Published:Updated:

கொலவெறி, பைபோலார், ஜென் Z கல்யாணம் சொல்லிக் கொடுத்த மூணு #5YearsofMoonu

கொலவெறி, பைபோலார், ஜென் Z கல்யாணம் சொல்லிக் கொடுத்த மூணு #5YearsofMoonu
கொலவெறி, பைபோலார், ஜென் Z கல்யாணம் சொல்லிக் கொடுத்த மூணு #5YearsofMoonu

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே படம் உலக வைரல், ஒபாமா இந்த படத்தோட பாட்ட கேக்குறாரு, ஜப்பான்ல இந்த படத்தோட பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்கனு செய்திகள் உலகத்தோட எல்லா பக்கமும் எதிரொலிக்குதுனு வெறித்தனமான வைரலா ரிலிஸான 3 படம் ரிலீஸ் ஆகி 5 வருஷமாச்சு பாஸ். இந்த படம் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டிய விஷயங்கள் நிறையா இருக்கு. அது என்னென்னனு தெரியுமா?

ராக்ஸ்டார்:

ஒரே பாட்டுல தமிழ் சினிமால தான் ஹிரோ பெரியா ஆளா வளருவாரு, அதுக்கப்புறம் உலகமே அவர பாத்து வாவ்னு சொல்லும். ஆனா இதெல்லாம் ரியல் லைஃப்லயும் நடக்கும்னு நிருபிச்சது. இந்த படத்தோட அறிமுக இசையமைப்பாளர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’னு ஒரே பாட்டு உலகமே ஆடுதுனு வைரலின் உச்சத்துக்கே சென்றார் அனிருத். படத்துல ‘போ.நீ..போ’ பாட்டுலலாம் சிலிர்க்க வெச்ச ப்ரோ. 5 வருஷத்துல ஆன்லைன் வைரல் மெட்டிரியல், தல-தளபதிக்கு மாஸ் மியூஸிக் ஹிட், அமெரிக்கால கான்செர்ட்னு ராக் ஸ்டார் அனிருத்தாக வலம் வர இந்த படம் விசிட்டிங் கார்ட்னா, அதுல கோல்டன் லெட்டர்ஸ் ‘கொலவெறி!’.   

ஜோக்கர் இப்போ மாஸ் ஹீரோ!

தனுஷோட ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஒரு முக்கால் மணி நேரம் மட்டுமே வந்து போன கேரக்டர் குமரன். டிவி சேனல்ல தொகுப்பாளரா இருந்த சிவகார்த்திகேயன புடிச்சு போட்டு காமெடி பண்ண வைச்சாரு தனுஷ். சிவா ஹீரோ மெட்ட்டிரியல், தியேட்டர்ல அவருக்கு தனியா க்ளாப்ஸ் கிடைக்குதுனு அவர அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் விட்டு. இந்த முகத்த தியேட்டர்ல 3 மணி நேரம் பாக்கலாம் போரடிக்காதுனு ஆடியன்ஸ் ஃபீல் பண்ண வைச்சது. இன்னும் சொல்லபோனா செகண்ட் ஹாஃப்ல சிவகார்ர்த்திகேயன் எங்கனு டைரக்டர திட்ட வைக்குற அளவுக்கு ஒரு ஆழமான கதாபாத்திரமா மக்கள் மனதில் இடம்பிடித்தார் சிவா. 5 வருஷத்துக்கு முன்னாடி காமெடியன் இன்னிக்கு மாஸ் என்டெர்டெயினர் பாஸ்.

ஒய் திஸ் கொலவெறி:

இன்டெர்நெட்ல ஏதோ பாட்டு லீக் ஆகிடுச்சாம் அது தனுஷ் பட பாட்டாம் கேட்க நல்லா இருக்குப்பானு வாட்ஸ் அப் இல்லாத காலத்துலயே வைரலா பரவுன பாட்டு. இவ்வளவு ஏன் திருட்டு விசிடில தான் பைரஸி இருக்கும்னு நம்புன தலைமுறைய இண்டெர்நெட் தான் பெரிய பைரஸினு புரிய வைச்சது இந்தப் படம் தான். சாமனிய மக்கள் யூஸ் பண்ற இங்கிலீஷ் வார்த்தை... யூத்துக்கு புடிச்ச வரிகள்னு கொயட்டா இருந்த தனுஷ் பொயட்டா வெடிச்சதும் இந்த படத்துல தான். இந்த பாட்ட இத எழுதற நொடி வரைக்கும் 119,023,162 (Still Counting..) தடவ ஒரிஜினலா கேட்டுருக்காங்க. இது தவிர பைரஸி வேற. இன்னிக்க்கு ஆன்லைன்ல அடிச்சுக்குற டீஸர், ட்ரெய்லர்ல சண்டைக்கெல்லாம் விதை நாங்க போட்டதுனு தனுஷால கெத்தா சொல்ல முடியும். 

பைபோலார் டிஸார்டர்: 

தல வலிக்குதுனு யாராவது சொன்னா ப்ரைன் ட்யூமர், வயிறு வலிக்குதுனு சொன்னா கேன்சர் அப்படினு ஹாஸ்பிட்டல் டெம்ப்ளேட்ல இருந்த தமிழ் சினிமாக்கு புது நோயை அறிமுகம் செய்ததும் இந்தப் படம் தான். நார்மலா தான் இருப்பான் திடீர்னு மனசு ஒரு மாதிரி யோசிச்சு கத்திய கழுத்துக்கு கொண்டு போவான்னுலாம் சிம்டம்ஸ் காட்டி பைபோலார் டிஸார்டர்ங்குற அரிய வியாதி’ய அறிமுகப்படுத்தினதும் இந்தப் படம்தான்.   

ஜென் Z கல்யாணம்:

கல்யாணம் வீட்ல நடக்கும், மண்டபத்துல நடக்கும், கோவில, சர்ச்னுல்லாம் கூட நடக்கும் ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஹிஸ்டரி ஆஃப் தமிழ் சினிமால பப்ல வைச்சு கல்யாணம் பண்ணது இந்த படத்துலயா தான் இருக்கும். ஜென் இஸட் தலைமுறை இப்படியும் கூட கல்யாணம் பண்ணுவாங்கனு சொல்லிருப்பாங்க. ம்ம்ம்... என்னமோ போடா மாதவா!

வார்த்தையெல்லாமே வைரல் தான்!

சூப் பாய்ஸ் - லப் பெயிலியராகி தாடி வைச்சி திரியுற பசங்கள எல்லாம் எப்படி கூப்புடுறதுனு தெரியாம இருந்த ஊருக்கு சூப் பாய்ஸ்ங்குற அடையாளம்,  லைஃப் மேட்டர், பங்கம், பழைய 5 பைசா மூஞ்சி இந்த வார்த்தைகெல்லாம் காப்பி ரைட் வாங்கி வைச்சுக்குற அளவுக்கு அவ்ளோ யூத் ஃபுல்லான வார்த்தைகள். எல்லாமே இந்தப் படத்துல இருக்கும்.

அனிருத், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா தனுஷ் இவுங்கல்லாம் இன்னிக்கு வேற லெவல்ல இருந்தாலும் இவங்களுக்கு விசிட்டிங் கார்டா இருந்தது இந்தப் படம் தான்.

ஒரு படம் வெற்றி பெறுவது சாதனைதான். ஆனா, 3 படம் வெற்றியா இல்லையான்றதைத் தாண்டி, பல வெற்றியாளர்களை உருவாக்கின படம்.  நடிச்சவங்களுக்கு மட்டுமில்ல. இந்தப் படத்த ரிலீஸ் பண்ணின தனுஷோட ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் வெண்டர்பார் பிலிம்ஸுக்கு அடையாளமா இருந்துச்சு. பலரோட வெற்றிக்கு ஏணிப்படியா இருந்தது இந்த 3-தான்!  

- ச.ஸ்ரீராம்