Published:Updated:

“நீயா நானானு பார்த்துக்கலாம்..!” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்

“நீயா நானானு பார்த்துக்கலாம்..!” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்
“நீயா நானானு பார்த்துக்கலாம்..!” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை போல் தன் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கொஞ்சம் மெருகேற்றி ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இன்று பெண்கள் தினம் என்பதால் படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 

விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு மற்றும் நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய் மற்றும் நடிகைகள் சினேகா, தன்ஷிகா மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் நட்சத்திரங்கள் பேசியதாவது...

சினேகா:

படத்தோட போஸ்டர்ஸ், சாங்ஸ் பார்க்கும் போது ரொம்ப வித்தியாசமா இருக்கு. பிரேம்ஜி நடித்த எல்லா படத்துலையும் அவர் அந்த கதாபாத்திரமா வாழ்வார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிச்சிருக்கார்னு சொல்லும் போது ஆச்சரியமா இருக்கு. என்னோட நண்பர் பரத்திற்காக இந்த படம் நல்லா வரணும்னு வேண்டிக்கிறேன். 

பிரசன்னா:
பிரேம்ஜி இந்த படத்துல நாய்யா நடிச்சிருக்கார். அந்த கேரக்டரை ரொம்ப லைவ்வா பண்ணணும்னு கொஞ்ச நாளா மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டை ஸ்டாப் பண்ணிட்டு, நாய்கள் சாப்பிடுற சாப்பாட்டை ஃபாலோ பண்ணி நாயாகவே தன்னை மாத்திக்கிட்டு நடிச்சிருக்கார். (அரங்கமே சிரிப்பில் நிறைகிறது) அந்தளவுக்கு தன்னோட கடின உழைப்பை கொடுத்து நடிச்சிருக்கார். 

பிரேம்ஜி:

இந்த படத்துல என்னோட காஸ்ட்யூமை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அது எப்படி சாக்கு மாதிரி இருக்குனு. அந்த டிரெஸ்ஸை ஒரு நாள் ஃபுல்லா போட்டு வெயில்ல நின்னா எப்படியிருக்கும்? அதுபோக அந்த டிரெஸ் கழுத்தில் இருந்து கால் வரை இருக்கும். அவசரத்துக்கு போகணும்னாக்கூட கஷ்டமாயிருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். இந்த படத்துல ஒரு சீன் வரும், எங்க ஏரியா நாய் பக்கத்து ஏரியா நாயை சைட் அடிச்சு, அது பெரிய பிரச்னை ஆகிடும். அந்த ஏரியா நாய்கள் எல்லாம் என்கிட்ட பஞ்சாயத்துக்கு வரும். அதை பிரச்னையை நான் தீர்த்து வைப்பேன். இந்த சீன்ல என்கூட 20 நாய் நடிச்சது. அது எல்லாமே நல்லா கடிக்கிற இனத்தை சேர்ந்த நாய்கள். அபபோ பாத்துக்கோங்க, நான் எவ்வளவு சிரமப்பட்டு நடிச்சிருக்கேன்னு. என்னோட கேரக்டர் மட்டும் அல்ல, இந்த படமே ரொம்ப வித்தியாசமா, புது ஃபீல் கொடுக்கும். சிவபானமான கஞ்சாவை மையமா வெச்சு எடுத்திருக்கிற முதல் தமிழ் படம் இது. 

மிஷ்கின்:

‘சிம்பா’ படத்தோட போஸ்டர்ல ‘டைரக்டடு பை’னு போடாமா ‘எ ட்ரிப் பை’னு போட்டதுக்காவே இயக்குநரை பாராட்டணும். ஏன்னா, எல்லா படமுமே இயக்குநரோட ஒரு ட்ரிப் தான். பரத், எப்போதுமே உழைக்கிற ஒரு ஆள். ‘பிசாசு’ படத்துலையே பரத் என்னோட ஒர்க் பண்ணவேண்டியது. அப்போ அது நடக்காம போச்சு. ஆனால், கண்டிப்பா பரத்தோட சேர்ந்து நான் ஒர்க் பண்ணுவேன். இந்த மேடையை ‘சிம்பா’ படத்தோட இசை வெளியீட்டுக்கு மட்டும் பயன்படுத்தாம, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிரசாரத்துக்காகவும் பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். எனக்கு இந்த தேர்தல் எல்லாம் பழக்கம் இல்ல. அப்படியும் இன்னைக்கு நான் தேர்தல்ல நிக்கிறேன்னா அதுக்கு காரணம் விஷால். விஷால் இப்போ என்னோட படத்துல ஒர்க் பண்றாரு, அதுனால நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காதீங்க. விஷால் ஒரு நல்ல மனிதர். தினமும் அவர்கிட்ட உதவி கேட்டு பல போன் கால்ஸ் வருது. அதையெல்லாம் அவர் உடனே செய்றாரு. அந்த நல்ல மனசுக்காக தான் நான் அவருக்கு சப்போர்ட் பண்றேன். விஷால் ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தல்ல வெற்றி பெற்று அங்க செய்ய வேண்டிய எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சுட்டு இருக்கார். அதே மாதிரி தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒரு வருஷத்துக்குள்ள நாங்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரலைன்னா, நாங்களே ராஜினாமா பண்ணிக்கிறோம். 

ஜெயம் ரவி:

எனக்கு இந்த படத்தோட ட்ரெய்லர், சாங்ஸ், போஸ்டர்ஸ் எல்லாத்தையும் பார்க்கும் போது விசில் அடிக்கணும் போல இருக்கு. (விசில் அடிக்கிறார்) கண்டிப்பா இந்த படம் ரிலீஸ் ஆனதும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பேன். ஏன்னா, அவ்வளவு வித்தியாசமா இருக்கு. இந்த படத்துல என் நண்பர் பரதத்துக்கு நல்ல டீம் கிடைச்சிருக்கு. எந்த நடிகணும்னு தனிஒருவனா மேல வந்திட முடியாது. அதுக்கு நல்ல டீம் கிடைக்கணும். அது இந்த படத்துல இருக்கு. எந்த வேலையா இருந்தாலும் நாய் மாதிரி உழைக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால், இந்த படத்துல பிரேம்ஜி நாயாகவே உழைச்சிருக்கார். கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

வெங்கட் பிரபு:
இந்த படம் ஆரம்பிச்சதுல இருந்து படத்தை பத்தின எல்லா அப்பேட்டும் எனக்கு வந்திடும். இந்த மாதிரி ஒரு கதையை சொல்லி ஓகே வாங்குறதே கஷ்டம். அதை இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் சரியா பண்ணிருக்கார். பரத் எதிர்பார்க்குற ப்ரேக் இந்த படத்துல கண்டிப்பா கிடைக்கும். கஞ்சா அடிக்கிற ஒரு ஆளை பத்தின கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. பார்க்கும் போது புது ஃபீல் கொடுக்கும். இந்த படத்துல பிரேம்ஜியை நாயாக நடிக்க வைச்சிருக்கார் இயக்குநர். என்னால முடியாததை அவர் பண்ணியிருக்கார். 

சிம்பா படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் யாரெல்லாம் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். யாரெல்லாம் பாடியிருக்கிறார்கள் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தவர்கள் என இசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்த அனைவரின் பெயர்களையும் கூறினார். இந்த படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பாடலும் எழுதியிருக்கிறார்.

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்:

இந்த படத்தை தயாரிக்க தனி தைரியம் வேணும். அப்படி தைரியமா இந்த படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக கிட்டத்தட்ட இரண்டரை வருஷமா என்கூட ட்ராவல் பண்ணிட்டு இருக்கார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். இந்த படத்துக்காக ரொம்ப நல்ல அவுட்புட் கொடுத்திருக்கார். என்னோட ஃப்ரெண்ட் கேரக்டரை தான் டெவலப் பண்ணி சிம்பா படத்தோட கதையா எடுத்திருக்கேன். இந்த படத்துக்காக பரத் அதிகமா உழைச்சிருக்கார். பிரேம்ஜி, சான்ஸே இல்ல. அந்த டிரெஸ்ஸை போட்டுட்டு வெயில்ல நிக்கிறதே கஷ்டம். அவர் அதோட நடிச்சிருக்கார். ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். 

பரத்:

என்னோட ரியல் கேரக்டருக்கும் இந்த படத்தில் கஞ்சா அடிக்கும் ஆளா நான் நடிச்சிருக்க கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் புகையை உள்ள இழுக்கவேயில்லை. அதை நான் முதல்ல சொல்லிக்க விரும்புறேன். நான் இந்த படத்துல அந்த கேரக்டரா நடிச்சிருக்கேன். அவ்வளவே. இந்த படம் இந்த லெவலுக்கு வரும்னு நான் நினைக்கல. ஏன்னா, முதல்ல நிறைய தயாரிப்பாளர் இந்த படத்தை எடுக்க வந்தாங்க. பொய் வார்த்தைகள் சொல்லி எங்களை அலக்கழிச்சாங்க. ஒரு வருஷமா இந்த படத்துக்காக நான் காத்திருந்து, காத்திருந்து என்னால வேற எந்த படமும் பணண முடியாம போச்சு. அதுக்கப்பறம் தயாரிப்பாளர்கள் சிவனேஷ்வரனும், கோல்ட் மனோஜ் உள்ள வந்து இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துக்கு டைட்டில் பிரச்னை வந்தப்போ நடிகர் சங்கம் தான் அதை தீர்த்து வைச்சது. அவங்களுக்கும் இந்த இடத்துல நான் நன்றி சொல்லிக்கிறேன். தினமும் ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருக்கும். நாய் கேரக்டருக்கு பிரேம்ஜியை நடிக்க வைக்கலாம்னு டைரக்டர் சொன்னபோது, ‘அவர் ஜாலியா அவங்க அண்ணன் படத்துல நடிச்சிட்டு இருக்கார். அவர் எப்படி இந்த கேரக்டர் பண்ணுவாருன்னு’ கேட்டேன். அதையும் மீறி அவர் நடிக்க ஒத்துக்கிட்டு இந்த படத்துக்குள்ள வந்தது ரொம்ப சந்தோஷம். 

விஷால்:

தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகுற எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். இந்த படம் சம்மருக்கு வரும்னு ட்ரெய்லர்ல போட்டாங்க. அப்படின்னா, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிஞ்சு தான் இந்த படம் வரும். அந்த சமயத்துல இந்த படம் எந்த இணையதளத்திலும் டிவிடியிலும் வராதுன்னு நான் இப்போவே உறுதியா சொல்றேன். அந்த வெப்சைட்டோட பேரை நான் சொல்லல. சொன்னா அவங்களுக்கு தான் பப்ளிசிட்டி. ஏப்ரல் 2க்கு அப்பறம் நீயா நானானுக்கு பாத்துக்கலாம். இந்த படத்துக்கு நல்ல ஒரு ரிலீஸ் டேட் கிடைக்கணும். வெற்றிக்கு தகுதியான ஆள், பரத். அவருக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கணும். எல்லா இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ‘யு’ சான்றிதழுக்காக போராடுவாங்க. ஆனால், சான்றிதழுக்கு பயப்படாம ஓப்பனாவே இது கஞ்சா அடிக்கிற ஆளை பத்தின கதைனு தைரியமா போட்டதுக்கு பாராட்டுகள். 

மா.பாண்டியராஜன்