Published:Updated:

சல்மான் கான் பட ஆடியோ 20 கோடிக்கு விற்பனை!

பா.ஜான்ஸன்
சல்மான் கான் பட ஆடியோ 20 கோடிக்கு விற்பனை!
சல்மான் கான் பட ஆடியோ 20 கோடிக்கு விற்பனை!

'பஜ்ரங்கி பாய்ஜான்' படத்துக்குப் பிறகு, கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம், 'டியூப்லைட்'. போர் பின்னணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதில், சல்மானின் சகோதரர் சோஹாலி கானும் நடித்திருக்கிறார். சீன நடிகை ஸு ஸு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சல்மான் கான் பட ஆடியோ 20 கோடிக்கு விற்பனை!

இந்தப் படத்தின் பாடல் உரிமையை, சோனி நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மொத்தம் மூன்று பாடல்கள் மட்டுமே உள்ள ஆல்பம், இந்த விலைக்கு விற்பனையாகியிருக்கிறது. அந்த மூன்றும் பின்னணி இசைக்காக என்பதுதான், கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஜூலியஸ் பக்கியம் இசையமைத்திருக்கும் இந்தப் பின்னணி இசையில், என்ன ஸ்பெஷல் என்பதைப் படம் வெளியான பின்பே தெரிந்துகொள்ள முடியும். ஜூன் மாதம் வெளியாகிறது 'டியூப்லைட்'.