்போதும் சீரிஸ் படங்களுக்குப் பெரிய வரவேற்பு உண்டு. அது புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, வீடியோ கேமைத் தழுவியதானாலும் சரி. ரெசிடென்ட் ஈவில் சீரிஸ் இதில் இரண்டாவது வகை. 

இதுவரை ரெசிடென்ட் ஈவில் பார்க்காதவர்களுக்காக ஒர் அறிமுகம். படத்தின் பேஸ்மென்ட் இது தான். ரக்கூன் நகரத்தின் பாதாளத்தில் இருக்கும் தி ஹைவ் என்னும் ரகசிய இடத்தில் அம்ப்ரெல்லா நிறுவனம் சில ஜெனிட்டிக் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அங்கே இருக்கும் டி - வைரஸ் கசிய, அங்கிருக்கும் மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறிவிடுகிறார்கள். மிருகங்கள் ம்யூட்டண்ட்களாக மாறிவிடுகிறார்கள். அங்கு வேலை செய்யும் ஆலிஸ் (மில்லா ஜோவோவிச்) மட்டும் தப்பிவிடுகிறார் என்பது வரை முதல் பாகம். அவருக்கு அசுரசக்திகள் கிடைக்கிறது என்பது இரண்டாம் பாகத்தில். அம்பர்லா நிறுவனம், வழியில் வரும் ஸோம்பி, வினோத விலங்குகள் எனப் பல தடைகளைத் தாண்டி ஆலிஸின் பயணம் எப்படித் தொடர்ந்தது என்பது தான் 15 வருடங்களாகக் குறிப்பிட்ட இடைவெளியில் வெளிவந்த இந்தப் படங்களின் கதை. இப்போது வெளியாகியிருக்கும் 'ரெசிடென்ட் ஈவில் ஃபைனல் சாப்டர்' இந்தக் கதையின் கடைசி அத்தியாயம். 

இதிலும், எந்த மாற்றமும் இல்லாமல், ஸோம்பிகளின் அட்டகாசமும், அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சதிகளும் தொடர்கிறது. திடீரென ஆலிஸுக்கு ரெட் குயினிடமிருந்து (அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர்) ஒரு தகவல் வருகிறது. அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பரிசோதனைக் கூடத்துக்குள் ஏர்பார்ன் ஆன்டி வைரஸ் இருக்கிறது. அதன் மூலம் டி வைரஸ் பாதித்த அனைவரையும் அழித்து உலகில் மிச்சம் உள்ள மனிதர்களை அழிவிலிருந்து தடுக்க முடியும். அங்கு 48 மணிநேரத்துக்குள் போனால் தான் அந்த மருந்தைப் பெற முடியும் என ரெட் குயின் செக் வைக்க, வேறு வழி ஏதும் இல்லாத ஆலிஸ் ரக்கூன் நகரத்துக்குக் கிளம்புகிறார். 48 மணிநேரத்துக்குள் இருக்கும் தடைகளை முறியடித்து ஆன்டிவைரஸை ஆலிஸ் கைப்பற்றினாளா என்பதே மீதிக் கதை. 

முந்தைய பாகங்களைப் போல இதிலும் சண்டைக் காட்சிகளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. துவக்கத்தில் நீருக்குள் இருந்து வரும் வினோத ஜந்துவில் துவங்கி கடைசியாக நிமிடம் வரை எதிரிகளைத் துவைத்து எடுக்கிறார் ஆலிஸ். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் அட்டகாசமாகத் துணை நிற்கிறது காட்சியமைப்புகள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்; ஒடிக் கொண்டிருக்கும் மிலிட்டரி டேங்கருக்குப் பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ஆலிஸ் ஓடிவருகிறார். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கில் ஸோம்பிக்கள் துரத்தி வருகிறது. அதை அப்படியே ஏரியல் வியூவில் காண்பிக்கும் போது அத்தனை அசத்தலாக இருந்தது. ரெசிடென்ட்ஸ் ஈவிலின் மிகப் பிரபலமான அந்த லேசர் சீன் நேயர் விருப்பம் போலச் சில நிமிடங்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது செம்ம நாஸ்டாலஜி. அதுவும் இதை எல்லாம் 3டியில் பார்க்கும் அனுபவமே வேற லெவல். 

கடைசிப் பாகம் தான் என்றாலும், முதல் பாகம் எடுப்பதைப் போல கவனமாக எடுத்திருக்கிறார்கள். சில திருப்பங்கள், மிகச் சிக்கலான சவால்கள், அதிலிருந்து தப்பிக்கும் சுவாரஸ்யமான காட்சிகள், குறிப்பாக ஆலிஸ் தன் தோழி க்ளார் ரெட்ஃபில்ட் (அலி லார்டர்) மற்றும் அவளது நண்பர்களுடன் இணைந்து ஸோம்பிக்களை அழிக்கும் சீன் மாஸ்! 

பால் ஆண்டர்சன் (ஹீரோயின் மில்லாவின் கணவர்) இயக்கத்தில் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் மூன்றாவது பாகம் இது. கடைசிப் பாகம் எனச் சொல்லப்பட்டாலும், படம் தனியாகப் பார்த்தாலும் திருப்தியான உணர்வைத் தரும் வகையில், ‘ஓப்பன் எண்டு’டன் தான் முடிந்திருக்கிறது. முடித்த இடத்திலிருந்து 'ரைஸிங் ஆஃப் ஆலிஸ்', 'ரீ-பூட் ஆஃப் ரெட் குயின்' என அடுத்த பாகம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு மிகவும் வசதியாகவே படத்தை முடித்திருக்கிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு