Published:Updated:

'எஸ்.பி.பி சாரை பாடவைக்கணும்!' - சிலிர்க்கும் இசையமைப்பாளர் #VikatanExclusive

'எஸ்.பி.பி சாரை  பாடவைக்கணும்!'  - சிலிர்க்கும் இசையமைப்பாளர் #VikatanExclusive
'எஸ்.பி.பி சாரை பாடவைக்கணும்!' - சிலிர்க்கும் இசையமைப்பாளர் #VikatanExclusive

'எஸ்.பி.பி சாரை பாடவைக்கணும்!' - சிலிர்க்கும் இசையமைப்பாளர் #VikatanExclusive

இன்னும் தொலைக்காட்சி ரேடியோக்களில் ரிபீட் மோடில் ஓடிக் கொண்டிருக்கிறது, ‘அடியே அழகே’. அதைப் பாடிய ஷான் ரோல்டன் பவர் பாண்டி, வி.ஐ.பி 2 என அடுத்தடுத்த படங்களில் மூழ்கிவிட்டார். அவரிடம் பேசியதிலிருந்து...

இண்டிபென்டன்ட் மியூசிக்ல இருந்து சினிமா மியூசிக்கிற்கு வந்த பயணம் எப்படி இருக்கு?

ஆங்கிலத்தில் வந்த நிறைய Band என்னை கவர்ந்துச்சு. அந்த மாதிரி ஒரு ஃப்ரீ மியூசிக் ஏன் தமிழ்ல இல்லை. எதுக்காக சினிமா பாட்டு மட்டுமே தான் இசையா இருக்கணும்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சது தான் ஷான் ரால்டன் & ஃப்ரெண்ட்ஸ்  Band. பாடகர் பிரதீப்குமார் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து துவங்கினோம். அதுல வெறும் ஒரிஜினல் மியூசிக் தான் பண்ணினோம். கூடவே சந்தோஷ் நாரயணன் கூடயும் சில பாடல்கள்  பண்ணிணோம்.  அப்போ பண்ணின ‘மயக்குற பூ வாசம் பாட்டு’ கப்பா டிவில வந்து வைரல் ஆச்சு. அப்போ சி.வி. குமார் சார், “நீங்க படத்துக்குப் பண்ணுங்க”னு சொல்லி வந்தார். எனக்கு சினிமால பண்ணணுமானு ஒரு யோசனை. நாம எதுவும் தப்பா பண்ணிடுவோமோங்கற பயம் தான் அதுக்கு காரணம். பிறகு அவர் சம்மதிக்க வெச்சு கூட்டிட்டு போயிட்டார். எந்த இலக்குமே இல்லாம விளையாட்டா பண்ணின இசை. இப்போ அது கொடுத்திருக்கும் இடம் கடவுளுடைய வரம் தான்.

இண்டிபென்டன்ட் மியூசிக் பண்ணிகிட்டிருக்கும் நிறைய பேர் சினிமாவுக்கு வரத் தயக்கம் காட்டறாங்க, எதனால அது?

இண்டிபென்டன்ட் மியூசிகிற்கான தேடலுக்கு ஒரு வாழ்க்கை பத்தாது. சினிமால நிறைய பேருக்குப் பிடிக்கறதுக்காக சில விஷயங்கள் பண்ணுறோம். ஆனா, நமக்கான தேடலுக்கு அது சரியா இருக்குமானு ஒரு சந்தேகம் வரும். அதனால தான் அந்தத் தயக்கம்னு நினைக்கறேன். ஆனா, இண்டிபென்டன்ட் இசைக்கும் இப்போ நல்ல வளர்ச்சி கிடைச்சிருக்கு. நாங்க ஆரம்பிச்ச போதெல்லாம் நிறைய சிரமங்கள் இருந்தது. அப்போ அது என்னென்னே யாருக்கும் தெரியல, இப்போ ஜனங்களுக்கு அதைப் பற்றி தெரியுது. அதுக்கான ஆடியன்ஸ் உருவாகியிருக்காங்க. 

மாஸ் கமர்ஷியல் படங்கள்ல இருந்து விலகியே இருக்கற மாதிரி இருக்கே?

பண்ணவேணாம்னு எந்த முடிவும் இல்ல. ஆனா, சின்ன படங்கள் பண்றதை முதன்மையா வெச்சுகிட்டேன். சின்னப் படங்கள் பண்ணும் போது ஒரு சுதந்திரம் இருக்கும். பெரிய படங்கள்ல அது கிடைக்காதுன்னு நானா நினைச்சிட்டிருந்தேன். ஆனா, அப்படி எதுவும் இல்ல. பெரிய படங்கள்லயும் சுதந்திரமா நிறைய நல்ல விஷயங்கள் பண்ணமுடியும்னு ‘பவர் பாண்டி’க்குப் பிறகு நம்பிக்கை வந்திருக்கு. 

பவர் பாண்டி ஜூக் பாக்ஸ்

முதல் படம் 'வாயை மூடி பேசவும்' மூலமா மலையாளத்திலும் அறிமுகமானீங்க, அதுக்குப் பிறகு மற்ற மொழிகள்ல இசையமைக்கலையே?

சில வாய்ப்புகள் வந்தது. எல்லாமே நல்ல படங்கள். ஆனா அதுக்கு நான் எவ்வளவு பொருத்தமா இருப்பேன்னு சந்தேகமா இருந்தது. அதனாலதான் பண்ணல.

முன்னால பழைய பாடல்கள ரீமிக்ஸ் பண்றது ஒரு வழக்கமாவே தொடர்ந்தது. இப்போ அப்படியான பாடல்கள் வர்றதில்லையே? உங்களுக்கு ஏதாவது பாடல் ரீமிக்ஸ் பண்ண ஆசை இருக்கா?

ஒரிஜினல் பாடல்களுடைய தரம் கூடிட்டதால ரீமிக்ஸ்கான அவசியம் குறைஞ்சிடுச்சுனு தோணுது. புது பாடல்கள் புது சவுண்ட்ஸ் கேட்கும் நேரத்தில் இருக்கோம். எனக்கு ரீமிக்ஸ் பண்ணும்னு இதுவரை தோணல, இனிமே தோணலாம்!

டெக்னாலஜி வர்றதுக்கு முன்னால், டெக்னாலஜிக்குப் பின்னால்னு எப்பவும் ஒரு ஒப்பீடு இருக்கும். இசைத் துறையில் டெக்னாலஜி என்ன விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு?

நிறைய பேர் டெக்னாலஜி வந்திட்டதால இசையுடைய தரம் குறைஞ்சிட்டதா நினைக்கறாங்க. உண்மையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் டெக்னாலஜியால நடந்திருக்கு. இரவுல இருட்டா இருக்குனு பயந்தவனுக்கு நெருப்புனு ஒரு டெக்னாலஜி கிடைச்சது. அந்த மாதிரி நிறைய டூல் இசையில் வந்திருக்கு. எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொருத்தருடைய ஐடியாலதான் இசை உருவாகும். வெறும் டெக்னாலஜியால இசை வந்திடாதில்ல. அதே சமயம் டெக்னாலஜிய நாம எதிரியா பார்க்க வேண்டியதும் இல்ல.

ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளருக்குப் பாடும் ட்ரெண்ட் இன்னும் தொடருது, எப்படி இந்த நட்பை புதுப்பிச்சுக்கறீங்க?

அது ட்ரெண்ட் கூட இல்ல, ரொம்ப ஆரோக்யமான, அவசியமான விஷயமா நான் பாக்கறேன். இசையமைப்பாளரா இருக்கறதால இன்னொருத்தர் இசைக்கு பாடக்கூடாதுங்கற காலம் எல்லாம் மாறிடுச்சு. இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னென்னா, நான் ஒரு அனிருத் ஃபேன், சந்தோஷ் நாரயணன் பிடிக்கும், ஜஸ்டின் பிடிக்கும் அவங்க இசைல பாடறதுன்னும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு. இன்னொரு நண்பன் பிரதீப்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம். இப்படி ஒவ்வொருத்தருக்கும் பாடும் போது புதுசு புதுசான விஷயங்கள் பிறக்குது. தொடர்ந்து இசை பற்றி நிறைய பேசிட்டிருக்கோம்.  இன்னும் நல்ல விஷயங்கள் நிறைய வரும்.

இப்போ அடிக்கடி கேட்கும் பாடல்கள் என்ன? யாருடைய இசை எல்லாம் பிடிக்கும்?

சமீபத்தில் அடிக்கடி கேட்கும் பாட்டு ‘என்ன தான் உன் பிரேமையோ’னு ‘பாதாள பைரவி’ படத்தில் வரும் பாட்டு. சமீபத்தில் வந்ததில், ரஹ்மான் சார் இசையமைச்சிருக்கும் ‘சாரட்டு வண்டில’ பாடல் ரொம்ப பிடிச்சது. அவ்வளவு உயிர்ப்பாக இருந்துச்சு. மணி சார், ரஹ்மான் சார் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். செல்வராகவன் சாரும் ரொம்ப பிடிக்கும். சிலரைப் பாட வைக்கற ஆசையும் இருக்கு. மலேஷியா வாசுதேவன் சாரை ரொம்ப மிஸ் பண்றேன். கைலாஷ் கேர பாடவைக்கணும், எஸ்.பி.பி சார பாட வைக்கணும்ங்கறது என்னுடைய கனவு.  

மறுவார்த்தை பேசாதே கம்போஸ் பண்ண மிஸ்டர் எக்ஸ் நீங்க தானா?

நானா? மிஸ்டர் X ஆ? (சிரிக்கிறார்)  இல்ல பிரதர். "குட் ஜாப் பை அனானிமஸ்"னு அந்த பாட்ட ட்விட்டர்ல நானே ஷேர் பண்ணியிருந்தேன். யார்னு தெரியல, யார்னு தெரிஞ்சுக்கலாம்னு கௌதம் சார்ட்ட துருவித் துருவிக் கேட்டேன் ஆனா, சொல்ல மாட்டேன்னுட்டார்.

- பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு