Published:Updated:

'கர்மா இஸ் எ பூமராங்' இது கோலிவுட் வெர்ஷன்! #VikatanExclusive

தார்மிக் லீ
'கர்மா இஸ் எ பூமராங்' இது கோலிவுட் வெர்ஷன்! #VikatanExclusive
'கர்மா இஸ் எ பூமராங்' இது கோலிவுட் வெர்ஷன்! #VikatanExclusive

'கர்மா இஸ் எ பூமராங்', இந்த டயலாக் 'துருவங்கள் பதினாறு' படத்தில் ரொம்ப ஃபேமஸ். இதற்கு அர்த்தத்தை திருவள்ளுவரே சொல்லியிருந்தாலும் நானும் ஒரு தடவை சொல்லிடுறேன். ஒருவருக்கு நாம் என்ன செய்கிறோமோ அதேதான் நமக்குத் திரும்பவும் கிடைக்கும். அப்படி நம் தமிழ் சினிமாவில் கர்மா யாரை விட்டுவைக்கவில்லை... ஓர் அலசல்.

வடிவேலு - சூர்யா - விஜய் :

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் காமெடிக் காட்சிகள் நம் அடுத்த தலைமுறையும் பேசும். அந்தப் படத்தில் பாஸ் நேசமணி அதுதான் நம்ம வடிவேலு, விஜய் மற்றும் சூர்யா இருவரையுமே படாதபாடுபடுத்துவார் . 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வடிவேலு, சூர்யா வீட்டிற்கு வரும்போது 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் செய்ததை ஞாபகமாக வைத்துக்கொண்டு திட்டித் தீர்ப்பார். இவராவது பரவாயில்லை... விஜய் ஒரு படி மேலே சென்று 'வசீகரா' படத்தில் வடிவேலு கொடுக்கும் இம்சையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கழுத்தைப் பிடித்துத் தூக்கி சுவற்றில் தொங்கவிடுவார். 'நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊளையிட்டுக்கிட்டு வேற வருதா?' 

ஆனந்த் நாக் :

ஆனந்த் நாக்கின் நாக்க மூக்க வேலைதான் இது. 'நேரம்' படத்தில் சர்ச் ஒன்றில் நஸ்ரியாவைக் கண்ட ஆனந்த் நாக் பின்னாடியே சென்று அவரை லவ் பண்ண நினைப்பார். நஸ்ரியாவும் வழக்கம்போல் 'ப்ரதர் எனக்கு அல்ரெடி ஆள் இருக்கு' என்பது போல் பல்ப் கொடுத்துவிடுவார். அந்த ஆள் யார் என்று பார்த்தால் அந்தப் படத்தில் அரும்பு மீசை வைத்திருக்கும் குறும்பு நிவின் பாலி. அதை மனதில் வைத்துக்கொண்டு 2015-ல் வெளியான 'ப்ரேமம்' திரைப்படத்தில் தன் பழியைத் தீர்த்துக்கொள்கிறார். அட இன்னும் புரியலையா பாஸ்? அதான் நம்ம மலர் டீச்சரை நிவின் பாலி லவ் பண்ணுவார். ஆனால் நடுவில் அத்தைப் பையனாக வரும் 'ஆனந்த் நாக்' மலரை மணந்துகொள்வார். 'தட் தக் லைஃப் மொமென்ட்'.

ரம்யா கிருஷ்ணன் :

மேல உள்ள பூமராங்காவது பராவாயில்லை ஆனால் இது ஜானர் விட்டு ஜானர் வந்துருக்கு பாஸ். 'பாட்டாளி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கும் பரத் கல்யாணுக்கும் திருமணமாக இருக்கும். ஆனால் சொத்துப் பிரச்னை காரணமாக பரத் கல்யாண், ரம்யா கிருஷ்ணனை வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்டதும் விரக்தியடைந்து விடுவார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் நம்ம கர்மாதான் பூமராங் ஆச்சே மக்களே... ஆம் இப்போது ஒளிபரப்பாகும் 'வம்சம்' நாடகத்தில் அதே பரத் கல்யாணுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் கல்யாணம் முடிந்துவிடும். என்னதான் பூமராங்காக இருந்தாலும் 18 வருசம் கழிச்சா வர்றது?

ஸ்ருதிஹாசன் :

இந்தக் கர்மா ஸ்ருதிஹாசனுக்கு சூர்யாவிற்கும் நடக்கும். 'ஏழாம் அறிவு' படத்தில் பார்த்தவுடன் ஸ்ருதியை லவ் பண்ணி விடுகிறார். பட் ஸ்ருதி ஹேஸ் அதர் ஐடியாஸ். போதி தர்மனைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக சூர்யாவிடம் பழக, சூர்யாவோ காதலைச் சொல்லும்போது காயப்படுத்தி விடுகிறார் ஸ்ருதி. அப்படியே காலம் போச்சு. இது துரைசிங்கம் என்ட்ரி. 'சிங்கம்-3' படத்திலும் சூர்யாவை ஏமாற்றவரும் ஸ்ருதிக்கு ஒரு கட்டத்தில் சூர்யாவைப் பற்றிய உண்மை தெரிந்தபின்னர் சூர்யா மீது லவ் வரும். இப்போ சூர்யா ஹேஸ் அதர் ஐடியாஸ். அவர் அனுஷ்காவைக் கல்யாணம் செய்ததால் ஸ்ருதியை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் துரைசிங்கம். 

கமல்ஹாசன் :

கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்'  படத்தில் ஹீரோயின் கிரணைக் காதலிப்பார். ஆனால் கிரண் அப்பா நாசர் பல சதி வேலைகள் செய்ய, விதியின் விளையாட்டால் கமலுக்கு விபத்து ஏற்பட்டுவிடும். அதனால் கமல் கிரணைப் பிரிந்து மாதவனைக் கட்டிக்கொள்வார். க்ளைமாக்ஸில் பொழச்சுப்போங்கனு சொல்லிவிட்டு 2010-ல் வெளியான 'மன்மதன் அம்பு' படத்தில் மாதவன் காதலித்த அம்பு (எ) த்ரிஷாவை இவர் காதலித்துக் கல்யாணமும் செய்துகொள்வார். 'கடவுள் இல்லைனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்'.

தனுஷ் :

கர்மா பூமராங் எல்லாம் தெரிந்த ஓர் ஆளைக்கூட ஒன்றும் தெரியாத ஆளாக மாற்றிவிடும். அது நம்ம தனுஷுக்கும் நடந்துவிட்டது. 'காதல் கொண்டேன்' படத்தில் காலேஜ் வாத்தியார் இவரைத் திட்டும்போது கெத்தாக போர்டு பக்கம் சென்று சிக்கலான கணக்கை அசால்ட்டு செய்துவிடுவார். அங்குள்ள எத்தனை பேர் கண்ணுபட்டதோ தெரியவில்லை. 'படிக்காதவன்' படத்தில் டுட்டோரியல் காலேஜிற்குப் போய்விடுவார். அங்கு பாண்டு கேட்கும் சிம்பிள் கேள்விகளுக்குக்கூட பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து கொண்டிருப்பார். கர்மா இஸ் டூ டேஞ்சரஸ் பாஸ்.

அடுத்த பதிவில் மேலும் சில கர்மாவுடன் சந்திப்போம். நன்றி வணக்கம்!

- தார்மிக் லீ