Published:Updated:

விரைவில் வெளியாகிறது 'பாட்ஷா' படத்தின் டிஜிட்டல் வெர்ஷன்! #BaashaForever

Vikatan Correspondent
விரைவில் வெளியாகிறது 'பாட்ஷா' படத்தின் டிஜிட்டல் வெர்ஷன்! #BaashaForever
விரைவில் வெளியாகிறது 'பாட்ஷா' படத்தின் டிஜிட்டல் வெர்ஷன்! #BaashaForever

மீபகாலங்களில் முன்பே வெளியாகி ஹிட்டடித்த படங்களை, நவீன டிஜிட்டல்
வெர்ஷன் ஆக்கி வெளியிடுவது, தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விரைவில் வெளியாகிறது 'பாட்ஷா' படத்தின் டிஜிட்டல் வெர்ஷன்! #BaashaForever

இந்நிலையில், 1995-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் ரகுவரன், நடிகை நக்மா உள்ளிட்ட பலரும் நடித்து மாஸ் ஹிட்டான 'பாட்ஷா' படத்தின்  நவீன டிஜிட்டல் வெர்ஷன், வரும் மார்ச்-3-ம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தச் செய்தி, சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மேலும், இந்தத் தகவலைக் கொண்டாடும்விதமாக ட்விட்டரில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் #BaashaForever - எனும் ஹேஷ்டேக்கை உருவாக்கி, இந்தப் படம் குறித்த தங்களின் நினைவுகளைப் பதிவிட்டுவருகிறார்கள்.