மாயா முதல் பஞ்சு மிட்டாய் வரை... இந்தப் படங்களின் குறும்பட வெர்ஷன் பார்த்திருக்கீங்களா? | Have you seen the short film version of these movies ?

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (21/02/2017)

கடைசி தொடர்பு:21:21 (21/02/2017)

மாயா முதல் பஞ்சு மிட்டாய் வரை... இந்தப் படங்களின் குறும்பட வெர்ஷன் பார்த்திருக்கீங்களா?

குறும்படங்களில் இருந்து பயணத்தைத் தொடங்கிய இயக்குநர்கள் பலர், இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, பிரமாதமான படங்களை ரசிகர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், அட்லி என பல உதாரணங்களைச் சொல்லலாம். அப்படி குறும்படம் டூ முழு நீளத் திரைப்படத்திற்கு ஜம்ப் செய்து ஹிட்டடித்த இயக்குநர்களைப் போலவே குறும்படமாக இருந்து முழு நீளத் திரைப்படமாக ஜம்ப் அடித்து, ஹிட்டடித்த படங்களையும் பார்த்துடலாமா பாஸ்...

குறும்படம் டூ முழுநீளத்திரைப்படம்

காதலில் சொதப்புவது எப்படி :

சித்தார்த் - அமலாபால் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ரொமான்டிக் காமெடி திரைப்படம். இந்தப் படத்தின் குறும்படம் வெர்ஷனில் சித்தார்த், அமலாபால் கதாபத்திரங்களில் நடித்தது 'இனிது இனிது' ஆதித் மற்றும் பிரபல நடிகை ரெஜினா கஸான்ட்ரா. வாவ்... பாபி சிம்ஹா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்தது அவர்களே தான். தமன் இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தை இயக்கியது பாலாஜி மோகன். 

முண்டாசுப்பட்டி :

கேமராவைக் கண்டாலே தெறித்து ஓடும் ஒரு கிராமத்தில், இரண்டு போட்டோகிராபர்கள் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்ற கதையை செம ஜாலியாக சொன்ன குறும்படம்தான் 'முண்டாசுப்பட்டி'. பின்னர், அதே கதையைக் கொஞ்சம் டெவலப் செய்து திரைப்படமாக்கினார் இயக்குநர் ராம் ( கற்றது தமிழ் ராம் இல்லைங்கோ). 'முண்டாசுப்பட்டி' படத்தில் விஷ்ணு விஷால் ஏற்று நடித்த 'கோபி' கதாபாத்திரத்தை குறும்படத்தில் ஏற்று நடித்தது காளி வெங்கட். குறும்படத்தில் வரும் முனீஸ்காந்த் கதாபாத்திரத்திற்கு டப்பிங் மட்டும் ராமதாஸ் என ஏகப்பட்ட ஆச்சரியங்கள் இருக்கு. நீங்களே குறும்படத்தை பார்த்துடுங்கோ...

பண்ணையாரும் பத்மினியும் :

கிராமத்திலுள்ள ஒரு பண்ணாயாருக்கும் அவருடைய ‘ப்ரீமியர்’ பத்மினி காருக்கும் இடையே உள்ள உறவை அவ்வளவு அழகாகச் சொல்லிய குறும்படம் ‘பண்ணையாரும் பத்மினியும்'. பலூன் வாங்க ஆசைப்பட்டு காசு சேமித்து வைக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய படம் 'ஃபைவ் ரூபீஸ்'. இந்த இரண்டு குறும்படங்களையும் அழகாக இணைத்து 'பண்ணையாரும் பத்மினியும்' எனும் முழுநீள திரைப்படமாக தந்திருப்பார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் குறும்படத்தில் நடித்தது யாரென தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க...

பஞ்சு மிட்டாய் :

காதல் சுகுமார், சென்ட்ராயன் நடிப்பில் எஸ்.மோகன் இயக்கிய ஃபேன்டஸி காமெடி திரைப்படம் ‘கலரு'. இந்த குறும்படம் தான் தற்போது மாகாபா ஆனந்த், சென்ட்ராயன், நிகிதா விமல் நடிப்பில் 'பஞ்சு மிட்டாய்' எனும் முழுநீள திரைப்படமாக தயாராகிவுள்ளது. ஒருமுறை இயக்குநர் ஷங்கர் 'வித்தியாசமான கான்செப்ட்டால் என்னை ஈர்த்தபடம்' என 'கலரு' திரைப்படத்தை குறிப்பிட்டிருந்தார்.

மாயா :

நயன்தாரா, ஆரி, மைம் கோபி ஆகியோர் நடிப்பில் நம்மை மிரட்டிய ஹாரர் படம். சாதுர்யமாக வடிவமைக்கபட்ட திரைக்கதைக்காகவும், மேக்கிங்கிற்காகவும் மக்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம். இயக்குநர் அஸ்வின் சரவணன் ‘மாயா' திரைப்படத்தை முதலில் குறும்படமாகத் தான் இயக்கினார். படத்தில் வரும் இரண்டே இரு கதாபாத்திரங்கள் மட்டும் இந்த குறும்படத்தில் இடம்பெற்றிருக்கும். அது என்னென்ன கதாபாத்திரங்கள்னு தெரிஞ்சுக்கனுமா? நீங்களே பார்த்துடுங்க மக்களே...

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்