Published:Updated:

'நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்..!' மனம் திறந்த மலையாள நடிகர் திலீப்

மலையாள நடிகர் திலீப், கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பல காரணங்களுக்காக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். தன் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை காவ்யா மாதவனைத் திருமணம்செய்து கொண்டது, நடிகை பாவனா மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு, திலீப்பும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது எனப் பல்வேறு காரணங்களுக்காக, அவர் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், Manorama online தொலைக்காட்சி ஒன்றுக்கு திலீப் அளித்துள்ள பேட்டியில், 'பாவனா மீது உடல் ரீதியான துன்புறுத்தல் நடத்தியதாக என் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால், மனரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானேன். நான் தற்கொலைசெய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். அவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பார். பேச மறுத்திருப்பார். ஆனால் அவரோ, போலீஸில் புகார் அளித்துவிட்டு, அவரது வாழ்க்கையை இரண்டு நாள்களில் தொடங்கினார். அவரின் தைரியத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், பாவனாவுடனான கருத்து வேறுபாடு குறித்தும், அவருடன் படங்களில் நடிக்காதது குறித்தும் திலீப் கூறுகையில், 'எனக்கு யாருடன் நடிக்க வசதியாக இருக்கிறதோ, அவருடன்தான் நடிக்க முடியும். பாவனாவுடன் அப்படி இல்லை என்பதால், நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர், மற்றவர்களுடன் நடிப்பதை நான் எந்த விதத்திலும் தடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு