Published:Updated:

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

Vikatan Correspondent
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ள  கார்த்திக்கிற்கு, மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.அதனைத் தொடர்ந்து  சிகிச்சையும்  அளிக்கப்பட்டது. அவர் தற்போது ந்லமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகராக தனது இன்னிங்ஸை தொடங்கிய  கார்த்திக்,கடைசியாக மாஞ்சாவேலு, ராவணன், புலிவேஷம் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.அதே சமயம்  கார்த்திக்கின் மகன் கவுதம் கடல்  என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.  மகனுக்கு உதவியாக பட வேலைகளையும் கவனித்து வந்த நிலையில்தான் கார்த்திக்குக்கு  திடீர் உடல் நலக்குறைவு எற்பட்டது.