Published:Updated:

‛அப்பாவைப் பாத்து கத்துக்குங்க..!’ - சிம்புவுக்கு கே.வி.ஆனந்த் டிப்ஸ் #VikatanExclusive

‛அப்பாவைப் பாத்து கத்துக்குங்க..!’ - சிம்புவுக்கு கே.வி.ஆனந்த் டிப்ஸ் #VikatanExclusive
News
‛அப்பாவைப் பாத்து கத்துக்குங்க..!’ - சிம்புவுக்கு கே.வி.ஆனந்த் டிப்ஸ் #VikatanExclusive

‛அப்பாவைப் பாத்து கத்துக்குங்க..!’ - சிம்புவுக்கு கே.வி.ஆனந்த் டிப்ஸ் #VikatanExclusive

“ஹீரோயின்னா மூணு பாட்டு, ரெண்டு சீன் நடிச்சா மட்டும் போதும்னு நான் நினைக்க மாட்டேன். என் படங்களில் நாயகிகளுக்கான முக்கியத்துவம் நிச்சயம் இருக்கும். ஒரு திரைப்படம் இயல்பான சினிமாவா மாறணும்னா, நாம எப்படிப் பேசுறோமோ அப்படியேதான் படத்தையும் இயக்க வேண்டிய கட்டாயம் இருக்கு!” - ஜாலியான ஒரு டைட்டில், ஆனால் சீரியஸான கதையுடன் களம் இறங்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ‘கவண்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். 

விஜய்சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் இருவருடன், ‘அயன்’ பட வில்லன் ஸ்கை வாக்கர் (ஆகாஷ்தீப் சைகல்) என வித்தியாசமான காம்போதான் 'கவண்'.  இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலனுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபர புரொடக்‌ஷன் வேலைக்கு நடுவே கே.வி.ஆனந்துடன் ஒரு தேநீர் சந்திப்பு. 

"‘கவண்’ டைட்டிலே வித்தியாசமா இருக்கே?"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ கடைசியா ‘அனெகன்’... இப்படி என் படங்களின் தலைப்பு தமிழ்ப் பெயரா இருக்கணும்ங்கிறதுல கவனமா இருப்பேன்.  சின்ன உண்டி வில்லை வைத்து பெரிய மலையைத் தகர்க்கிற மாதிரியான கதைங்கிறதால படத்துக்கு ‘கவண்’ பொருத்தமா இருக்கும்னு தேர்ந்தெடுத்தேன். 

"கதை என்னவென்றாவது சொல்லுங்களேன்?"

“மிகப் பெரிய ராட்சஷன், எல்லாத்தையும் அவனோட கட்டுப்பாட்டுக்குள் வச்சிருக்கான். அவனை சாதாரண ஒருவன் வீழ்த்துறதுதான் இந்தப் படத்தோட ஒன்லைன். ராட்சஷனை வீழ்த்துறதுக்கு உதவும் ஆயுதம்தான் இந்த 'கவண்'. ஒரு சாதாரண ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்தான் விஜய்சேதுபதி. அங்க கார்ப்பரேட் மோசடி நடக்குது. பெரிய சூழ்ச்சியை, சின்ன சூழ்ச்சி செய்து வீழ்த்துறதுதான் கதை. இதுக்கு நடுவுல பெரிய பிரச்னை ஒன்றையும் பேசியிருக்கோம். அது என்னென்னு கேட்காதீங்க, அது சஸ்பென்ஸ்.”

"உங்க எல்லா படத்துக்குமே ஹாரிஸ்தான் மியூஸிக். இந்தப் படத்தில் என்னாச்சு?"

“தொடர்ந்து ஒரே டீமுடன் வேலை செய்யும்போது, ஒரே மாதிரியான விஷயங்கள்தான் படமாகவும் மாறும். இப்பவும் ஹாரிஸ்-ம் நானும் நல்ல நண்பர்கள். ‘கவண்’ படம் பத்தி நிறையப் பேசியிருக்கோம். இருந்தாலும் புதுசா, வித்தியாசமான இசை இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. அதற்கான முதல் சாய்ஸ் ஹிப்ஹாப் ஆதி. ஹாரிஸ் தியானம் பண்றமாதிரி இசையமைச்சா, இவரு விளையாட்டுத்தனமா ஸ்டூடியோவில் இருப்பார். எப்போ பாட்டுக்கான ட்யூன் வரும்னே சொல்ல முடியாது. ஆனா ஒவ்வொரு பாட்டும் ட்ரெண்டிங்! ”

"எல்லோரையும் மாத்துறீங்க, எடிட்டர் ஆண்டனியை இன்னும் மாத்தலையே?"

“சாப்பிடுற விஷயத்தைத் தவிர எனக்கும் ஆண்டனிக்கும் எந்த விஷயமும் ஒத்துப்போகாது. எனக்கும் அவருக்கும் எடிட்டிங் மேஜையில் அதிகமா சண்டைதான் வரும். எப்போதுமே என் கருத்துக்கு எதிரானவர் ஆண்டனி. ஜால்ரா போடுறவங்களை  கூட வச்சிக்கிறதைவிட எதிரியைப் பக்கத்துல வச்சிக்கிறதுதான் பலம். சமரசமே இல்லாமல் சரமாரியா வெட்டித் தூக்குறவர் ஆண்டனி. ஆனா, அவரை என் படத்துல இருந்து தூக்குறது கஷ்டம்தான்." 

‛‛நிறைய ஹீரோக்கள் நடிக்க வாய்ப்பு கேட்ட சமயத்தில் விஜய்சேதுபதிதான் பொருத்தமாக இருப்பார்னு எப்படித் தோணுச்சு?’’

“படத்தில் ஹீரோ ஒரு காமன்மேன். ரொம்ப சாதாரணமா இருக்கணும். பெரிய பிரச்னைகளை எதார்த்தமா எதிர்கொள்ளணும். அந்த மாதிரியான சாயல் விஜய்சேதுபதிகிட்ட இருக்கு. ஒரு காட்சியில் விஜய்சேதுபதி வில்லன்கிட்ட தோற்றுவிடுவார். அந்த சீன்லகூட ஹீரோ ஜெயிச்ச மாதிரிதான் நமக்குத் தெரியும். நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, நம்ம விரும்புற கதாபாத்திரத்தில் ஏற்கெனவே நடிச்ச நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆடியன்ஸும் ஈஸியா புரிஞ்சிக்குவாங்க. இதுவே பெரிய நடிகரை நடிக்க வைச்சோம்னா, அவங்களுக்காகவே ஸ்பெஷலா இரண்டு பாட்டு, காமெடி சீன்லாம் வைக்க வேண்டியதா இருக்கும்.” 

டி.ஆர்.? 

“எந்த விஷயத்தையும் வெளிப்படையா வெடிச்சு சொல்றமாதிரியான ஒரு கேரக்டர்தான் டி.ஆர் சாருக்கு இந்தப் படத்தில். இந்த கேரக்டரில் நடிக்க ஆரம்பத்தில் முடியவே முடியாதுனுதான் சொன்னார். கதையைக் கேட்ட பிறகும் சிரமப்பட்டுத்தான் அவரை நடிக்க வைச்சேன். ஆனா சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார். ஏதும் கூடுதலா டயலாக் சேர்க்கணும்னாகூட கேட்பார். இரண்டு வார்த்தைனு சொல்லிட்டு ஆயிரம் வார்த்தைகள் பேசிடுவார். எடிட்டிங்கில் பார்த்துத் தூக்கிங்கோங்கனு கேஷுவலா சொல்லிட்டுப் போய்டுவார். எப்பொழுதுமே எனர்ஜியோட இருக்குறதுதான் டி.ஆர் ஸ்டைல். ஒரு காட்சியில் கார் பேனட்டிலிருந்து சுத்தி வந்து குதிக்கிறார். உடனே சிம்புவுக்கு போன் பண்ணி, 'அப்பாகிட்ட நீ கத்துக்கவேண்டிய விஷயம் நிறைய இருக்கு'னு சொன்னேன்.” 

படம் எப்போ ரிலீஸ்?

“ஷூட்டிங் 100% முடிஞ்சு, ரீ-ரெக்கார்டிங் வேலைகளை ஹிப்ஹாப் ஆதி கவனிச்சிட்டு இருக்கார். வர்ற மார்ச் முதல் வாரமே சென்சாருக்குப் படத்தை அனுப்புறோம். எப்படியும் ஏப்ரல் மாதத்துக்குள் படத்தை எதிர்பார்க்கலாம்!” 

- முத்து பகவத் -