Published:Updated:

ரெசிடெண்ட் ஈவிலுக்கும் நரசிம்மா படத்துக்கும் என்ன சம்பந்தம்? - தெரிஞ்சுக்கோங்க மக்களே!

Vikatan Correspondent
ரெசிடெண்ட் ஈவிலுக்கும் நரசிம்மா படத்துக்கும் என்ன சம்பந்தம்? - தெரிஞ்சுக்கோங்க மக்களே!
ரெசிடெண்ட் ஈவிலுக்கும் நரசிம்மா படத்துக்கும் என்ன சம்பந்தம்? - தெரிஞ்சுக்கோங்க மக்களே!

மனசாட்சியே இல்லாம கூவுறதுன்னு ஒண்ணு கேள்விப்பட்டிருப்போம். நம்ம தமிழ் சினிமாவும் அதுக்கு விதிவிலக்கு இல்லை. 'நரசிம்மா' காலம் தொடங்கி சில சீன்களுக்கு அவங்க கொடுக்கிற பில்டப்புகள்லாம் இருக்குது பாருங்க ஆத்தீ... தெய்வ லெவல்ல இருக்கும். சில சாம்பிள்...

* ரஜினி நடிச்ச 'படையப்பா' படத்து க்ளைமாக்ஸ்ல அப்பாஸைக் கூட்டிக்கிட்டுப் போய் தன் மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்காக ரஜினியே களத்தில் இறங்கி ஃபைட் பண்ணுவார். வாயில சுருட்டை வெச்சு இழுக்கிற அந்த வயசுலேயும் ஃபைட் பண்ணுறாரேன்னுகூட சந்தோசப்படலாம். ஆனா ஒரு சீன்ல சட்டையைக் கழட்டி அரை லிட்டர் நல்லெண்ணெயை அப்படியே கவுத்தி தேய்ச்சிட்டு வந்த மாதிரி இருக்கும் அந்த பாடியைக் காட்டுவார். அட... அதுகூட சோஷியல் மேட்டர்னு விட்டுடலாம்ங்க. ஆனா அதைப் பார்த்துட்டு 'வாவ்... வாட் எ மேன்' அப்படின்னு அப்பாஸ் ஒரு கமென்ட் அடிப்பாரு பாருங்க... அதை அதைதாங்க இப்போவரைக்கும் ஜீரணிக்கவே முடியலை.

* 'சுறா' படத்து ஓப்பனிங் சீனைக் கலாய்க்காத விஜய் ரசிகர்களே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு அது ஃபேமஸ். இப்போவரைக்கும் அவங்களே பெஞ்ச் மார்க்காக அதைத்தான் வெச்சுருக்காங்க. ஆனா இந்த சீன்லாம் வர்றதுக்கு முன்னாடி கடலுக்குள்ள போன விஜய்யைப் பத்தி ஏதாச்சும் பில்டப்பா இன்ட்ரோ கொடுப்போம்னு 'அவரு பாசத்துல பத்து தாய்க்குச் சமம், பலத்துல நூறு யானைக்குச் சமம், வீரத்துல ஆயிரம் வேங்கைக்குச் சமம், விவேகத்துல லட்சம் சாணக்கியனுக்குச் சமம்னு லெங்க்த்தியா வசனம்னு ஒண்ணு பேசுவாங்க. ஸ்ஸ்ஸப்பா... முடியலை. (ஆனா வீரம், விவேகம்னு அப்போவே ஏதோ உள்குத்தா யாருக்கோ, எதுக்கோ சொல்லி வெச்சிருக்காங்க பாருங்களேன்)

* அப்புறம் விஜயகாந்த் நடிச்ச 'நரசிம்மா' படத்துல வந்த பல சீன்களை மீம் மெட்டீரியல்ஸுனே சொல்லலாம். எப்போவோ வந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கும் அதுதான் ரெஃபரென்ஸ், புல்லட்டே துளைக்காம எஸ்கேப்பிங்க் ஆகுற  சாஃப்ட்வேர்லாம் கண்ணுலேயே வச்சிருக்கிற கண்டுபிடிப்போட  இப்போ வந்திருக்குற 'ரெசிடென்ட் ஈவில்' படத்துக்கும் அதுதான் ரெஃபரன்ஸ் . மேட்டர் அது இல்லை. அதில் விஜயகாந்துக்கு கரன்ட் ஷாக்கைக் கொடுத்தும் அவருக்கு ஒண்ணுமே பண்ணாம ஸ்விட்ச்போர்டு தெறிக்கிற அந்த சீன்ல பயந்து அரண்டு போனது மாதிரி ரகுவரன் ஒரு ஆக்டிங் பண்ணிருப்பாரு பாருங்க. தட் இதை இட்லின்னு சொன்னா... மொமென்ட்!

* 'நாட்டாமை' படத்துல சீனியர் சரத்குமார் சும்மா இருக்கிற ஜூனியர் சரத்குமாரைக் கோத்துவிட அவரும் இறங்கி  சிலம்புச்சண்டை போட்டுட்டு இருப்பார். திடீர்னு நிறையப் பேரு உள்ளே புகுந்துடுவாங்க. சரி அப்படியே கன்டினியூ பண்ணிருந்தாலும் பரவாயில்லை, 'நாட்டாமை தம்பி நாப்பது யானை வந்தாலும் எதிர்த்து நிக்கிற சிங்கம்டா'னு சொல்லி கண்ணுல கங்கையை வர வெச்சிருப்பாரு. அட  பழமொழி சொன்னாலும் அதுல ஒரு வரைமுறை வேணாமாய்யா..!

- ஜெ.வி.பிரவீன்குமார்