Published:Updated:

'காற்று வெளியிடை கண்ணம்மா... தியேட்டர்ல ஆளு எங்கம்மா?' - அலறல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்

தார்மிக் லீ
'காற்று வெளியிடை கண்ணம்மா... தியேட்டர்ல ஆளு எங்கம்மா?' - அலறல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்
'காற்று வெளியிடை கண்ணம்மா... தியேட்டர்ல ஆளு எங்கம்மா?' - அலறல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்

சும்மா இருக்கிற நேரத்துல ஃபேஸ்புக் பக்கம் போய் நியூஸ் ஃபீடை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோது சிக்கியது இந்த சுவாரசியமான மேட்டர். என்னவென்றால்... 'காற்று வெளியிடை கண்ணம்மா... தியேட்டர்ல ஆளு எங்கம்மா'னு ஒரு போஸ்ட் இருந்தது. குபீர் சிரிப்போடு அனுபவம் எப்படி இருந்துச்சு பாஸ்னு அவர்கிட்டே கேட்டேன் கதறத் தொடங்கினார் சிவக்குமார் என்ற அந்த மனிதர்!

''நானும் என் ஃப்ரெண்டும் ரொம்ப போர் அடிக்கிதுன்னு மணி சார் டைரக்ட் பண்ண படமாச்சேன்னு 'காற்று வெளியிடை' படத்துக்குப் போனோம். உள்ளே போன உடனேயே எங்களுக்கு செம ஷாக். ஒட்டுமொத்த தியேட்டர்லேயும் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் இருந்தோம். எங்க ஊர் தியேட்டர்ல என்ன பிரச்னைன்னா? மினிமம் 5 பேர் இருந்தாதான் படம் ஓட்டுவாங்க. என்னடா இது மணி சார்க்கு வந்த சோதனைனு நெனச்சா 6.30 மணி ஷோக்கு 7 மணி வரைக்கும் உட்கார்ந்திருந்தோம். 3 காலேஜ் பசங்க வந்தாங்க. தெய்வம்யா நீங்கன்னு ஆப்பரேட்டரை கூப்பிட்டுப் படத்தை போடுங்கன்னு சொன்னோம். அவரும் படத்தைப் போட்டார். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல பின்னாடி 'இங்க பாருடா மணி சார் மேஜிக்கை'னு ஒரு குரல்... அப்படி என்னடா மேஜிக்கை இவன் பார்த்தான்னு ஒரு லுக் விட்டேன். இதே மாதிரி ஒரு சில சீன்களுக்கு அவன் கொடுத்த மாடுலேஷன்லேயே தெரிஞ்சிடுச்சு அவன் மணி ரத்னம் ஃபேன்னு. 

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இன்னோர் ஆளோட என்ட்ரி. யார்னு பார்த்தா ஆள் பயங்கர போதையில் இருந்தார். வீட்டுக்குப் பயந்து தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருக்கார்னு டவுட் வர அவர்கிட்டேயே கேட்டோம். 'அட ஆமாய்யா'னு சொல்லிட்டுத் தூங்க ஆரம்பிச்சுட்டார். அந்த தியேட்டர் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்?னு கேட்கிறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன். தரையில படுத்து தூங்கிக்கலாம், சிகரெட் பிடிச்சுக்கலாம், தண்ணிகூட அடிச்சுக்கலாம். என்ன தியேட்டர் ஆப்பரேட்டருக்கும் அதுல ஷேர் கரெக்டா போயிடணும். என்னடா பண்றதுனு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தப்போ, இந்த மணி ரத்னம் ஃபேன் தம்பி பக்கத்துல போய் உட்கார்ந்தா டைம் பாஸாவது ஆகும்னு பக்கத்தில் உட்கார்ந்தேன். அதே மாதிரி ஒவ்வொரு சீனுக்கும் சிலிர்த்துக்கிட்டான். அவன் சிலிர்த்தது பத்தாதுன்னு அவன் நண்பர்கள்கிட்டேயும் ஆக்ரோஷ பக்தனாகிட்டான். நேரம் போகப்போக அவனோட சவுண்டு குறைய ஆரம்பிச்சிடுச்சு. 

இன்டெர்வெல்லும் விடாமல் படம் போய்க்கிட்டே இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு தியேட்டர் ஆப்பரேட்டரும் எங்ககூட சேர்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சுட்டார். மொத்தம் ஏழு பேர். இரண்டு பேரைத் தவிர மீதம் உள்ள 5 பேரும் ஏதோ அமேஸான் காட்டுக்குள்ள போன மாதிரியே ஒரு ஃபீலிங். இதுல என்ன கொடுமைன்னா நடுவுல ரெண்டு முறை கரென்ட் கட் ஆயிடுச்சு. படம் இப்ப நல்லா இருக்கும் அப்போ நல்லா இருக்கும்ன்னு நெனச்சுக்கிட்டே படத்தைப் பார்த்தா படமே ஓவர், வீட்டுக்குக் கிளம்புங்கனு சொல்லிட்டார் மணி சார். 

இதுல என்ன காமெடின்னா படம் ஆரம்பிச்சதுல இருந்து மணி சார் ரசிகன்னுகூட சொல்ல முடியாது... வெறியன்னுதான் சொல்லணும். ஆரம்பிக்கும்போது இவன் வெச்சு செஞ்ச அந்த ரெண்டு பேரும் படம் முடிஞ்சதுக்கு அப்பறம் இவனை வெச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! உனக்கு இது தேவைதான் மாப்ளனு நெனச்சுக்கிட்டே அவனைப் பார்த்துட்டு இருந்தேன். அவனும் கடைசில உண்மையை ஒப்புக்கிட்டான். 'மணி சார் அடுத்த படம் வரட்டும்டா... அப்போ இருக்கு உங்களுக்கு?னு சொன்னான். மறுபடியும் மொதல்ல இருந்தான்னு நானும் என் நண்பனும் வீட்டுக்குப் பறந்துட்டோம். 

- தார்மிக் லீ