Published:Updated:

'அந்த ஒரு ஆசை.... நிறைவேறாமலே இருக்கு!’’ - ’அதிர்ஷ்ட லட்சுமி’ மகேஸ்வரி

'அந்த ஒரு ஆசை.... நிறைவேறாமலே இருக்கு!’’ - ’அதிர்ஷ்ட லட்சுமி’ மகேஸ்வரி
'அந்த ஒரு ஆசை.... நிறைவேறாமலே இருக்கு!’’ - ’அதிர்ஷ்ட லட்சுமி’ மகேஸ்வரி

பத்து வருடங்களுக்கு முன்பு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஸ்வரி. அதன் பிறகு இரண்டு சீரியல்களில் நடித்தார். இதைப் பார்த்து இரண்டு படங்களில் நடிக்க வெள்ளித்திரை அழைக்கவும், அங்கு தன் நடிப்புத் திறமையைக் காண்பித்தார். இப்போது மறுபடியும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அதிர்ஷ்ட லட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம், 

'என்ன மறுபடியும் தொகுப்பாளினியா களம் இறங்கிட்டீங்க?' 

''எனக்கு நடிப்பை விடத் தொகுப்பாளினியா இருக்கிறது பிடிச்சிருக்கு. அதனாலதான் மறுபடியும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துட்டேன். நம்மளோட திறமை அத்தனையையும் இங்க காண்பிக்க முடியும். பல வருஷத்துக்கு அப்புறம் இண்டஸ்ட்ரிக்கு வர்றேன்... ஆனா நேத்துதான் என்ட்ரி ஆன மாதிரி இருக்குது''. 

'சென்னை 28 பார்ட் - 2 ல நடிச்சிருந்தீங்களே அந்த அனுபவம் பற்றி?' 

''இந்தப் படத்திற்கு முன்னாடி 'கந்தசாமி' படத்துல நடிச்சிருந்தேன். அதுக்கப்புறம் தான் சென்னை 28 பார்ட் -2 ல நடிக்கிறவாய்ப்புக் கிடைச்சது. அந்த படத்துல நான் நடிச்சது மறக்க முடியாத அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட் மாதிரியே இருக்காது. எப்பவும் செம்ம ஜாலியா இருக்கும். கலகல டீம்''. 

'ரொம்ப வருஷமா VJ வாக இருக்க மாதிரி தெரியுதே?' 

''ஆமாம், சன் மியூசிக்ல கிட்டத்தட்ட பத்து வருஷம் VJ வாக இருந்தேன். இப்போ மறுபடியும் ஜீ தமிழ்ல்ல அந்தவேலையைத் தொடர்ந்திருக்கேன். எனக்கு பேசுறது ரொம்ப பிடிக்கும். பேசுறது மட்டும்தான் பிடிக்கும். வீட்லயும் சரி, வெளியிலயும் சரி ஒரே மாதிரிதான். நான் லூட்டி பண்ணிட்டே இருப்பேன்''. 

'உங்க நண்பர்கள் வட்டாரத்தில் உங்களுக்கு என்ன பேர்?' 

''நான் இருக்கிற இடம் எப்பவுமே கலகலனு இருக்கும்.'ரவுடி' இதுதான் என் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில எனக்கு இருக்கிறசெல்லப் பேர். ஆனா நான் பரமசாதுங்க. ஆனா பழக ஆரம்பிச்சுட்டா திக் ஃப்ரெண்டா மாறிடுவேன்''. 

'உங்க காஸ்டியூமை யார் டிசைன் பண்றா?' 

''என்னோட அக்காதான் என்னோட காஸ்டியூமர். அவங்க காஸ்டியூம் டிசைனர் கோர்ஸ் முடிச்சிருக்கிறதால என்னோட உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி காஸ்டியூமை டிசைன் பண்றாங்க. அக்காகிட்ட அடிக்கடி குறைசொல்லிக்கிட்டே இருப்பேன். எனக்குப் பிடிச்ச மாதிரி அவங்க காஸ்டியூம் டிசைன் செய்து கொடுக்கிறாங்க. மத்தவங்களா இருந்தா இப்படி உரிமைஎடுத்துக்க முடியாதுல்ல''. 

'உங்களுக்கும் கோ ஆங்கர் கமலுக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எப்படி?' 

''நீங்க வேற ஆரம்பத்துல அவருக்கும் எனக்கு அவ்வளவு பிரச்னை வரும் தெரியுமா? பல நாள் சண்டைப் போட்டு எலியும், பூனையுமா இருந்த நாங்கதான் இந்த நிகழ்ச்சியை இன்னும் வெற்றிகரமாகக் கொண்டு போயிட்டு இருக்கோம்''.

'அப்படியா, அப்படி என்ன பிரச்னை இரண்டு பேருக்குள்ளயும்?' 

''நான் கொஞ்சமாவது டீசன்டா பேசணும்னு நினைப்பேன். ஆனா, அவர் பக்கா லோக்கலாப் பேசுவார். எனக்கு சுத்தமா பிடிக்காம இருந்துச்சு. நான் பேசுறப்ப அவர் பண்ணின லோக்கல் கமென்ட் எனக்கு பிடிக்காம இருந்தது.'இப்ப கமெண்ட் பண்ணா எப்படி என்னால பேச முடியும்'னு சண்டை போடுவேன். அதுக்கப்புறம் அவரோட கேரக்டரை புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். நல்ல திறமையான ஆள். நிகழ்ச்சிக்கு வர்றவங்களை ஈஸியா கலகலனு பேச வைச்சிடுவார். இப்போ எங்கரெண்டு  பேருக்குள்ளேயும் நல்ல புரிதல் வந்திடுச்சு. பிரதர், சிஸ்டர் காம்போல கலக்கிட்டு இருக்கோம்''.  

'உங்களோட நிறைவேறாத ஆசை?' 

''இதுக்கு முன்னாடி இரண்டு மூன்று ஷார்ட் ஃப்லிம் நடிக்கிற வாய்ப்பு வந்து கடைசி நேரத்துல மிஸ் ஆச்சு. ஜஸ்ட் மிஸ்லநிறைய  வாய்ப்புகள் பறி போயிருக்கு. இருந்தாலும் மனம் தளராம அடுத்தடுத்து முயற்சி பண்ணிட்டே இருக்கேன். கண்டிப்பாக எதிர்காலத்தில்  நல்ல ஒரு ஷார்ட் பிலிம்ல என்னோட நடிப்பைக் கண்டு நீங்க ஆச்சர்யப்படலாம். ஐ ஆம்ஆல்ஸோ வெயிட்டிங்!'' என்கிறார் கலகலவென. 

-வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு