Published:Updated:

நடிகர் சங்கத்துக்கு மார்ச் 31-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!- நாசர் தகவல்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
நடிகர் சங்கத்துக்கு மார்ச் 31-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!- நாசர் தகவல்
நடிகர் சங்கத்துக்கு மார்ச் 31-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!- நாசர் தகவல்
நடிகர் சங்கத்துக்கு மார்ச் 31-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!- நாசர் தகவல்

'நடிகர் சங்கக் கட்டடத்துக்கு, வரும் 31-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாக, தமிழ்த் திரையுலக நடிகர்களிடையே நீண்ட காலமாக பிரச்னைகள் நீடித்துவந்தன. இந்தப் பிரச்னை காரணமாக, முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோருக்கு எதிராக விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும், அவர்களுக்கு எதிராகப் புதிய அணி ஒன்றை அமைத்து, நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், 'தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில், வரும் 31-ம் தேதி, நடிகர் சங்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும். அந்தக் கட்டடம், 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்' என்றார்.