Published:Updated:

நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ படத்தில் டோரா யார் தெரியுமா? #HighlightsOfDora

முத்து பகவத்
நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ படத்தில் டோரா யார் தெரியுமா? #HighlightsOfDora
நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ படத்தில் டோரா யார் தெரியுமா? #HighlightsOfDora

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக அசரடிக்கிறார் நயன்தாரா. அட்லீயின் ‘ராஜா ராணி’ படம் கொடுத்த பெரும் வெற்றி, நயன்தாராவின் சினிமா கிராஃப் வேற லெவலுக்கு எகிற வழிசெய்தது. தமிழ்சினிமா தவிர, மலையாளம், தெலுங்கு என 360 டிகிரியில் பிஸியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. 

‘மாயா’வில் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸினால் ‘ஹீரோயின் ஒன்லி’ சப்ஜெட்டுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியவருக்கு, அடுத்தடுத்து பல படங்கள் லைன் கட்டி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன. ‘இமைக்கா நொடிகள்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’ ‘அறம்’ வரிசையில் முதல் ரிலீஸ் ‘டோரா’. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ்ராமசாமி இயக்கியிருக்கும் இப்படம் வரும் 31-ம் தேதி ரிலீஸ்.  படத்திற்கு இசை விவேக் -மெர்வின்.  தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை கோபிகிருஷ்ணா கவனித்திருக்கிறார்.

கதை திருடப்பட்டுவிட்டது என்று பல பிரச்னைகளையும் தாண்டி, ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. படத்தின் கதையும் ஹைலைட்ஸூம் என்னவென்று கோலிவுட் நகரை வட்டமிட்டதில் சிக்கியவை! 

படத்தில் ஒன் லைன்: 

கார் தான் ஹீரோ. நயன்தாரா  ஹிரோயின். காருக்குள் ஓர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. அந்தச் சம்பவத்திற்குக் காரணமான வில்லன்களைப் பழிவாங்கத் துடிக்கும் கார், நயன்தாராவைத் தேர்ந்தெடுக்கிறது. நயனும் காரும் சேர்ந்து வில்லன்களைத் துவம்சம் செய்தார்களா என்பதுதான் கதை. 

ஹைலைட்ஸ்: 

 ஏதாவது சாதிக்கவேண்டும் என்று நினைக்கிற கேரக்டர் நயன்தாராவிற்கு. சொந்தகாரர்கள் முன்னாடி வாழ்ந்த காட்டவேண்டும் என்று அவர் எடுக்கும் முடிவுதான் காருக்கும், நயனுக்குமான ட்விஸ்ட் தொடங்குமிடம். 

 நயன்தாராவின் தந்தையாக தம்பிராமையா நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான தனிபாணியில் நடிப்பிலும், காமெடியிலும் நடித்திருக்கிறார். 

 படத்தில் டோரா யாருன்னு தெரியுமா? டோரா என்பது அந்தக் காரா இல்லை, காருக்குள் இருக்கும் ஆத்மாவா என்பதும், அந்த ஆத்மா யாரென்பதும் ட்விஸ்ட். 

 மொத்தமாக மூன்று வில்லன்கள் படத்தில். யார் அந்த மூன்று வில்லன்கள் என்பதும், எப்படி அந்த வில்லன்களை டோரா தீர்த்துக்கட்டுகிறது என்பதும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள். 

 நயன்தாராவிற்கு காதல் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் டோராவுக்கும் நயன்தாராவிற்குமான காதல் ஒரு ட்ராக்கில் போகிறதாம். 

 படத்திற்கான ஒட்டுமொத்த செலவு எட்டுகோடி. அதில் நயனுக்கு சம்பளம் மட்டுமே 3  கோடியாம். அதைத்தவிர விளம்பரங்கள் மற்றும் இதர புரோமோஷன்கள் தனி. 

 ஒட்டுமொத்தப் படத்திற்கும் மொத்தமாக 10 கதாபாத்திரங்கள்தான். குறைவான பட்ஜெட், குறைவான  நடிகரக்ள் என்று வெற லெவலில் மிரட்டும் ஹாரர் த்ரில்லர்தான் இந்த ‘டோரா’. 

 ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஓப்பனிங் காட்சியில் நடக்கும் க்ரைம் பற்றி விசாரிக்கும் ஸ்பெஷல் போலீஸ் ஹரிஷ். 

 க்ளைமேக்ஸில் வில்லன்கள் நயன்தாராவின் தந்தையான தம்பிராமையாவை துவைத்து எடுக்க, காரோடு சென்று ஹீரோயினிஸம் காட்டுகிறார் நயன்தாரா. #எல்லா தமிழ் சினிமாவிலும் அதானே பாஸ் நடக்கும்! 

 ‘டோரா’ என்ற பெயர் குழந்தைகளை அதிகம் கவரும் என்ற எண்ணத்தில் டைட்டிலாக தேர்ந்தெடுக்கப்பட்டதாம். ஆனால் ஹாரர் படமென்பதால் ‘A' சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு. மறு தணிக்கைக்குச் செல்ல நேரம் இல்லாத காரணத்தால் அதே சான்றிதழுடன் திரையரங்கிற்கு வருகிறது. பின்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய மீண்டும் மறுதணிக்கைக்குச் வரவேண்டிய கட்டாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பின் குறிப்பு: வெரிஃபைட்டுதானே என்றெல்லாம் கேட்கக்கூடாது. மேல் குறிப்பிட்டவைக்கும், டோரா கதைக்கும் ஆறு வித்தியாசங்கள் இருக்கலாம் பாஸ்!

-முத்து பகவத்-