Published:Updated:

சரணம், பல்லவிக்கான சவால்..! இதென்ன பாடல் கண்டுபிடிங்க பாக்கலாம்? #LyricsChallenge

VIVEK ANAND P
சரணம், பல்லவிக்கான சவால்..! இதென்ன பாடல் கண்டுபிடிங்க பாக்கலாம்? #LyricsChallenge
சரணம், பல்லவிக்கான சவால்..! இதென்ன பாடல் கண்டுபிடிங்க பாக்கலாம்? #LyricsChallenge

ப்ரேக்கிங் செய்திகளால் பரபரத்துக் கிடக்கிறது தமிழகம். ‛இப்படியே போய்க்கிட்டு இருந்தா தாங்காது மவராசாங்களா’ என கதறிக் கொண்டிருக்கிறான் தமிழன். உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய ஒரு சின்ன க்விஸ். கீழ்க்கண்ட பாடல் வரிகள் எந்த பாடலில் இடம் பெற்றவை? அந்தப் பாடல் இடம் பெற்ற படம் எதுவென்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். 

கவனமாகப் படியுங்கள். விடை தெரிந்தால் கமெண்ட் பகுதியில் பதியலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து அவர்களுக்கும் சவால் அளிக்கலாம். மொத்தம் 20 கேள்விகள். எங்கே... எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருக்கிறது பார்க்கலாம்.

ரெடி? ஸ்டார்ட் மியூசிக்!

1. இது இருளல்ல அது ஒளியல்ல
    இது ரெண்டொடும் சேராத பொன்நேரம்
    தலை சாயாதே, விழி மூடாதே 
    சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்  

2.  சுற்றும் உலகின் விட்டம் தெரியும் 
     சூரியன் பூமி தூரம் தெரியும் 
     கங்கை நதியின் நீளம் தெரியும் 
     வங்கக்கடலில் ஆழம் தெரியும் 
     காதல் என்பது சரியா தவறா 
     இது தான் எனக்கு தெரியவில்லை 

3. பழகிய ருசியே பழகிய பசியே 
    உயிரில் உன் வாசம் 
    நெருங்கிய கனவே, நொறுங்கிய கணமே 
    உதட்டில் உன் சுவாசம் 

4. வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் 
    நீதான் என்று பார்த்தேனடி சகி
    பெண்கள் கூட்டம் வந்தால், எங்கே நீயும் என்றே 
    இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி!

5. என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல் 
    மனதுள்ளே  வந்தாடுவதாரோ 
    என் சுவாச அறையாகி, எனை தாங்கும் உடலாகி 
    உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ 

6. தீப்பொறி எழ இரு விழிகளும் 
    தீக்குச்சி என என்னை உரசிட 
    கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே 
    அவள் அழகை பாட ஒரு மொழியில்லையே 
    அளந்து பார்க்க பல விழி இல்லையே 
   
7. எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன் 
    எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் 
    இனிமேல் நானே நீயானேன் 
    இவன் பின்னாலே போவேனே! 

8. தனிமை உன்னை சுடுதா 
    நினைவில் அனல் தருதா 
    தலையனைப்பூக்களில் எல்லாம் 
    கூந்தலில் மனம் வருதா ?

9. ஹே நீ என்ன பாக்குற மாதிரி 
    நான் உன்ன பாக்கலையே 
    நான் பேசும் காதல் வசனம் 
    உனக்கு தான் கேக்கலையே 
    அடியே என் கனவுல, செஞ்சு வச்ச சிலையே 
    கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே 

10. என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா?
     மலர்  சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா?
     உன் பெயரைச் சொன்னால் போதும்,
     நின்று வழிவிடும் காதல் நதியே 
     என் சுவாசம் உன் மூச்சில், உன் வார்த்தை என் பேச்சில் 

11. கலைந்தாலும் மேகம், அது மீண்டும் மிதக்கும் 
     அது போல தானே, உந்தன் காதல் எனக்கும் 
     நடை பாதை  விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு 
     நெருப்பிலும் முடியாதம்மா , நினைவுகளை அழிப்பதற்கு 
     உனக்காக காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன் 

12. எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து 
      ஈர மழை தூவுதே 
      எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை 
      என்றபோதும் இது நீளுதே 
      யார் என்று தெரியாமல், பேர் கூட அறியாமல் 
      இவளோடு ஒரு சொந்தம் உருவானதே 

 13. வாய் மொழிந்த வார்த்தை யாவும் 
       காற்றில் போனால் நியாயமா  
       பாய் விரித்து பாவை பார்த்த 
       காதல் இன்பம் மாயமா 

14.  உனக்குள் இருக்கும் மயக்கம், 
       அந்த உயரத்து நிலவை அழைக்கும் 
       இதழின் விளிம்பு துளிர்க்கும் 
       என் இரவினை பனியில் அணைக்கும்.

15.  எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
       சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
       என் பெண்மையும் இளைப்பாறவே
       உன் மார்பிலே இடம் போதுமே
       ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
       மெதுவாக இதயங்கள் இணைகிறதே

16.  மழையில் கழுவிய மண்ணிலே 
      தொலைந்த காலடி நானடி 
      முகத்தைத் தொலைத்த என் வாழ்வுக்கு 
      நிலைத்த முகவரி நீயடி       

17.  ஒரு சிறு வலி இருந்ததுவே, 
      இதயத்திலே இதயத்திலே 
      உனதிரு விழி தடவியதால் 
      அமிழ்ந்து விட்டேன் மயக்கத்திலே 
      உதிரட்டுமே உடலின் திரை 

18.  சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது.. 
      சில் வண்டுகள் காதல் கொண்டால்..செடி என்ன கேள்வி கேட்குமா.. 
      வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே 
      ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் 
      அது ரொம்ப பாவம் என்பதா

19. பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
      மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
      ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 
      ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 
      விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
      மார்போடு கண்கள் மூடவா

20.  இரவும் அல்லாத பகலும் அல்லாத
      பொழுதுகள் உன்னோடு கழியுமா 
      தொடவும் கூடாத படவும் கூடாத 
      இடைவெளி இப்போது குறையுமா ?

ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மதிப்பெண்கள், படத்தை சரியாக கண்டுபிடித்தால் ஒரு மதிப்பெண், பாடலை சரியாக கண்டுபிடித்தால் ஒரு மதிப்பெண். உங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை நீங்களே செக் செய்து கொள்ளுங்களேன். எந்தெந்த வரிகள், எந்தெந்த பாடல் எந்தெந்த படம் என்பதை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க...

தொகுப்பு - பு.விவேக் ஆனந்த்