Published:Updated:

சசிகலா மட்டுமில்ல... இவங்களும் சிங்கம் பன்ச் பேசிருக்காங்க மக்களே!

ஜெ.வி.பிரவீன்குமார்
சசிகலா மட்டுமில்ல... இவங்களும் சிங்கம் பன்ச் பேசிருக்காங்க மக்களே!
சசிகலா மட்டுமில்ல... இவங்களும் சிங்கம் பன்ச் பேசிருக்காங்க மக்களே!

ஒருபக்கம், பார்த்ததை எல்லாம் திங்குற ஓநாய் இல்ல பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்னு  கத்திக்கிட்டு இருக்குறாரு சூர்யா. இன்னொரு பக்கம், நாங்க அம்புட்டுப்பேருமே சிங்கம்தான்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க சசிகலா. இவுங்க மட்டும்தான் காது கிழியக் கத்தி டயலாக் பேசுவாங்களா.. நம்ம தமிழ் சினிமாவுல இதுமாதிரி பலபேர் சிங்கமாகவே மாறி சிலிர்க்க(!) வச்சிருக்காங்கப்பு.. அதையும் லைட்டா ஒரு பார்வை பார்த்துட்டு போங்க....

து 'சிங்கம் தனியாதான்டா வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்'னு 'கிரி' படத்துல அர்ஜூன் சொன்ன டயலாக். இது ஃபேமஸ் ஆச்சா இல்லையான்னு தெரியலை. ஆனா, இதே டயலாக்ல கொஞ்சம் இங்க்லீஸைப் பிச்சுப்போட்டு பஞ்ச் டயலாக்காக ஸ்கெட்ச் போட்டு ப் பேசி 'சிவாஜி' படத்துல ஸ்கோர் பண்ணிட்டுபோயிருப்பார் ரஜினி. 

சிங்கப்பெருமாளோட புள்ளை புலி.. புலி.. புலிடா..ன்னுதான் ஒரு சீன்ல சொல்லுவாரு விஜய். ஆனா அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை. காடுனா... நான் சிங்கம். கடல்னா... நான் (பீப் ). காத்துனா... நான் சூறாவளின்னுலாம் டயலாக் பேசிருப்பார். இத்தனை பேசியும் அவருக்கு அந்தப் படத்துல கேரக்டர் என்னவோ குருவிதான். வசனம் போச்சே...!

'சிங்கம் என்றால் என் தந்தைதான். செல்லம் என்றால் என் தந்தைதான்'னு 'அசல்'ல சீனியர் அஜித்தை சொல்லிருக்காரு ஜூனியர் அஜித். அவரு அப்பா சிங்கம்னா அவரோட பிள்ளை இவரும் சிங்கக்குட்டிதானேங்கிறதுக்காக இவரையும் லிஸ்ட்டுல சேர்த்தாச்சு மக்களே..

துதான் அந்த சிவாஜி படத்துல வந்த சிலிர்ப்பனுபவ சிங்கம் டயலாக். நிஜ சிங்கம்கூட அட் அ டைம்ல இவ்வளவுபேரை சிரிச்சிக்கிட்டே சமாளிக்குமான்னுதான் சத்தியமா தெரியலை. ஆமா, ஒரு டவுட். நிஜமாவே சிங்கம் சிங்கிளாதான் வருமா பாஸ்?

தானே... ஹீரோக்கள் மட்டும்தான் சிங்கமாகணுமா என்ன? இவரும் ரவுடிதான். இவரும் ஜெயிலுக்குப்போனவர்தான்  மக்களே.. அந்த சினம்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்ச, இந்த மொமென்டையும் பாத்துட்டுப்போங்க.. பாத்துட்டுப்போங்க.. பாத்துட்டுப்போங்க..

'அடி தூள்',  'சின்னத்திரையில் வெள்ளித்திரை'யின்னு ராதா கமெண்ட் சொல்லுறதுக்கு முன்னாடியே வெள்ளித்திரையில் வந்த 'தூள்' படத்து பாட்டு இது. படம் முழுக்க காலுல கட்டோடுதான் வருவார் விக்ரம்.  ஆனா அவரை ஏன் சிங்கம்போல நடந்துவாரான்னு அந்த பரவை முனியம்மா பாடுனாங்கன்னுதான் தெரியவே தெரியலை மக்களே.. என்னவா இருக்கும்..?!?!

நாட் பட் நாட் லீஸ்ட். இது 'அருணாச்சலம்' படத்துல வந்த சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாட்டு. கரண்ட் அரசியல் அட்ராசிட்டியோட ரொம்ப கனெக்ட் ஆகுற பாட்டு.  பாட்டெல்லாம் நல்லாத்தான் ஆரம்பிக்கும். ஆனா பாட்டு முடிஞ்சதும் கட்சியையே கலைச்சுட்டுபோயிடுவாரு ரஜினிகாந்த். ஹ்ம்ம்ம். இதெல்லாம் என்ன மாதிரியான குறியீடுன்னு தான் தெரியலை. ஆனாலும் அந்த வாயில்லா ஜீவனை வச்சு இன்னும் எத்தனைபேருதான் எவ்வளவு நாளுக்குத்தான் பாடாப்படுத்துவாங்களோன்னுதான் தெரியலை மக்களே... அவ்வ்வ்வ்.

ஜெ.வி.பிரவீன்குமார்