Published:Updated:

சிங்கம் vs சாமி... ராகவன் vs சத்யதேவ்! - இது ஹாலிவுட் லெவல் பயாஸ்கோப்

சிங்கம் vs சாமி... ராகவன் vs சத்யதேவ்! - இது ஹாலிவுட் லெவல் பயாஸ்கோப்
சிங்கம் vs சாமி... ராகவன் vs சத்யதேவ்! - இது ஹாலிவுட் லெவல் பயாஸ்கோப்

சிங்கம் vs சாமி... ராகவன் vs சத்யதேவ்! - இது ஹாலிவுட் லெவல் பயாஸ்கோப்

ஹாலிவுட்ல சூப்பர் ஹீரோக்களுக்குன்னு மார்வெல், டி.சினு ரெண்டு யுனிவெர்ஸ் இருப்பது நம்ம எல்லாருக்கும் தெரியும். (இது பத்தி சரியா தெரியாதவங்களுக்கு... இவை ரெண்டுமே காமிக் நிறுவனங்கள். அயன்மேன், ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க் போன்றவர்கள் மார்வெல் யுனிவெர்ஸின் சூப்பர்ஹீரோக்கள். பேட்மேன், சூப்பர்மேன், ஒண்டர் உமன், அக்வாமேன் போன்று சிலர் டி.சி யூனிவேர்ஸின் சூப்பர்ஹீரோக்கள். இவர்களுக்கு தனித்தனியே படங்கள், இவர்கள் சேர்ந்து வரும் அவெஞ்சர்ஸ், ஜஸ்டிஸ் லீக் போன்ற படங்கள் என எப்போதும் லிஸ்ட் போட்டு படங்களை ரிலீஸ் செய்வார்கள் மார்வெல், டி.சி நிறுவன அதிபதிகள்) மார்வெல்தான் சூப்பர், இல்லல்ல டி.சிதான் சூப்பர் என சண்டை போடவும் அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி நம்மூரிலும் ஒரு ட்ரெண்ட் வந்தால்..!

தமிழ் சினிமால தனியே சூப்பர்ஹீரோ என்று ஒருத்தர் தேவையே இல்ல. சாதாரணமாவே எல்லாப்படத்துலயும் சூப்பர் ஹீரோ சாகசங்களை மிஞ்சுற அளவுக்கு நம்ம ஹீரோக்களே ஸ்டன்ட் பண்ணுவாங்க. அதுல மக்களின் ஹீரோவா காட்டணும்ன்னா இயக்குனர் கையில் ஆயுதமா எடுப்பது காக்கிசட்டையைத்தான். அப்படி பார்த்தால் நமக்கும் ரெண்டு யுனிவெர்ஸ் இருக்கு. ஒன்னு ஹரி யுனிவெர்ஸ், இன்னொண்ணு கௌதம் மேனன் யூனிவெர்ஸ்.

ஹரி யூனிவெர்ஸ்னு எடுத்துக்கிட்டா சிங்கம் என அழைக்கப்படும் துரைசிங்கம்தான் மெயின் ஹீரோ. அடுத்ததா சாமி எனப்படும் ஆறுச்சாமி. இவங்களைத் தவிர்த்து 'செல்வம்', 'வீரபாண்டி'(வேங்கை), கெட்டவன்(தாமிரபரணி), சக்திவேல்(கோவில்), ஐயாதுரைனு இன்னும் நிறைய பேர் இந்த யுனிவெர்ஸ்ல இருக்காங்க. பெரும்பாலும் நம்ம ஊர்ப்பக்கம்தான் இந்த ஹீரோக்கள் கதை இருக்கும். சுமோவில் தொடங்கி கன்டெயினர் லாரி வரைக்கும் பாரபட்சம் பார்க்காம சாகசம் காட்டும் இந்த யுனிவெர்ஸில் அடுத்ததா சாமி 2 ரிலீஸ் ஆகுறதா இருக்கு. அதன்பின் இந்த யுனிவெர்ஸின் ரெண்டு ஹீரோக்கள் இணையும் படம் வரலாம். அது திருநெல்வேலி ரவுடி போலீஸ் சாமியும், தூத்துக்குடி ஸ்ட்ரிக்ட் போலீஸ் சிங்கமும் இணையுற படமா... ஏன் மோதுற படமாக்கூட இருக்கலாம். அப்படி நடந்தால் சாமி vs சிங்கம்னு டைட்டில் வச்சு பேட்மேன் vs சூப்பர்மேன் படத்துக்கு சவால்விடலாம். அடுத்து எல்லா கதாபாத்திரமும் வரும் ஒரு படத்தை எடுத்து அவெஞ்சர்ஸ் ரேஞ்சுல ரிலீஸ் பண்ணலாம். விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால்னு படம் களைகட்டும். இதுல ஒரே பிரச்னை நாசர், ராதாரவி போன்று பலபேர் ரெண்டு, மூணு படத்துல வேறவேற ரோல்ல நடிச்சது தான். இல்லைனா நடிகர் சங்கத்தில் நடக்கும் சண்டை எதையாது லிங்க் புடிச்சி ரசிகர்களை குதூகலப்படுத்திருக்கலாம்.

இன்னொரு யுனிவெர்ஸ் நம்ம தமிழ் படத்துலயும் இங்கிலீஷ் பேசும் கௌதம் மேனன் யுனிவெர்ஸ். மெயின் ஹீரோக்கள் அன்புச்செல்வன், ராகவன், சத்யதேவ், மற்றும் புது என்ட்ரி கொடுத்துள்ள ஜான். இவர்களை தவிர்த்து டைரக்டர் கார்த்திக், எம்.பி.ஏ வருண் கிருஷ்ணன், மேஜர் சூர்யா, ரஜினிகாந்த் முரளிதரன்(இவர்தான் முறையாக யு.பி.எஸ்.சி எழுதி ஐ.ஏ.எஸ் கிடைத்தும் ஐ.பி.எஸ் வேணுமென்று கேட்டு வாங்கியவர்). இந்த யுனிவெர்ஸில் பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ரீனா, மேக்னா, மாலினி, ஜெஸ்ஸி, நித்யா வாசுதேவன், லீலா என இந்த லிஸ்ட் நீளும். போலீஸ் அதிகாரிகளான இவர்களுக்குள் ஈகோ க்ளாஷ் வந்து ஏற்படும் சண்டையை படமாக்கினால் சிவில் வார் தோத்துப்போகும். மிஸ்டர் எக்ஸ் யாருன்னு கண்டுபுடிக்குற மிஷன்ல இவங்க இணையுற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் (எனை நோக்கி பாயும் தோட்டா மியூசிக் டைரக்டர் பத்தி நான் எதுவும் சொல்லல). ஹரி யுனிவெர்ஸுக்கு நேர்மாறான கெளதம் மேனன் யுனிவெர்ஸ் ஹீரோக்கள் சிட்டில தான் இருப்பாங்க. பன்ச் டயலாக் இருந்தாலும் அது இங்கிலீஷ்ல இருக்குறதுதான் வழக்கம்.

ஹரி யுனிவெர்ஸ் ஜனரஞ்சகமாக இருக்கும் மார்வெல் போல. கௌதம் இதில் டி.சி வகை. ஒரு யுனிவெர்ஸ் பிடிச்சவங்களுக்கு இன்னொரு யுனிவெர்ஸ் பிடிக்குறது கஷ்டம். அதெல்லாம் சரி இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்னு நீங்க கேட்கலாம். நீங்க கேக்குறது கரெக்ட்தான், ஆனாலும் இப்படி ஹீரோக்கள் இணைந்தால் எப்படியிருக்கும்ங்கிற கற்பனைதான் இது. உண்மையிலேயே சிங்கமும் சாமியும் ஒண்ணா வந்த தியேட்டர் அதிரும். சத்யதேவும், ராகவனும் சந்தித்தால் கிளாஸ், மாஸ்னு ஆல் சென்டர் தெறிக்கும். கருத்தில் கொள்ளவும் இயக்குனர்களே!

-ம.காசி விஸ்வநாதன்
(மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு