Published:Updated:

'அதே கண்கள்' எப்படி உருவாச்சு தெரியுமா? - டீம் சொல்லும் டிட் பிட்ஸ்! #VikatanExclusive

'அதே கண்கள்' எப்படி உருவாச்சு தெரியுமா?  - டீம் சொல்லும் டிட் பிட்ஸ்! #VikatanExclusive
'அதே கண்கள்' எப்படி உருவாச்சு தெரியுமா? - டீம் சொல்லும் டிட் பிட்ஸ்! #VikatanExclusive

'அதே கண்கள்' படத்துக்கு இப்போது வரவேற்பு எகிறிக் கொண்டிருக்கிறது. அதன் ஆஃப் ஸ்க்ரீன் நாயகர்களான இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் ஆகியோரிடம் பேசினோம்.

ரவிவர்மன் நீலமேகம்

படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால ஒரு மாசம் எங்க எல்லாம் ஷூட் பண்ணப்போறோம்னு அந்த ஸ்பாட்டுக்கே போய் பார்த்தோம். அதிகமா இரவுக் காட்சிகள்-ங்கறதால, எந்த இடத்தில் லைட்டிங் எப்படி இருக்கு என்பதுவரை நோட் பண்ணிகிட்டோம். அப்படி ப்ளான் பண்ணதால அவுட்புட்ல ரிச் லுக் கிடைச்சிருக்கு. கலையரசன் ஒரே நேரத்தில் ரெண்டு விதமா நடிக்க வேண்டியிருக்கும். கண் தெரியாத ரோல் நடிச்சி முடிச்சிட்டு, டக்குனு வேற சட்டைய மாத்திட்டு வந்து கண் தெரியற ரோலையும் நடிச்சாரு. இந்த சேஞ்ச் வரை எல்லாத்தையும் முன்னாடியே இயக்குநர் கூட சேர்ந்து எல்லோரும் ப்ளான் பண்ணிட்டோம்.

லியோ ஜான் பால்

நானும், ரோஹினும் காலேஜ்ல இருந்தே நண்பர்கள். இந்த ஸ்கிரிப்ட் உருவாகும்போதே அதில் எது வேணும், எது வேணாம்னு எல்லாத்தையும் எடிட் பண்ண ஆரம்பிச்சாச்சு. உண்மைய சொல்லணும்னா, நீங்க தியேட்டர்ல என்ன பாத்தீங்களோ அவ்வளவுதான் மொத்தப் படமும். அதில் இருந்து எடுக்கறதுக்குன்னு எந்த சீனும் இல்ல. இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லாயிருக்குமேன்னு அவங்களே ஃபீல் பண்ணி சேர்த்த சீன்தான் இருக்கு. ஆனா, படம் பார்த்ததும் இது மியூசிகல் த்ரில்லரா இருந்தா பக்காவா இருக்கும்னு தோணுச்சு. ஜிப்ரான் சார் மியூசிக் அத சரியா கொண்டு வந்திருக்கு.

ஜிப்ரான்

முதல்ல சி.வி.குமார் சார் என்கிட்ட இதுக்காக பேசும்போது, ‘நீங்க கமல் சார் படத்தில் மட்டும்தான் வேலை செய்வீங்களா?’னு கேட்டார். நான் பதறிப்போய், ‘அப்படி எல்லாம் இல்ல சார், கதைதான் முக்கியம்’னு சொல்லி உடனே ரோஹின சந்திச்சேன். முதல் சந்திப்பிலேயே ரோஹின் மேல நம்பிக்கை இருந்தது. "கதை ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா, வெறும் மூணு பாட்டு தான் இருக்குனு சொன்னேன். "கவலைப் படாதீங்க, மூணு பாட்டையுமே அழகா ஷூட் பண்ணிக் கொடுக்குறேன்னு சொன்னார்; அதே மாதிரி செஞ்சிருக்கார். குறிப்பா அந்த தந்திரா பாட்டு, எல்லாருடைய காலர் ட்யூனா ஆனது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மியூசிக் அவ்வளோ அழகா வர்றதுக்கு காரணமா இருந்த எடிட்டர் லியோவுக்கு நன்றி சொல்லணும். மியூசிக் கொஞ்சம் அதிகமா வரணும்னு நான் ஃபீல் பண்ணினா, அதுக்கு ஏத்தா மாதிரி காட்சிகளை  கொஞ்சம் அதிகப்படுத்தறது,  இந்த இடத்தில் ஆரம்பிச்சு இப்பிடி பண்ணலாம்னு பேசிப் பேசி  நிறைய செஞ்சு கொடுத்தார். அதனாலதான் முழுப்படத்துடைய பின்னணி இசையும் ஒரே ரிதம்ல இருக்கும். படத்தில் இருக்கும் மூணு பாடல்களையும் பெண் பாடலாசிரியர்கள்தான் எழுதினாங்க. எல்லாரும் இது எல்லாம் என்ன ப்ளானிங்கானு கேட்டாங்க. ஆனா, அது தானா அமைஞ்ச ஒண்ணு. அனுராதா எழுதின ‘தந்திரா’ பாட்டுல ஹீரோயின திட்டும் படியான வரிகளா இருக்கும். ‘அடியே நீ களவாணி குட்டிக் காட்டேரி, கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ, அமுல் பேபி மேக்கப்பில் அனகோண்டா நீ’னு லிரிக் வீடியோ பார்த்தா சாதாரணமா ஏதோ லவ் ஃபெயிலியர் பாட்டு போல தெரியும். ஆனா, படத்தில் அது வேற ஒரு விஷயத்தை காட்டும். அதே போல பார்வதி எழுதின போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே, உமா தேவி எழுதின ‛இதோ தானாகவே எல்லா பாட்டும்’ அழகா வந்தது. அவங்களுக்கு என் நன்றி.

அந்தக் குட்டிக்காட்டேரியைக்  கேட்டதா சொல்லுங்க சார் என்று விடைபெற்றேன்.  

தந்திரா பாடலுக்கு:-

- பா.ஜான்சன்