Published:Updated:

ரசிகர்களைக் கதறவிடும் தமிழ் சினிமா இன்வெஸ்டிகேசன் சீன்ஸ் இவைதான் மக்களே..!

ரசிகர்களைக் கதறவிடும் தமிழ் சினிமா இன்வெஸ்டிகேசன் சீன்ஸ் இவைதான் மக்களே..!
ரசிகர்களைக் கதறவிடும் தமிழ் சினிமா இன்வெஸ்டிகேசன் சீன்ஸ் இவைதான் மக்களே..!

மிழ் சினிமாவில்தான் கொலைகளை வித்தியாசமா துப்பறிஞ்சு நம்மளை எல்லாம் சிலிர்க்க வைப்பாங்க நம் தமிழ் சினிமா டைரக்டர்ஸ். வாங்களேன் அவங்க துப்பு துலக்கியதை நாம லைட்டா கொஞ்சம் துலக்குவோம்! 

ஜினி படத்துல நம்ம சூர்யா முதல் சீனிலேயே கொலை செஞ்சுட்டு அசால்ட் காட்டுவாரு.  பின்னி மில் செட்-அப்ல சண்டை போட்டாலும் கீழே கிடக்குற பழைய நஞ்சு போன பஸ் டிக்கெட்டை வெச்சே ரூட் பிடிச்சு சஞ்சய் ராமசாமி குடி இருக்குற ஃப்ளாட்டுக்கு கரெக்ட்டா வந்துடுவாரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் கான். 

'அந்நியன்' படத்துல முடியை வெச்சே கொலை செஞ்சவன் ஒரு முடிவோடதான் பண்ணி இருக்கான்னு முடிவுக்கு வருவார் போலீஸ் டெபுடி கமிஷனர் பிரகாஷ் ராஜ். கொலை செஞ்சுட்டு தெனாவெட்டா பாறையில லூசு மாதிரி கிறுக்கிட்டுப்போறதை வெச்சுட்டு  'இவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான்'னு சொல்லுவார். அட்டைப்பூச்சியையும், தகர அட்டையையும் வெச்சே கரெக்டா கணிச்சு 'மிருகின ஜம்போ... கிருமி போஜனம்'னு சுடோகு விளையாடியே ஈஸியா விக்ரம்மை கண்டுபிடிப்பாரே நம்ம பிரகாஷ் ராஜ்!  

'படிக்காதவன்' படத்துல கொலைக்குற்றவாளியா நம்ம ரஜினி நிற்பார். அவரோட அண்ணன் சிவாஜி நீதிபதியா இருப்பார். சொந்தத் தம்பிக்காக அவரே வாதாடுவார். ராத்திரிபூராம் கண்ணு முழிச்சு தடித்தடியான புக்ஸை உரல்ல போட்டு இடிச்சு அரைச்சுக் கரைச்சுக் குடிச்சு காலையில ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குப்போய் பில் வாங்கிட்டு வருவார். அதை வெச்சே மொத்தக் கேஸையும் உடைச்சு தம்பி ஒரு நிரபராதினு நிரூபிப்பார். என்ன ஒரு அறிவு!

'மூன்றாவது கண்' என்ற படத்துல சரத்குமார் புலனாய்வு பண்ணுறதெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறேதான். போட்டோவுல எதார்த்தமா சிக்குன ஒரு 'கை' படத்தை வெச்சே  மொத்த முகத்தையும் உருவத்தையும் வரைஞ்சு கொலையாளியைக் கண்டுபிடிக்கிறதெல்லாம் ஓவரோ ஓவர் பாஸ்! இதுக்கு தங்கப்ப தக்கம் கொடுக்கலாமே ஆபிஸர்ஸ்?

'வேட்டையாடு விளையாடு' படத்துல சைக்கோ கொலைகாரனுகளைத் தேடி கீரனூர்லே இறங்கி காரோட டயர் தடத்தை வெச்சே பிரகாஷ்ராஜ் பொண்ணு புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பார்ங்கிறதுகூட ஓகே தான் பாஸ். ஆனா, பிரகாஷ் ராஜ் ஃபேமிலி கொலை செய்யப்பட்டதை வெச்சே கழுகுக்கு மூக்கு வியர்த்த மாதிரி அமெரிக்கா கிளம்பிப் போவார் நம்ம டெபுடி கமிஷனர் ராகவன் ஐபிஎஸ். ஓ இதுக்குப்பேருதான் ராகவன் இன்ஸ்டிங்ட்டா? 

'கோ' படத்துல கிடைக்குற தக்கனூண்டு வீடியோ ஃபுட்டேஜை வைத்தே பேங்க்ல கொள்ளையடிச்சவனும், காலால பியா கழுத்தை மிதிச்சுக் கொன்னவனும் ஒரே ஆள்தான்னு ஈஸியா கண்டுபிடிப்பார் நம்ம ஹீரோ ஜீவா. இவ்ளோ ஷார்ப்பான போட்டோகிராபரை தமிழ்கூறும் சமூகம் கண்டதுண்டா யுவர் ஹானர்!  

தெல்லாம் பரவாயில்லை பாஸ். நம்ம தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிற ஸ்டைல் ஒவ்வொண்ணுமே மைண்ட் ப்ளோயிங். மருவும் ஒட்டுத் தாடியும் வெச்சுக்கிட்டு அண்டர் கவர் ஆபரேஷன்லாம் பண்ணி கொலை செய்யும் கொள்ளைக்காரர்களை மடக்கிப் பிடிச்சு தாவாங்கட்டையைப் பெயர்த்து எடுப்பார்கள். எத்தனவாட்டி பார்த்து அனுபவிச்சிருப்போம். அம்மாடீ..!

- ஆர்.சரண்