Published:Updated:

‘இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' இருக்கார்!' - எஸ்.ஜே.சூர்யா #VikatanExclusive

‘இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' இருக்கார்!' - எஸ்.ஜே.சூர்யா #VikatanExclusive
‘இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' இருக்கார்!' - எஸ்.ஜே.சூர்யா #VikatanExclusive

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 'மாயா' அஸ்வின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  'நடிகர் ஆன கதை!'.

''ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சுப் பார்த்தேன், செட் ஆகலை. ரெண்டு படங்கள் இயக்குனதுக்குப் பிறகு, இப்படி இருந்தா வாழ்க்கை இப்படியேதான் போகும்னு தெரிஞ்சுக்கிட்டு, இன்டஸ்ட்ரியைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். என் இலக்கை அடையறதுக்கான ஒரே வழி 'ஒன்மேன் ஆர்மி' ஆகுறதுதான்னு தோணுச்சு. 'நியூ' படத்தை இயக்கி, நடிச்சு, தயாரிச்சேன். எல்லாரும் திரும்பிப் பார்த்தாங்க. அதற்கு பிறகு 'அன்பே ஆருயிரே' பண்ணேன். நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்துச்சு. ஒரு முடிவு எடுக்குறது சுலபம். அதைக் கடந்து வர்றதும், தக்க வெச்சிருக்கிறதும் ரொம்பக் கஷ்டம்னு எனக்குப் புரிய பத்து வருடங்கள் ஆச்சு.  'காமெடியா நடிக்கிறார். வேறென்ன இருக்கு?' இதுதான் என் நடிப்புக்குக் கிடைச்ச கமெண்ட். நடிகர்னா, சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்பட வேண்டாம். அட்லீஸ்ட்... ஸ்டார் ஆகணும்ல? அந்த 'ஸ்டார்' அந்தஸ்தைப் பிடிக்கிறதுக்கான பைபாஸ் ரோடு எதுனு யோசிச்சேன். 'நாலு சீன் நடிச்சாலும், நல்ல நடிகர்னு பெயர் வாங்கணும்!'னு ஒரு வழி கிடைச்சது. வழிக்கு வந்தேன். இதுவரை 'நடிகன்'ங்கிற ஏரியாவுக்குள்ள என்னை விடலை. இப்போதான் கொஞ்சமா இடம் கொடுத்திருக்காங்க!''

'' 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ன மாதிரியான படம்?"

''நடிகரா 'ஸ்டார்' அந்தஸ்த்தை இந்தப் படம் எனக்கு உருவாக்கிக் கொடுக்கும்னு நம்புறேன். ஏன்னா, என்னை நடிக்க வெச்ச இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' நடிகர் இருக்கார். எனக்கு அவர் நடிப்பைச் சொல்லிக்கொடுக்கும்போது, அவரை இயக்குநராப் பார்க்கமுடியலை. நடிகராப் பிரமாதப்படுத்துறார். மார்வெலஸ் ஆக்டருங்க அவர்... 'நெஞ்சம் மறப்பதில்லை' டீஸர்ல வந்த நீளமான வசனத்தை அவர் ஒரே மூச்சுல நடிச்சுக் காட்டினார். அசந்துட்டேன். அவரை உள்வாங்கி நானும் ஒரே டேக்ல முடிச்சேன். இப்படி மொத்த படத்துக்கும் அவரோட நடிப்பைத்தான் காப்பி அடிச்சிருக்கேன். இது செல்வா சாரோட வழக்கமான படமா இருக்காது. பேய்ப் படம், ரொமான்டிக் த்ரில்லர், சென்டிமென்ட் படம்னு எந்த ஜானர்லேயும் இந்தப் படத்தை அடக்கிடமுடியாது.''

''பல வருடங்களா சினிமாவுல இருக்கீங்க. காலத்துக்குத் தகுந்தமாதிரி சினிமாவுல நடக்குற மாற்றங்களை எப்படி எடுத்துக்குறீங்க?"

''மாற்றம்னு உச்சரிச்சுப் பார்த்தாலே சூப்பரா இருக்கும்ங்க. மாற்றம் சினிமாவுக்கு நல்லதைத்தான் பண்ணும். அந்த நல்லது நடக்கும்போதெல்லாம் நாமளும் சினிமாவுல இருக்கோமா என்பதுதான் முக்கியம். 'சினிமா முன்ன மாதிரி இல்லைங்க...'னு என்னைக்குப் பேச ஆரம்பிக்கிறோமோ அப்பவே நமக்கு மணியடிச்சு, நமக்கு ரிட்டையர்மென்ட் கொடுத்துடும் சினிமா. ஃபிலிம்ல ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தவங்க, டிஜிட்டல் கேமராவைக் குற்றம் சொன்னா அவங்கமேலதான் தப்பு. ஃபிலிம் இருந்த காலத்துலேயும் நல்ல படங்கள் வந்திருக்கு. டிஜிட்டல் காலத்துலேயும் நல்ல படங்கள் வந்துக்கிட்டு இருக்கு. ஸோ, நாமதான் அப்டேட்டா இருக்கணும்!

நடிகர் ஆகணும்னு ஆசைப்பட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். இப்போதான், அது நல்லபடியா நடக்குது. எல்லா நல்ல இயக்குநர்கள்கிட்டேயும் ஆண்டவன் என்னை அனுப்பி வைக்கிறான். நடிகர் எஸ்.ஜே.சூர்யா ரொம்ப ஹாப்பி!"

வாழ்த்துகள் சார்!

- கே.ஜி.மணிகண்டன்