Election bannerElection banner
Published:Updated:

தமிழ் சினிமாவின் 'அல்ரெடி கேம் ப்ரோ' வில்லத்தனங்கள்!

தார்மிக் லீ
தமிழ் சினிமாவின் 'அல்ரெடி கேம் ப்ரோ' வில்லத்தனங்கள்!
தமிழ் சினிமாவின் 'அல்ரெடி கேம் ப்ரோ' வில்லத்தனங்கள்!

தமிழ் சினிமாவின் 'அல்ரெடி கேம் ப்ரோ' வில்லத்தனங்கள்!

டத்தில் ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லனும் முக்கியம் பாஸ். அப்படி இருக்கும்போது ஜெய் சங்கர் காலத்திலிருந்து இன்று வரை மாறவே மாறாத வில்லத்தனமான க்ளிஷே சீன்ஸும் வில்லன்களுக்கே உண்டான லாஜிக் காட்சிகளும் நிறைய இருக்கே பாஸ்..! வாங்க சொல்றேன்..! என்னா வில்லத்தனம்..!

* எந்த ஒரு சூழ்நிலையிலும் வில்லன்கள் எப்போதுமே சம்பவ இடத்திற்குப் போகமாட்டார்கள்.  அப்படிப் போறதா இருந்தா அது க்ளைமாக்ஸாத்தான் இருக்கும். காலம் காலமா நடந்து வரும் சம்பிரதாயம் பாஸ். அதை மாற்ற முடியாது. அப்படி ஒரு தருணத்தில் இவர் ஆட்களில் ஒரு ஆளை ஹீரோவுடன் பேச தூது விடுவதோ அல்லது சமரசம் பேசவோ அல்லது ஹீரோவை மர்டர் பண்ணவோ  அனுப்பி வைப்பார் மெயின் வில்லன். அடுத்த சீனில் எதிர்பார்த்தது போலவே ஹீரோவைப் பார்க்கச்  சென்ற வில்லனின் ஆள் பல்ப் வாங்கிட்டுதான் வருவான். வந்தும் வாயை வைத்து சும்மா இருக்காமல் `ஹீரோவுடன் மோத வேண்டாம்... அவர் உங்களைவிட பலசாலி!' என்று வில்லனிடமே வந்து சொல்லுவான். வெயில் நேரத்தில் வெந்நீர் குடித்ததைப்போல வெறியாவார் மிஸ்டர் வில்லன் அண்ணாச்சி. சும்மாவா இருப்பார்? சட்டைப் பையிலிருக்கும் துப்பாக்கியையோ அல்லது கூஜா ஜாடியையோ எடுத்து பொட்டுனு போட்டுத் தள்ளிடுவார். அவனும் பரிதாபமாக இறந்துவிடுவான். பாவத்த!

* இந்த டயலாக்கானது ஏறத்தாழ எல்லாப் படங்களிலும் இடம்பெற்றிருக்கும். அதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?  ஹீரோவை போட்டுத்தள்ள வில்லன்  எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனால் இந்த முறையைத் தான் கையாளுவான். அதென்னனு தானே கேட்குறீங்க?  ஹீரோவை வில்லன் ஒன்றும் செய்ய முடியவில்லையென்றால் ஹீரோவுக்கு நெருக்கமான ஆளைக் கடத்தி மிரட்டுவான். கடுப்பில் தான் கடத்திய ஆளையே கொன்றுவிடுவதும் உண்டு. அப்போது ஹீரோ சொல்லும் பொதுவான டயலாக்... ``பிரச்னை உனக்கும் எனக்கும்தான் அவங்களை விட்ரு''! ஹீரோவுக்கு நெருக்கமானவர்கள் யாரையாவது கடத்தினாலே போதும். ஸ்கிரீனில் மூன்று பேரையும் பார்த்தால் ஹீரோவிடமிருந்து கண்டிப்பாக அந்த டயலாக்கை எதிர்பார்க்கலாம். எத்தனை நாளா பாஸ்..!

* எல்லாம் முடிந்த பின் எதிர்பார்த்தது போல் க்ளைமாக்ஸில் வில்லனுடன் சண்டை தான் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி அந்தக் காட்சி எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் இந்த சின்ன லாஜிக் எல்லாப் படத்திலும் இடிக்கும். இருவருக்கும் சண்டைக் காட்சி வரும்பொழுது  360 டிகிரிக்கு சென்று சண்டை போடுவது வழக்கம். ஆனால் ஏதாவது ஒரு பொருளை இடித்துத் தள்ளாமல் அந்த சண்டைக் காட்சி முழுமையடையாது. அப்படி பொருட்களில் காய்கறி வண்டி,  டயர், அடி பம்ப் குழாய், மாட்டு வண்டி, அலுமினியப் பாத்திரக்கடை என ஸ்க்ரீனில் காட்டும் எல்லாப் பொருட்களையும் அடித்து நொறுக்கித் தான் அந்த சண்டைக் காட்சியே முடிவுக்கு வரும். இன்னும் எத்தனைக் காலத்துக்கு தான் பாஸ் உடைச்சுக்கிட்டே இருப்பீங்க?

* படத்தில் மெயின் வில்லனைத் தவிர சைடு வில்லனும் ஒருசில படத்தில் இருப்பதுண்டு.  க்ளைமாக்ஸ் வரும் வரை வில்லனை விட வில்லத்தனமான செயல்களையெல்லாம் செய்துவிட்டு `ஆத்தி.. க்ளைமாக்ஸ் வரப்போகுது..!' என்று தெரிந்த பின்னர் மனம் திருந்திவிடுவார் சைடு வில்லன். பெரும்பாலும் நிழல்கள் ரவி, ராஜீவ் வகையறா! திருந்துவதோடு, 'நான் பண்ணுன பாவத்துக்குப் பிராயச்சித்தமா நான் உங்களை சேர்த்துவைக்கிறேன்!' என ஹீரோ-ஹீரோயினையும் சேர்த்து வைக்க மெனக்கெட்டு வில்லனால் கொல்லப்படுவார் இந்த சைடு வில்லன் என்ற குணச்சித்திரம்!   அப்படியும் இல்லையென்றால் படம் முழுக்க ஒருவனுக்கு டயலாக்கே இல்லாமல் வில்லனிஸமாக காட்டிவிட்டு கடைசியில் டம்மியாக்குவது. இதுவும் இப்போது வெளி வரும் கமர்ஷியல் படங்களில் ட்ரெண்டாகிவிட்டது. (எதிர்பார்ப்பை எகிற வைக்கிறாங்களாமாம்..!) அதுவும் இல்லையென்றால் உச்ச கட்ட ட்விஸ்ட்டாக படத்தின் வில்லனே திருந்திவிடுவார். ஆக மொத்தம் திருந்தும் சீக்குவென்ஸ் படத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். நான் இப்போ நல்லவன்டா மொமன்ட்! 

* இது எதுவுமே இல்லையா? வில்லன் தன்னைத் தானே அழித்துக்கொள்வது. 'வட்டாரம்' பட 'குருபாதம்' முதல் 'தனி ஒருவன்' 'சித்தார்த் அபிமன்யு' வரை இதான் நடப்பது வழக்கமாகிவிட்டது. 'ஒருத்தன் கால புடிச்சு இன்னோருத்தன் வாழக்கூடாது' அல்லது 'நீ கொடுத்த வாழ்க்கையை நான் ஏத்துக்கல! ஆனா நீ கேட்ட வாழ்க்கையை நான் கொடுத்துட்டேன்'னு பன்ச் டயலாக் பேசி படத்தையே முடித்துவிடும் கலாச்சாரமும் வில்லன்களுக்குப் பொருந்தும். `ஹீரோகிட்ட சாவுறதுக்கு நானே செத்துடுறேன்'னு  வில்லனே செத்துப்போறது வில்லன்களிடம் இருக்கும் நல்ல விஷயம். அதையும் தாண்டி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது சாதாரண காரியம் இல்லைங்கோ! படத்தை ஒருவழியா முடிக்கணுமா வேண்டாமா..?

- தார்மிக் லீ

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு