Published:Updated:

நிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun

நிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun
நிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun

நிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun

தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் ஜெயிச்சுட்டா தமிழ் ராக்கர்ஸ் அட்மினை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போடுவோம் சார் ஜெயில்ல னு மிஷ்கின் பேட்டி குடுத்துருக்காரு. ஹ்ம்ம்..  அப்படியே பெண்டிங்ல இருக்குற சில கோரிக்கைகளையும்  நிறைவேத்திட்டா ரொம்ப சிறப்பா இருக்கும் மக்களே செய்வீர்களா..

படத்துக்கு டைட்டில் வைக்கும்போது அது இங்க்லீஸ் பேருன்னு தெரிஞ்சும் வெட்டி பந்தாவாக இல்லல்ல.. கெத்தா ஸ்டைலா பேருவச்சிட்டு அதுக்கப்புறம் படம் ரிலீஸ் ஆக பத்துநாள் இருக்கும்போது  திடீர்னு வந்து பட்டி டிங்கரிங் பாத்து டைட்டிலுக்கு பவுடர் பூசி டார்ச்சர் பண்ணுற வேலைகளை எல்லாம் செய்யவே மாட்டோம்னு சூடத்துல சத்தியம் அடிச்சு இல்லைனா சத்யம் தியேட்டர் வாசல்லயே அட்லீஸ்ட் வெறும் சத்தியம் அடிச்சு சொன்னாலும் ரொம்ப சந்தோசமாப் போகும் உறவுகளே..

* படத்துல டைட்டில் கார்டு போடும்போது 'விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை' னு லாம் தெளிவாக டிஸ்க்ளைமர் போடுகிறவங்களுக்கு படத்தைப் பாக்குற ஆடியன்ஸ்களையும் துன்புறுத்தும்விதமாக காட்சிகள் அமைக்கப்படவில்லை என அழுத்தம் திருத்தமாக உறுதிமொழி உத்திரவாதம் அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டி ஏற்கெனவே துன்புறுத்தலுக்கு ஆளாகி தூங்கிய மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ப்ளீஸ் எதுனா பார்த்துச்செய்யுங்க..

* அப்புறம் இன்ணொண்ணுதான் புரியவே இல்லை. படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துலேயே 150கோடி வசூல் ஆயிருச்சு அடுத்தவாரத்துல 250கோடியைலாம் தாண்டிருச்சுன்னு ஊருக்குள் இருக்குற பாட்டிகள் வரைக்கும் பேட்டிகள் மூலமா செய்தியை கொண்டுபோயிச்சேர்த்துடுறீங்க. ஆனா அடுத்த மாசத்துலேயே படம் நஷ்டம், அவரு நஷ்ட ஈடு கேக்குறார்.. இவரு நஷ்ட ஈடு கேக்குறார்னு லாம் கிளம்புறாங்களே அப்போ அந்த வசூல் வசூலுனு சொன்னதுலாம் பொய்யா சொல்லுங்க கோபால் பொய்யா..ன்னு கேக்குற அளவுக்கு பண்ணிவச்சுடுறாங்க. இதுக்குலாம் ஒரு முடிவுகட்ட  தெளிவான அறிக்கைகளை வெளியிடுங்கனு சொல்ல வரலை வசூல் அறிக்கைகளையே விடாமல் இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்ல வாரோம் . எவ்வளவு...

* தியேட்டர்லதான் இப்படினா பேப்பர்ல சொல்லவே வேணாம் சென்னை சிட்டியைத்தாண்டி எந்த தியேட்டரும் சீண்டாத படத்துக்குக்கூட 'இன்றுமுதல் உலகமெங்கும் உங்கள் அபிமான..' னு மனசாட்சியே இல்லாம பக்கம் பக்கமாகலாம் வெளம்பரம் பண்ணிக்கிறாங்களே அவங்களைப்பாத்துதான் கேக்குறோம் தமிழ்நாடுனா எது இந்தியா னா எது உலகமுன்னா எதுன்னுலாம் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா..? அதைலாம் நிறுத்தணும் இத்தோட நிறுத்தணும்.

* அப்புறம் எப்படி லீக் ஆகுதுனே  தெரியாது ஆனா ரிலீஸ் பண்ணப்போறோம்னு சொல்லுற நாளுக்கு முதல் நாள் கரெக்டா இணையத்துல பாட்டுல இருந்து டீசர், ட்ரைலர் வரைக்கும் ரிலீஸ் ஆகுது. இதுலாம் அவங்களுத் தெரியாமதான் நடக்குதா இல்லை எல்லாம் தெரிஞ்சு பப்ளிசிட்டிக்காகப் பக்காவாகப் ப்ளான் பண்ணித்தான் நடக்குதாங்கிறதையும் அப்படியே யாருக்கிட்டயாச்சும் கேட்டுச் சொல்லிட்டுப்போனா புண்ணியமாப்போகும். இன்னும் நிறைய இருக்கு அதைலாம் அடுத்த எலக்சன்ல சொல்லுறோம். ஆங்.

- ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு