Published:Updated:

பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

Published:Updated:
பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்!

சினிமாவில் எப்போதுமே பிரகாஷ்ராஜ் தொடங்கி கிஷோர் வரை வில்லன்கள் மட்டும்தான் அட்டூழியம் பண்ணுவாங்களா... நம்ம ஹீரோக்கள் பண்ணின அட்டூழியங்களைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்ப்போமா ஃபிரெண்ட்ச்....!

* நம்ம இளையதளபதில இருந்து ஆரம்பிப்போம். 'ஜில்லா' படத்துல போலீஸ் கமிஷனர்தான் வில்லன். ஆனா அவரே மோகன்லாலைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போவார். ஆனா நம்ம லால், உள்ளே வரும் போலீஸையே வெட்ட ஆள் அனுப்புவார். அவர் தன்னைப் பாதுகாத்துக்க, வெட்டவரும் ஆளை முட்டிக்குக் கீழே சுடுவார். வந்தவங்களை வரவேற்பது நம்ம பண்பாடு தெரியாதா சேட்டா.. சரி உள்ளே வந்தவரை 'முடிஞ்சா என்னைக் கைது பண்ணி கூட்டிட்டுப் போ' னு சொல்லிட்டு, அவரே ஜீப்ல ஏறிப் போவார். கமிஷனரும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணி ரோட்டுல இறக்கிவிட்டுட்டு யோசினு சொல்லிட்டுப் போய்டுவார். அதுக்குப்போய் நம்ம தளபதி கமிஷனரின் கையை வெட்டி நடுரோட்டுல பன்ச் பேசுவார்.

* 'தெறி' படத்துல வில்லன் பையனை தளபதி கொன்னு பாலத்துல தொங்க விட்டுடுவார். ரைட்டுதான் ப்ரோ.. ஆனா அதை வில்லனான மந்திரிகிட்டயே சொல்லி, 'உன்னால பண்ண முடிஞ்சதைப் பண்ணிக்கோ'ன்னு சொன்னா பதிலுக்கு அவர் பழிவாங்காம என்ன பண்ணுவாரு?! சொல்லுங்க ப்ரோ...சொல்லுங்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* அடுத்து நம்ம தனுஷ். 'மாரி' படத்துல ஏரியா தாதா, ஓகே... அதுக்காக வர்றவங்க, போறவங்ககிட்ட வம்பிழுத்து அடிக்கறது எல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா? அது மட்டுமா, ரோட்டோர கடைக்காரங்களை அடிச்சு மாமூல் வாங்குவார். க்ளைமாக்ஸ்ல போலீஸூக்கு இந்த தாதா பரவாயில்லைங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் மாரியை மக்கள் ஏத்துக்குவாங்க.

* 'ஆறு' படத்துல சூர்யா தன் அண்ணனா நினைச்சு வில்லன் ஆஷிஷ் வித்யார்த்திகிட்ட வேலை செய்வார். தீக்குளிக்கற மாதிரி நடிக்கவைக்கப்போய் உண்மையாவே தீக்குளிக்க வெச்சிடுவார் வில்லன். அதுக்காக ரிவெஞ்ச் எடுப்பார் சூர்யா. ஏன் பாஸ் எனக்கொரு டவுட். தீக்குளிக்கற மாதிரி நடிச்சு மக்களை ஏமாத்துறதே  துரோகம்தானே..! நீங்க துரோகி இல்லையா?

* 'அஞ்சான்' படத்துல ஹீரோவை வில்லன் கொஞ்சம் மரியாதையா கூப்பிட்டு பார்ட்டி வெச்சு அதுக்கு அப்புறம், 'பன்னியை சுடுற மாதிரி சுட்ருவேன்'னு மிரட்டுவார். அதே டயலாக்கைத் திரும்பத் திரும்பச் சொல்லி (அந்தாளுகூட ஒரு தடவைதான் சொன்னார்) வில்லனைக் கடத்தி டவுசரை கழட்டி நிற்க வெச்சுடுவாங்க நம்ம நண்பர்கள். கொன்னுருந்தாலும் பரவாயில்லை. அப்படியே விட்டுட்டா  தாதா பழிவாங்காம என்ன பண்ணுவார் சாரே? அதுவும் க்ளைமாக்ஸ்ல வில்லனோட அடியாட்கள்கிட்ட  'நீ எங்கூட சேர்ந்திடு, பணம் தரேன்'னு சொல்லிட்டு அவங்களையே கடைசியா கொன்னுட்டு "எதிரிக்குக்கூட துரோகி இருக்கக் கூடாது'னு பன்ச் விட்டா நியாயமா?

* 'சேதுபதி' படத்துல விஜய்சேதுபதி ஏதோ ஓர் இடத்துல திருடின ஸ்கூல் பசங்களை துப்பாக்கி வெச்சு விசாரிக்கும்போது துப்பாக்கி  வெடிச்சுடும். அந்த துப்பாக்கிய யாரு க்ளாக் பண்ணுனதுன்னு கண்டுபிடிப்பார் சேதுபதி. ஏன் பாஸ் துப்பாக்கி வெச்சு மிரட்டுறதே தப்பு. இதுல ட்ரிக்கர் அமுத்தி சுட வேற செஞ்சது ரொம்ப ரொம்பத் தப்பு!

ஹீரோக்கள் மேலேயே இவ்வளவு குற்றச்சாட்டுகளை வெச்சுக்கிட்டு, வில்லன்களை மட்டும் குற்றம் சொல்றது நல்லாவா இருக்கு? வில்லன்கள் மட்டும் என்ன தக்காளித் தொக்கா?

- ஜீ.கார்த்திகேயன் (மாணவப் பத்திரிகையாளர்)