Published:Updated:

யூகிக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்! 

அஸ்வினி.சி
யூகிக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்! 
யூகிக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்! 

சென்னையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில்... தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிகளுக்கான தேர்தல் அதிகாரியாக,  ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.

யூகிக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்! 


 தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், 1,059 வாக்குகள் பதிவாகி உள்ளன.  ”மாலை 4.10 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும். அதற்கு மேல் கேட் மூடப்படும்” என்று தேர்தல் அதிகாரியான நீதியரசர் எஸ்.ராஜேஷ்வரன்  திட்டவட்டமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாலை 4.10 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 

யூகிக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்! 


 

இந்த ஆண்டு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைப் பொறுத்த வரையில் விஷால், ஆர்.ராதாகிருஷ்ணன்,கேயார் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவிவருகிறது. விஷாலின் ’நம்ம அணி’ தான் தலைவர் பதவியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற பதவிகளுக்கு, மூன்று அணிகளுக்கும் இடையே கடுமையான  போட்டி நிலவி வருகிறது. தலைவர் பதவியை ஒரு அணியும், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் பதவிகளை வெவ்வேறு அணிகள் கைப்பற்றும் பட்சத்தில், மூன்று அணிகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் மட்டுமே தயாரிப்பாளர் சங்கத்தை வழிநடத்த முடியும் என்று திரைத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன. 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால் அணியினர்,”இந்தத் தேர்தலில் தலைவர் பதவி எங்களுக்குதான்.  செயலாளர்,பொருளாளர் பதவிகளைப் பிற அணிகள் கைப்பற்றினாலும் எங்களுக்கு வருத்தம் இல்லை. இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர். 

-முத்து பகவத்

படங்கள்: தி.குமரகுருபரன்