Published:Updated:

மிஸ்டர் மியாவ்: எஸ்கேப் ஹன்சிகா!

மிஸ்டர் மியாவ்: எஸ்கேப் ஹன்சிகா!

பிரீமியம் ஸ்டோரி
##~##

• ''நேரம் வந்துச்சுன்னா எறும்புகூட ஏரோப்ளேன்ல போகும்...'' பூனையாரிடம் புலம்பினார், 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ யூனிட்டின் லைட்பாய். ''ஆரம்பத்தில் இருந்து உதயநிதி சி.எம். பேரன்னு பயந்து, பவ்யமா இருந்தார் ஹன்சிகா மோத்வானி. போன வாரம் மும்பையில் ஷூட்டிங். திடீர்னு, 'நான் ஆந்திரா போகணும்’னு அடம்பிடித்தார் ஹன்சிகா. டைரக்டர் ராஜேஷ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், 'நோ’ சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். நடந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்தார் உதயநிதி!'' என்று கொட்டினார், லைட்பாய்! 

• நேற்று வரை சின்னத் திரையில் தொகுப்பாளி​னியாக இருந்தவர் ரம்யா. அம்மணியின்  ரசனை, திறமையைப் பார்த்து, யுடிவி நிறுவனம், அவருக்கு சினிமா தயாரிப்புக்கான கிரியேட்டிவ் ஹெட் பதவி கொடுத்து இருக்கிறது. பொறாமையில் புகைகிறார்கள் தொகுப்பாளினிகள்!

மிஸ்டர் மியாவ்: எஸ்கேப் ஹன்சிகா!

• 'பில்லா’ படத்தில் விஷ்ணுவர்த்தன் உதவியா​ளராக இருந்தார் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம். இப்போது, 'கும்கி’ படத்தில் ஹீரோ. சிவாஜி ஃபிலிம்ஸ் கதவைத் தட்டி எத்தனையோ பேர் நடிக்க வாய்ப்புக் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், சிவாஜி​யின் பேரன், நேரடியாக பிரபு சாலமன் ஆபீஸுக்குப் போய் நடிப்பு வாய்ப்புக் கேட்டதை, கோலிவுட்டே ஆச்சர்யமாகப் பார்க்கிறது!

• இனி, புதிய இயக்குநர்கள் படத்தில் நடிப்பது இல்லை என்ற முடிவில் இருக்கிறாராம் விஜய். ஷங்கர் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் மாறிவிட்டாராம். அடுத்து முருகதாஸ், கௌதம் மேனன் என்று ஸ்டார் டைரக்டர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறாராம்!

• அரவாணி வேடத்தில் நடிக்கும் சரத்குமார், 'காஞ்சனா’ படத்தில் தூள்படுத்தி இருக்கிறாராம். சரத் நடித்த காட்சிகளைப் பார்த்த சல்மான்கான், 'காஞ்சனா’ படத்தின் இந்தி உரிமையை வாங்கிவிட்டாராம்!

மிஸ்டர் மியாவ்: எஸ்கேப் ஹன்சிகா!
மிஸ்டர் மியாவ்: எஸ்கேப் ஹன்சிகா!

• 'மலைத் தொடர் நடிகை’ மூலம் போயஸ் கார்டனுக்குப் போக முயற்சி செய்தாராம், 'காவி’ மலர். விஷயத்தை வேதா நிலையம் கொண்டுபோன மலை நடிகைக்கு, மானாவாரியான டோஸ்தான் மிஞ்சியதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு