Published:Updated:

வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar

வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar
வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar

வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar

இளையராஜா வருகைக்கு முன், 70-களில் சில காலம் இந்தி பாடல்களால் நிரம்பியிருந்தது தமிழ் ரசிகர்களின் கேசட்டுகள். அவர்களைத் திருப்பி தமிழ் பாடல்கள் கேட்க அழைத்து வந்தார் இளையராஜா. 90-களுக்குப் பின் வந்த ரஹ்மான் தமிழ் திரை இசையை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், ராஜா - ரஹ்மான் இவர்களுக்கு இடைப்பட்ட கேட்டகரி ஒன்று உண்டு. அந்த இடத்தில் தன்னை அழகாகப் பொறுத்திக் கொண்டவர் வித்யாசாகர். அந்த மெலடி கிங்கின் பிறந்தநாள் இன்று. அவரது இசையில் அதிகம் கவனம் பெறாத சில மெலடிகள் இங்கே...

பனிக்காற்றே - ரன்:

‘காதல் பிசாசே’, ‘இச்சுத்தா’, ‘தேரடி வீதியில்’ என ‘பெப்பி நம்பர்ஸ்’ இருந்தாலும், இதே படத்தில் ‘மின்சாரம் என் மீது’, ‘பொய் சொல்லக் கூடாது’ என மெலடியிலும் கலக்கி இருப்பார் வித்யாசாகர். மற்ற பாடல்கள் போல ‘பனிக்காற்றே பனிக்காற்றே...’ பிரபலமாகவில்லை. எப்போதாவது லோக்கல் சேனலிலோ, எஃப்.எம்-மிலோ போடும்போதுதான் கேட்டு சிலிர்த்திருப்போம்.

அற்றைத்திங்கள் - சிவப்பதிகாரம்:

ஸ்வர்ணலதா பாடிய ‘சித்திரையில் என்ன வரும்’ பாடல் போலவே, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் பாடியிருக்கும் ‘அற்றைத் திங்கள் வானிடம்...’ பாடலும் செம.

ஒரே மனம் - வில்லன்:

சாதனா சர்கம், ஹரிஹரன் பாடிய ‘ஒரே மனம்...’ அந்த ஆல்பத்திலேயே பீக் லெவல் மெலடி. பின்னணியில் மிக மெலிதாக ஒரு பீட் தொடர்ந்து கொண்டே இருக்க, அதை முந்திக் கொண்டு மெலடியிலேயே பயணிக்கும் பாடல்.

மௌனமே பார்வையாய் - அன்பே சிவம்:

‘யார் யார் சிவம்...’, ‘பூ வாசம்...’ பாடல் மட்டுமல்ல, ‘மௌனமே பார்வையாய்...’ பாடலும் அன்பே சிவம் ஆல்பத்தில் அல்டிமேடான ஒன்று. எஸ்.பி.பி + சந்த்ரயி கூட்டணியில் செம மெஸ்மரிசப் பாடல் இது. 

வெண்ணிலா - பொன்னியின் செல்வன்:

முகத்தில் இருக்கும் வடு காரணமாக தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஹீரோவை உற்சாகப்படுத்துவதற்காக, ஹீரோயின் பாடும் பாடல் இது. இன்ஸ்பிரேஷன் பாடலைத் தன் ஸ்டைலில் கொடுத்திருப்பார் வித்யாசாகர்.

என்னைக் கொஞ்சக் கொஞ்ச - ஆதி:

மழைப் பாடல். ஆரம்பத்தில் தடக்கு தடக்கு... என ஆரம்பித்து, ‘என்னைக் கொஞ்ச கொஞ்ச...’ என ராகத்தால் மழையில் குளிர்ச்சியை உணரச் செய்திருப்பார்.

ஆழக் கண்ணால் - மொழி:

மொழி படத்தில் ‘காற்றின் மொழி...’, ‘கண்ணால் பேசும் பெண்ணே...’, ‘செவ்வானம் சேலையக் கட்டி...’ பாடல்கள் மிகப் பிரபலம். மியூசிக் சேனல்களில் அடிக்கடி பார்க்க முடியும். ஆனால், பேத்தாஸ் பாடலான ‘பேசா மடந்தையே...’ கூட சிறப்பாக இருக்கும். கூடவே துண்டுப் பாடல்களாக வரும் ‘என் ஜன்னலில் தெரிவது’, ‘மௌனமே உன்னிடம்’, ‘ஆழக் கண்ணால்’ பாடல்களும் மிக அழகாக உருவாக்கப்பட்டு அதே அழகுடம் படத்திலும் உபயோகிக்கப்பட்டிருக்கும். ஜோதிகாவின் நடிப்பைப் போல இந்தப் படத்துக்கு வித்யாசாகரின் இசையும் பலம் சேர்த்தது.

இரு விழியோ - பிரிவோம் சந்திப்போம்:

திருமண நிகழ்வுக்கு ஒரு பாடல். வழக்கம்போல இல்லாமல் வேறு டைப்பில் பாடல் ஒன்றைக் கொடுத்திருப்பார் வித்யாசாகர். கூடவே இப்படத்தில் ‘கண்டேன் கண்டேன்’, ‘நெஞ்சத்திலே நெஞ்சத்திலே’, ‘கண்டும் காணாமல்’ பாடல்களும் சிறப்பாக இருக்கும்.

மழை நின்ற பின்பும் - ராமன் தேடிய சீதை:

தான் நிராகரித்த ஹீரோ மீதே காதல் பூக்கிறது. அந்த சூழலுக்கு மிக இதமாக ஒரு மெலடி. வரிகள் பளிச்செனத் தெரியும் படியான மெட்டமைத்துக் கொடுத்திருப்பார். 

இன்னும் வித்யாசாகர் கொடுத்த அசத்தாலன பாடல்கள் கீழே... இதில் மிஸ்ஸான இன்னும் ஸ்பெஷலான பாடல்களைக் கமெண்டில் பதிவிடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

தென்றலுக்கு நீ - அறை எண் 305ல் கடவுள்:

மேகம் வந்து போகும் - மந்திரப் புன்னகை:

சடசட - காவலன்:

கொலகாரா - தம்பி வெட்டோத்தி சுந்தரம்:

உன்னப் பாக்காம - ஜன்னல் ஓரம்:

அடுத்த கட்டுரைக்கு