Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பவர் பாண்டி ஏன் ப.பாண்டி ஆச்சு?' நாலுபேரு நாலுவிதமா பேசுறாங்களே..!

எந்த விஷயமானாலும் அதை நாலு பேரு நாலுவிதமா பேசுறதுதானே பாஸ் உலகவழக்கம். 'பவர்பாண்டி' பட ட்ரெய்லரைப் பார்த்துட்டு மட்டும் சும்மா இருப்பாங்களா என்ன? அதைப்பற்றியும் நாலுபேரு பேசுனா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை...

@சுள்ளான் சுரேஷ்: இன்னைக்கு இருக்கிறதுலேயே பாலிவுட் வரைக்கும் படமெடுத்து ஆடக்கூடியவரு எங்க தலைவன்தான். பாத்தீங்கள்ல ப்ரொடியூசரா இருந்தாரு லிரிக்ஸிஸ்ட்டா இருந்தாரு. பாடகராகவும் இருந்தாரு. இப்போ டைரக்டராகவும் ஆகிட்டாரு. நிறைய படங்கள் எடுத்தபிறகுதான் படத்துல டைரக்டர் டச்லாம்  இருக்கும். ஆனா முதல் படத்துலேயே தலைவர் தனுஷோட ருத்ராட்சக்கொட்டையை ராஜ்கிரண் போட்ருக்காரு. வேற லெவல். இனிமேதான்டா எங்க ஆட்டமே...

பவர் பாண்டி

@எஸ்.டி.ஆர் எர்வின்: நீங்க இப்பதான் டைரக்டர் ஆகிருக்கீங்க. நாங்கள்லாம் அப்பவே அப்படி. ராஜ்கிரணுக்கு புல்லட்டைக் கொடுத்து ஓட்டவெச்சது எங்களை ஓட்டத்தான்னு எங்களுக்குத் தெரியும். 'அச்சம் என்பது மடமையடா'வை ஸ்பூஃப் பண்ணி எடுத்துட்டு அந்தப் படத்துக்கு டைரக்டர் டச்னு பில்டப் வேறயா?. நீங்களாம் ஸ்பூஃப் வச்சு ஆடுறவங்க நாங்கலாம் ஸ்பூனை வச்சே ஆட்றவங்க. புரியலைல. அதான் நாங்க.

@'அரண்மனைக்கிளி' அங்குராஜ்: ஏப்பா எலும்பாட்டம் இருந்துக்கிட்டு என்னங்கப்பா வெட்டிப்பேச்சு. எங்க தலைவர்லாம் படத்துல வெட்டிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார். நாங்களும் ஒருகாலத்துல தலைவர் நல்லி எலும்பைக் கடிச்சதைப் பார்த்துட்டு கறிக்கடையையே குத்தகைக்கு எடுத்து எலும்பு வாங்கி கடிச்ச பயலுகதாம்ப்பு. அப்புறம் நீங்க மட்டும்தான் ஏதோ புதுசா படமெடுத்து படம் காட்டிட்டதா பேசிட்டு இருக்கீங்க. நாங்க அப்பவே 'அரண்மனைக்கிளி' எடுத்து கிழி கிழின்னு கிழிச்ச ஆளுங்கப்பு. சூதானமா இருங்க. இனிமேதான் ஆட்டம்னு சொன்னது உங்களுக்கில்ல; எங்களுக்குதான். ரிலேஷன்சிப்பைப் பாத்தீங்கள்ல சிங்கிள்... சிங்கிள்..!

@நியூட்ரல் நிரஞ்சன்: ட்ரெய்லர் பாத்தேன். ட்ரெய்லரை விடுங்க, பவர் பாண்டினுதானே மொதல்ல பேர் வெச்சிருந்தீங்க. இப்போ எதுக்கு ப.பாண்டினு மாத்திருக்கீங்க. பவருங்கிறது இங்கிலீஷ் வார்த்தைங்கிறதுலாம் ஏற்கெனவே தெரியுமா இல்ல, படம் பேர் வெச்சபிறகுதான் பவருங்கிறதை இங்கிலீஷாக மாத்தினாங்களா? தியேட்டருக்கு வர வெச்சு படத்துலதான் சுண்ணாம்பு அடிக்கிறீங்க. பட டைட்டில்லையுமா இப்படி அக்கப்போருகளைப் பண்ணுவீங்க. என்னமோ போங்க...

- ஜெ.வி.பிரவீன்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்