வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (05/02/2017)

கடைசி தொடர்பு:13:06 (06/02/2017)

விகடன் பற்றி விஜய்.. ரஜினியாய் மாறிய சிவகார்த்திகேயன்! #AnandaVikatanCinemaAwards

தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்திருந்த 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவில் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கும் 90 வயது விகடன் தாத்தாவுக்கும் இடையிலான உறவையும், பொன்னான தருணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

விகடன் விருதுகள்

1. எஸ்.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் முதன்முதலாக வாங்கிய அச்சு இயந்திரம், அரங்கிற்கு வெளியே பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பிரபலங்கள் பலரும் அதைத் தொட்டுப்பார்த்து சிலிர்த்தனர். அச்சு இயந்திரத்துடன் செல்ஃபிகளும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

2. 'சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்க மேடைக்கு வந்த இரா.பார்த்திபனிடம் 'விகடன் என்பது டேஷ்', கோடிட்ட இடங்களை நிரப்புக என அவர் ஸ்டைலிலேயே கேட்டார் மதன் கார்க்கி. அதற்கு ' நான் எப்போ கீழ விழுந்தாலும் என் தோளைத் தட்டித் தூக்கிவிடும் சக்தி.ஸ்கூல் மார்க்கைவிட எனக்கு எப்போதுமே விகடன்மார்க்தான் பெருசு' என்றார் பார்த்திபன்.

3. பிரதீப்புக்கு சிறந்த பாடகருக்கான விருது வழங்க மேடையேறிய பிரபு 'எத்தனை புகைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறார்கள். அரங்கத்தின் கலை அமைப்பே பிரமிக்க வைக்கிறது.  ரெட் கார்ப்பெட் ஏரியா அருகே  கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் என் அப்பாவின் சிறுவயதுப் படத்தை நான் முதல்முறையாக பார்க்கிறேன். விகடனுடைய ஸ்பெஷலே அதுதான். சினிமாவை இத்தனை நெருக்கமாக யாருமே பின் தொடர்ந்து ஆதரவு அளித்தது இல்லை' என நெகிழ்ந்தார்.

5. இயக்குநர் விக்ரமன் கைகளால் ' சிறந்த புதுமுக இயக்குநருக்கான' விருதைப் பெற்றுக்கொண்டார்  'கிடாரி' படத்தின் இயக்குநர் பிரசாத் முருகேசன். 'விகடன் படிச்சு வளர்ந்த கிராமத்து நடுவர்க்கத்து இளைஞன் நான். நான் முதன்முதலில் கதை படித்ததே விகடனில் தான். என் வாழ்வின் மறக்கமுடியாத நாள் இது' என விருதை  இரண்டு கைகளாலும்  இறுக்கிப்பிடித்தார் பிரசாத்.

6. ஒரு வாசகியாக, பின்னாளில் மாணவ நிருபராக விகடனில் வளர்ந்தவர் பாடலாசிரியர் தாமரை. சென்ற ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியர் விருது' பெற்றுக்கொண்ட தாமரை ' இந்த விருது எனக்கு அந்நியமாக தெரியவில்லை. இது எங்கள் குடும்பத்திற்குள் நாங்களே கொடுத்துக்கொண்ட விருதை போல உணர்கிறேன்' என்றார்.

சந்தோஷ் நாராயணன்

3. 'சிறந்த பாடகருக்கான விருது' பெற்ற பிரதீப், சந்தோஷ் நாராயணனுக்கும் அவருக்குமான நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொண்டார்.  ‘13 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் மிகச்சிறிய அறையில் தொடங்கியது எங்கள் பயணம். விகடன் மேடை எங்கள் இருவருக்குமே கனவு. இருவரும் இங்கே, ஒரே நாளில், ஒரே மேடையில் விருது வாங்குவது மிகப்பெரிய பெருமை' என நெகிழ்ந்தார்.

7. சிறந்த கதைக்கான விருதை வழங்க, மேடை ஏறினார் இயக்குநர் மகேந்திரன். '90 ஆண்டுகள் ஆகியும் விகடன் இன்னும் அதே நேர்மையுடனும் உற்சாகத்துடனும் இருக்கு. கவர்மென்ட் செய்ய முடியாததைக்கூட விகடன் செய்யும்' என்றார் பெருமிதமாக.

8. 'அதிக கவனம் ஈர்த்த படமாக’த் தேர்வுசெய்யப்பட்ட 'கபாலி'க்கான விருதை, கலைப்புலி எஸ். தாணுவும் பா.இரஞ்சித்தும் இணைந்து பெற்றுக்கொண்டார்கள். வாங்கிய விருதை ரஞ்சித் கைகளில் திணித்தபடியே இருந்தார் தாணு. அதில் ‘இது உனக்கானது தம்பி’ எனும் பாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. கலைப்புலி எஸ்.தாணு ஒரு தமிழ்ப் புலியாக மாறி , விகடன் பொன்விழா ஆண்டில் திமுக தலைவர் கருணாநிதி இயற்றிய கவிதையைச் சொல்லி அசத்தினார். அரங்கமே அமைதியாகக் கேட்ட நொடிகள் அவை.

9. எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆவணப்படத்தை ஆர்வத்தோடு பார்த்து ரசித்த ரஜினி, வாசனின் போராட்டமான வாழ்வைக் கண்டு கலங்கிப்போனார். படம் முடியும்போது ரஜினியின் கண்கள் கலங்கியிருந்தன.

ஆர்.ஜே.பாலாஜி

10. ‘ஒரு செல்ஃபி சார் என்று ஆர்.ஜே. பாலாஜி கேட்க.. ‘அட.. வாங்க’ என்று வாஞ்சையோடு அழைத்தார் ரஜினி. வந்து நின்ற அவரின் கைகளைச் சுற்றிப் பிடித்து, தன்னுடனே நிற்கவைத்துக் கொண்டார்.  ’ஐயோ.. ஃபோன் வேற ஆன் ஆக மாட்டீங்குதே’ என்ற பதற்றத்துடனே இருந்த அவருக்கு மதன் கார்க்கிதான் கைகொடுத்தார். நான் எடுக்கறேன் என்று செல்ஃபி எடுத்துக் கொடுத்தார். வெற்றிமாறன், சமுத்திரக்கனி, மாதவன் என்று பலரும் அன்றைக்கு ஆர்.ஜே.பாலாஜியை - கிரண்பேடியுடனான மேடை நிகழ்வைக்  குறிப்பிட்டுப் - பாராட்டினர். ’டிவில போடறப்ப எடிட் பண்ணிடாதீங்கப்பா’ என்று கலாய்த்துக் கொண்டே இருந்தார் அவர்.  

11. ஜெமினி நிறுவனம் தனக்கு முன்மாதிரியாக இருப்பதையும், எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களோடு தான் உரையாடிய அற்புத தருணங்களையும் உவகையோடு பகிர்ந்துகொண்டார் உலக நாயகன். 'சந்திரலேகா'வில் வரும் புகழ்பெற்ற டிரம் டான்ஸில் நடனமணிகளில் ஒருவராக இருந்தவர் தங்கப்பன் மாஸ்டர். அவர் தான் என் குரு" என்றார்.

12. 'எஸ்.எஸ்.வாசன் சார் மாதிரி, சீனிவாசன் சார்...நீங்களும் சினிமாவுக்கு வரணும். ஒரு படம் தயாரிக்கணும். அதுல நானும் கமலும் சேர்ந்து நடிக்க ரெடி. நான் சொன்னா கமல் கேட்பார். கால்ஷீட் பிரச்னையை நான் பார்த்துக்கிறேன். நிச்சயமா படம் பண்ணலாம். இன்னும் 50 வருஷங்களுக்கு பேசற மாதிரியான ஒரு பெரிய படம் பண்ணலாம் வாங்க' என்று மேடையிலேயே கால்ஷீட்டை கன்ஃபார்ம் பண்ணி, படம் எடுக்க அழைத்தார் ரஜினி.

சிவகார்த்திகேயன்

13. சூப்பர் ஸ்டாருக்கு விருது வழங்க மேடையேறிய விஜய்யும், அந்த நிகழ்வைத் தன் ஸ்டைலில் தொகுத்து வழங்க நின்றிருந்த சிவகார்த்திகேயனும் ரஜினியின் கால்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றது அழகான சர்ப்ரைஸ்.   விகடனைப் பற்றி விஜய் அடித்த கமெண்ட் ஹைலைட்! விஜய், ரஜினி என இருவர் முன், சிவகார்த்திகேயன் ரஜினி ஸ்டைலில் பேசியதும் மிகச் சிறப்பு!  அரங்கம் அதிரும் கைதட்டல்களுடன் அவர்கள் மூவரும் மேடையைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வு, 05.02.2017  மாலை  5.30 மணிக்கு  சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் காணொளி.. கீழே...

 

 

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்