Published:Updated:

ஒன்லைனுக்கு பாராட்டு.. ஆனால் வசனங்கள்??? - கட்டப்பாவ காணோம் விமர்சனம்

ஒன்லைனுக்கு பாராட்டு.. ஆனால் வசனங்கள்??? - கட்டப்பாவ காணோம் விமர்சனம்
ஒன்லைனுக்கு பாராட்டு.. ஆனால் வசனங்கள்??? - கட்டப்பாவ காணோம் விமர்சனம்

ஒன்லைனுக்கு பாராட்டு.. ஆனால் வசனங்கள்??? - கட்டப்பாவ காணோம் விமர்சனம்

‘பேட்லக்' பாண்டியன் என்பவன் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் வாஸ்துமீன் ஒன்று என்ட்ரி ஆகிறது. கடலளவு பிரச்னையில் தத்தளித்து கொண்டிருக்கும் அவனை வாஸ்துமீன் கரை சேர்த்ததா அல்லது கதையையே முடித்ததா என்பது தான் `கட்டப்பாவ காணோம்' படத்தின் ஒன்-லைன்.

வாழ்க்கையில் அப்பப்போ அடி விழலாம். ஆனால், அடி விழுவது மட்டுமே வாழ்க்கையாய் இருக்கிறது கதாநாயகன் பாண்டியனுக்கு (சிபிராஜ்). வீட்டாரை எதிர்த்து தனது காதலி மீனாகுமாரியை ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) திருமணம் செய்துகொண்டு ஒரு அபார்ட்மெண்டில் குடியேறுகிறான் பாண்டியன். ஆனாலும், ஏழரை அவன் கழுத்தில் குத்த வைத்து உட்கார்ந்து குடும்பத்தில் குழப்பங்களை உண்டு பண்ணுகிறது. அப்படியே அதற்கு நேர் மாறாக கோடி கோடியாய் காசு, கை நிறைய மோதிரம், பெரும் செல்வாக்கு என சொர்க்க வாழ்க்கை வாழ்கிறான் ரௌடி வஞ்சரம் ( `மைம்' கோபி). தனக்கு கிடைத்திருக்கும் இந்த சுகபோக வாழ்க்கைக்கு, தன் வீட்டில் வளரும் வாஸ்துமீன் ’கட்டப்பா’ தான் காரணம் என நம்புகிறான். திடீரென ஒரு நாள் கட்டப்பாவை ஆட்டையை போட்டு வஞ்சிரத்தின் நம்பிக்கையில் ஓட்டையை போடுகிறான் திருடன் நண்டு ( யோகிபாபு ). நண்டு கையில் இருக்கும் கட்டப்பா எப்படியோ விதியின் விளையாட்டால் 'பேட்லக்' பாண்டியன் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. `கட்டப்பாவை காணோம்' என நொறுங்கிப்போகும் வஞ்சிரமோ திருடு போன கட்டப்பாவைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறான். பாண்டியனின் வீட்டில் இருக்கும் கட்டப்பா மீண்டும் வஞ்சிரத்தின் கைகளுக்கே வந்ததா இல்லையா என்பதைத் தியேட்டரில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க மக்கா.

பாண்டியனாக சிபிராஜ் இயல்பாக நடித்திருக்கிறார். காமெடி படம் என்பதால் வசன உச்சரிப்பில் டைமிங், ரைமிங் இரண்டிலும் கவனம் எடுத்து சிறப்பாகவே செய்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை உணர்ந்து  நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இருவரும் சேர்ந்து செய்யும் காமெடிகளுக்கு தியேட்டரில் கைத்தட்டல்களும் கிடைக்கிறது. இன்றைய தேதியில் ஆடியன்ஸ்க்கு வைபரேஷன் வர வைக்கும் நடிகர்களில் ஒருவராகிவிட்டார் யோகிபாபு. ரெண்டு சீன்கள் தான் என்றாலும் செமத்தியான சம்பவம். பக்கத்துப்போர்ஷன் குட்டிப் பொண்ணாக வரும் `கயல்' பாப்பா செம க்யூட். 

பாண்டியன், மீனாகுமாரி, வஞ்சிரம், சுறா, சங்கரா, கயல் என படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே மீனோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர் மணி செயோன். தலைப்பிலேயே கதையை சொல்லிவிட்டாலும், ஆடியன்ஸ், தலையை தொங்கப்போடாத அளவிற்கு சுவாரஸ்யமாய் கொண்டு போனதற்காக இயக்குநருக்கு கைகுலுக்கல்கள்!     

 ‘அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லை' என புலம்புவர்கள் எப்படி அவ்வளவு பெரிய அபார்ட்மெண்டில் அவ்வளவு நாள் தங்குகிறர்கள்  என்பதற்கு எந்த பதிலும் இல்லை.  நியூவேவ் சினிமா ஆட்களின் தலைகள் படம் முழுக்க தென்பட்டாலும், எல்லோரும் 'அடல்ட்' டயலாக்குகளாய் பேசி அதிர வைக்கிறார்கள். அதிலும் காளிவெங்கட் பேசும் டயலாக்குகள் எல்லாமே ஏ வகை.  'மைம்' கோபிக்கு கொடுக்கபட்ட வசனங்களில் நிறைய இடங்களில் ம்யூட். அதை ஸ்கிரிப்டிலேயே படித்து அடித்துத் தொலைத்திருக்கலாமே?  `மீனெல்லாம் இருக்குப்பா.. கூட்டீட்டு போங்க' என்று சொல்லும் குழந்தைகளோடு வரும்  ஆடியன்ஸை இயக்குநர் நினைத்தே பார்க்கவில்லை போல!  இத்தனைக்கும் யூ சர்ட்டிஃபிகேட் வேறு! 

ஜீவாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் பிண்ணனி இசையும் கட்டப்பாவுக்கு ஆக்ஸிஜன்.

படம் பார்ப்பவர்களில் சிலரை 'வட்டிக்கு காசு வாங்கியாவது வாஸ்து மீன் வாங்கிடலாமா' என யோசிக்க வைத்துவிடும் இந்த `கட்டப்பாவ காணோம்'. அப்படி `நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. வாஸ்து மீன் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது உண்மைதான். அதிகம் பகிரவும்' என்பது போல படத்தை முடித்தது தான் தொண்டையில் மீன் முள்ளைப்போல் உறுத்துகிறது. அப்படியே `புரூஸ் லீ' விமர்சனம் படிச்சு பாருங்க சுறா மீனே கடிச்ச மாதிரி இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு