Published:Updated:

எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan

எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan
எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan

எல்லாருக்கும் ஃப்ரெண்டு... இவர் படம் வந்தாலே டிரெண்டு! #HBD_Sivakarthikeyan

எந்தப் பின்புலமும் இல்லாமல் தானாக ஒரு பாதை அமைத்து வந்து ஜெயிப்பவர்கள் வெகு சிலர்தான். அந்தத்துறை சினிமாவாக இருக்கும் பட்சத்தில் அது இன்னும் சவாலான ஒன்று. தொலைக்காட்சித் தொகுப்பாளர் சினிமாவில் ஜெயிப்பதெல்லாம் ஷாரூக்த்தனம் என நினைத்திருந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் வெற்றி வியப்பாகவே இருக்கும். அவரின் வெற்றிகூட "கண்டிப்பா இன்னும் ரெண்டு படம்தான், காலி ஆயிடுவான் பாரு" என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால், எந்த நெகட்டிவ் வார்த்தைகளும் தன்னை பாதிக்கவிடாமல், எல்லோருக்கும் பிடிக்கும் ஹீரோ ஆகியிருக்கும் சிவாவுக்கு இன்று பிறந்தநாள்.

இன்றைய பர்த்டே பேபியின் வளர்ச்சியும் மக்கள் மனதில் இடம் பிடித்த வரலாற்றையும் பற்றி...

சிவாவுக்கு இது சினிமாவில் ஐந்தாவது ஆண்டு, இப்போது அவருக்கு இருக்கும் வரவேற்பை வைத்துப்பார்க்கும் போது, தன்னை ஒரு என்டர்டெயினராக நிரூபிக்க அவருக்கு இந்தக் காலமே போதுமானதாக இருந்திருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஹீரோவாக இருப்பது அல்லது அதற்குத் தன்னை வடிவமைத்துக் கொள்வது என்பது லேசுபட்ட காரியம் கிடையாது.  தொலைக்காட்சி என்ட்ரி மூலம் அதை முன்பே செய்திருந்தார் சிவா. ஆனால், அதனால் தான் அவரது சினிமாவும் ரசிக்கப்படுகிறது என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. சினிமா, தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு ஆடவேண்டிய ஆட்டமே வேறு. படத்தில் டான்ஸ் ஆடவேண்டும் என்றால் முறையாக கற்றுக் கொள்ளத் தான் வேண்டும், ஃபைட் இருக்கிறது என்றால் சண்டைபிடிக்கத் தான் வேண்டும். "அவர் டிவியில் இருந்து வந்தவர். அதனால் அவர் டான்ஸ், ஃபைட் செய்யத் தேவையில்லை, ச்சும்மா வந்து நின்னா போதும்" என யாரும் சொல்லப் போவதில்லை. எவ்வளவு பெரிய ஸ்டார் ஆனாலும் உழைப்பு இல்லாமல் எதுவும் கிடைக்காது. 

தொடர்ச்சியான வெற்றி யாருக்குமே ஒரு தடுமாற்றத்தைத் தந்தே தீரும். ஆனால், அந்தத் தடுமாற்றம் இல்லாமல், கொஞ்சம் நிதானமாக தனக்கு என்ன வரும், அதை வைத்து வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்கிற சிவாவின் மூவ் கவனிக்கப்படப் வேண்டியது. `மனம் கொத்திப் பறவை’ சிவகார்த்திகேயனுக்கும் `எதிர்நீச்சல்’ சிவகார்த்திகேயனுக்கும், `ரெமோ’ சிவகார்த்திகேயனுக்குமான மாறுதல்களை கவனித்தால் அது புரியும். மிகச் சிறந்த நடிப்பு அனுபவத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும்.. ஆனால் அது தவிர வேறு என்ன விஷயங்களில் நாம் வீக் என யோசிப்பதும், அதை சரி செய்வதுமான மெனக்கெடல்களை சிவாவால் செய்ய முடிந்தது. 

சிவா நல்ல நடிகர்னு இன்னும் நிருபிக்கலையே என்கிற கேள்வி மிக சுலபமாக எல்லோரும் கேட்கக் கூடியது. காமெடி, எண்டர்டெயினர் எல்லாம் ஓகே, புதுப் புது முயற்சி பண்றதா ஐடியா இல்லையா? என்ற கேள்விக்கு ஆனந்தவிகடன் பேட்டியில் சிவா சொன்ன பதிலையே நானும் பகிர்கிறேன்,

" 'இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. எங்கே போனாலும், 'என் மூணு வயசுப் பொண்ணு உங்க ஃபேன்’, 'என் அஞ்சு வயசுப் பையன் உங்களை மாதிரியே பண்ணுவான்’னு சொல்றாங்க. குழந்தைங்களுக்கு என் காமெடி, பாடி லாங்வேஜ் பிடிச்சிருக்கு. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணணும்னு யோசிச்சுத்தான் கதை கேட்கிறேன். வித்தியாசமா பண்றோம்னு ஏடாகூடமா ஏதாவது பண்ணி அவங்களைப் பயமுறுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். அதே சமயம் ஆக்ஷன், எமோஷன், காதல்னு எல்லா ஃபீல்லயும் அடுத்தடுத்த லெவல் போகணும்னு ஆசை இருக்கு"

ஆடியன்ஸுக்கு சிவாவைப் பிடிப்பதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கிறது,

1. சிவாவை யாரோ எனப் பார்க்க நம்மால் முடியாது. நம் வீட்டுக்குள்ளயே இருந்த ஒருத்தர், இப்போ ஜெயிச்சிட்டார் என்கிற நினைப்புதான் அதற்கு காரணம். எல்லாருடனும் நட்பு பாராட்டுவதால், நல்ல ஃப்ரெண்ட்லி இமேஜ். ஃப்ரெண்டா இருந்தாலே, டிரெண்டிங் ஆகிடுவாங்கள்லயா! அப்படித்தான் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் இவர் படங்களும் டிரெண்டாக ஆரம்பித்து.... இந்த உயரம் எட்டியிருகிறார்.  

2. நமக்குத் தேவையான என்டெர்டெயின்மென்டைக் கொடுத்துக் கொண்டே அவர் அடுத்த லெவலுக்கு செல்வது. சடாலென முழு நீள ஆக்‌ஷன் படத்தில் சிவா நடித்து மாஸ் ஹீரோ ஆக முயற்சி செய்திருந்தால் அது வெற்றியடைந்திருக்குமா தெரியவில்லை. ஆனால், நம்மையும் மகிழ்வித்துக்  கொண்டே தனக்கு ஆக்‌ஷனும் வரும் என காக்கிசட்டையில் காட்டினார். அதற்குப் பிறகு ரஜினிமுருகனிலும், ரெமோவிலும் அவர்  சண்டை போடும் போது நமக்கு அது தொந்தரவாக இல்லை. இது தான் சிவாவின் ஸ்மார்ட்னெஸ்.

3.சிவா தவிர்க்கவே முடியாத ஒரு ரோல் மாடலும் கூட. இன்றைக்கும் தொலைக்காட்சியில் வேலை செய்யும் பல வி.ஜேக்களுக்கும், ‘நம்மால் ஜெயிக்க முடியுமா?’ என யோசிக்கும் பலருக்கும் அவர்கள் முன்பே நிகழ்ந்த சிவாவின் வளர்ச்சி நம்பிக்கை தரக்கூடியது.

 தொடர்ந்து பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் சிவா!

- பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு