Published:Updated:

டேவிட், சோலோவை தொடர்ந்து அடுத்த முயற்சி.. ஹரிஷ் கல்யாண் படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள்

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் ( 'தாராளபிரபு' )

`தாராள பிரபு' எனப் பெயரிப்பட்டிருக்கும் இப்படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.

2012-ல் பாலிவுட்டில் வெளியான `விக்கி டோனர்' படம் செம ஹிட்டடித்தது. ரொமான்டிக் ஜானரில் உருவாகியிருந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, யாமி கௌதம் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். `தாராள பிரபு' எனப் பெயரிப்பட்டிருக்கும் இப்படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

ஹரிஷ் கல்யாணோடு சேர்த்து விவேக், ஹீரோயினாக `தடம்' படத்தில் நடித்த தன்யா ஹோப் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் இயக்குநரான கிருஷ்ணா மாரிமுத்து, இதற்கு முன் தெலுங்கில் `யுத்தம் ஷரணம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இதுவே இவருக்கு முதல் படம்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் அப்டேட்டை நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண். எட்டு இசையமைப்பாளர்கள் `தாராள பிரபு'வுக்காக ஒன்று சேர்ந்து உள்ளனர் என்பதுதான் படத்தின் ஹைலைட்.

அனிருத், `சங்கத்தமிழன்', `பட்டாஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த விவேக்-மெர்வின், பரத்ஷங்கர், ஜே.சி, பிரதீப் குமார், தபாஸ் நரேஷ் ஆகிய நான்கு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழ் ராக் பேண்டான ஊறுக்கா, சமீபத்தில் `பேட்ட' படத்தில் `உல்லாலா' பாடலைப் பாடிய பிரிட்டிஷ் ப்ளேபேக் சிங்கர் இன்னோ கெங்கா, மேட்லி ப்ளூ பேண்ட்ஸ், தனியிசைக் கலைஞர் கேபர் வாசுகி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் இந்தப் படத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர்.

விந்து தானம், கருவுறுதல் என அதைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள் ஆகியவற்றைக் கலகலப்பாகப் பேசவுள்ளது `தாராளபிரபு'. எட்டு இசையமைப்பாளர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், விரைவில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

ஒரே படத்தில் பல இசையமைப்பாளர்கள் ஒன்றாக இணைந்து இசையமைத்து, இதற்கு முன்பு தமிழில் `டேவிட்', `சோலோ' உள்ளிட்ட படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு